Bharathi Kannamma: 8 வருடத்திற்குப் பிறகு கண்ணம்மா செய்த விஷயம், மனம் மகிழ்ந்த மாமியார்!

Bharathi Kannamma: 8 வருடத்திற்குப் பிறகு கண்ணம்மா செய்த விஷயம், மனம் மகிழ்ந்த மாமியார்!

பாரதி கண்ணம்மா

ஹேமா யாராக இருக்கும் என தனக்குள் சிந்தித்தவள், இது பாரதிக்கும் வெண்பாவுக்கும் பிறந்த குழந்தை தான் என நினைத்துக் கொள்கிறாள்.

  • Share this:
    விஜய் டிவி-யில் ஒளிபரபாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியல் நாளுக்கு நாள் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது. அதுவும் வீட்டை விட்டு வெளியேறிய கண்ணம்மா 8 ஆண்டுகளுக்குப் பிறகு ‘சமையல் ஆண்டியாக’ மாமியார் வீட்டுக்கு திரும்பியிருக்கிறார்.

    வெண்பாவின் சூழ்ச்சியால் பாரதியும், கர்ப்பமாக இருந்த கண்ணம்மாவும் பிரிந்து 8 ஆண்டுகள் ஆகிவிட்டது. இதற்கிடையே தனக்கு இரட்டை குழந்தை பிறந்த விபரம், மயக்கத்தில் இருந்த கண்ணம்மாவுக்கு தெரியாது. அதனால் கறுப்பாக பிறந்த குழந்தையை மாமியார் செளந்தர்யா, தூக்கிச் சென்று வளர்த்து வருகிறார். தன் மீது பாசமாக இருக்கும் ஹேமா, தனக்கு பிறந்த குழந்தை தான் என பாரதிக்கு இன்னும் தெரியாது.

    Bharathi Kannamma Lakshmi: பாரதி கண்ணம்மா சீரியல் குழந்தை லட்சுமி யார் தெரியுமா?

    இதற்கிடையே ஹேமா படிக்கும் பள்ளியின் சமையல் காண்ட்ராக்ட் கண்ணம்மாவுக்கு கிடைக்கிறது. தன் அம்மா எனத் தெரியாமல், ஆண்டி... ஆண்டி... என கண்ணம்மாவுடன் நெருக்கமாகிறாள் ஹேமா. இதற்கிடையே பாரதி வீட்டில் ஸ்வீட் செய்வது குறித்த பேச்சு எழ, கண்ணம்மாவை பரிந்துரைக்கிறாள்.

    சரி வர சொல்லு பாப்போம் என்ற ரீதியில் மாமியார் செளந்தர்யா சொல்ல, அடுத்த நாள் வீட்டுக்கு வந்து நிற்கிறாள் கண்ணம்மா. இதை அவளும் சற்றும் கூட எதிர்பார்க்கவில்லை. ஹேமாவின் மனது கஷ்டப்பட்டு விடக்கூடாது என்பதற்காக, கொஞ்சம் பொறுத்துக் கொள்வோம் என அங்கு ஸ்வீட் செய்ய தயாராகிறாள் கண்ணம்மா.

    Vijay TV Jacqueline: விஜய் டிவி ஜாக்குலின் வேற லெவல் படங்கள்!

    ஹேமா முன்பு கண்ணம்மாவை ஏற்கனவே தெரியாதவர்கள் போல வீட்டிலிருப்பவர்கள் காட்டிக் கொள்கிறார்கள். அதிரசம், லட்டு, குலோப் ஜாமூன் என பலகாரங்களை செய்கிறாள் கண்ணம்மா. தங்கை அஞ்சலி கர்ப்பமாக இருக்கும் விஷயத்தால், சந்தோஷப்படும் கண்ணம்மா, அவளை பத்திரமாக இருக்க சொல்கிறாள். அஞ்சலியுடன் இணைந்து அண்ணி காலில் விழுந்து ஆசி வாங்குகிறான் அகில். கண்ணம்மாவுக்கு பாரதி மீது தான் வெறுப்பே தவிர, குடும்பத்தினர் மீது அல்ல. எல்லாம் சரி தான், ஹேமா யாராக இருக்கும் என தனக்குள் சிந்தித்தவள், இது பாரதிக்கும் வெண்பாவுக்கும் பிறந்த குழந்தை தான் என நினைத்துக் கொள்கிறாள்.

    இந்நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் ப்ரோமோவில் மாமியார் செளந்தர்யாவைப் பார்த்து, வாய் நிறைய அத்த... எனக் கூப்பிடுகிறாள். அதைக் கேட்டு பூரித்துப் போன மாமியார் கண்களில் ஆனந்த கண்ணீர் பெருக்கெடுக்கிறது. ’இன்னும் ஒரு தடவை கூப்பிடும்மா’ எனக் கேட்க, ‘அத்த’ என மீண்டும் கூப்பிடுகிறாள் கண்ணம்மா.’உன் வாயால அத்தன்னு கூப்ட்ட, அத கேட்ட என் மனசு நெறைஞ்சு போச்சும்மா’ என்கிறார் மாமியார் செளந்தர்யா.

    பாரதி கண்ணம்மாவில் அடுத்து என்ன நடக்கும்? பொறுத்திருந்து பார்ப்போம்...



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: