• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Bharathi Kannamma: ட்விஸ்ட் மேல ட்விஸ்ட் - கண்ணம்மாவை அழைத்து வர செல்லும் பாரதி!

Bharathi Kannamma: ட்விஸ்ட் மேல ட்விஸ்ட் - கண்ணம்மாவை அழைத்து வர செல்லும் பாரதி!

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா

தீவிர சிகிச்சைப் பிரிவில் ஹேமா அனுமதிக்கப்பட்டிருக்க, வெளியில் பாரதி, செளந்தர்யா, வேணு, அஞ்சலி என அனைவரும் அழுதுக் கொண்டிருக்கிறார்கள்.

  • Share this:
    கண்ணம்மாவை தேடி பாரதியே செல்லும் அற்புதம் நிகழவிருக்கிறது விஜய் டிவி0யில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலில்.

    கண்ணம்மாவை காதலித்து திருமணம் செய்துக் கொள்கிறான் பாரதி. அவர்கள் வாழ்க்கையில் விளையாடி இருவரையும் பிரித்து விடுகிறாள் வெண்பா. கண்ணம்மாவுக்கு பிறந்த இரட்டை குழந்தையில் கறுப்பாக பிரந்த ஹேமாவை மாமியார் செளந்தர்யா தூக்கிச் சென்று வளர்த்து வருகிறார். இன்னொரு குழந்தை லட்சுமி கண்ணம்மாவிடம் வளர்கிறது. தன் மகள் என்று தெரியாமலேயே ஹேமா மீது உயிராக இருக்கிறான் பாரதி. தன் பள்ளியில் சமையல் செய்யும் கண்ணம்மா தனது அம்மா தான் எனத் தெரியாமலேயே அவளிடம் அன்பாக இருக்கிறாள் ஹேமா.

    கண்ணம்மாவும் ஹேமாவும் நெருக்கமாக இருப்பதைப் பார்த்த பாரதி, அவளை பள்ளியில் இருந்து நிறுத்தி, அமெரிக்கா அழைத்துச் செல்கிறான். குடும்பத்தினர் எவ்வளவு சொல்லியும் கேட்பதாக இல்லை. பாட்டியையும், சமையல் அம்மாவையும் பிரிந்து அமெரிக்கா செல்வதை நினைத்து வருத்தத்தில் இருக்கிறாள் ஹேமா. காய்ச்சல் வந்து குறைந்த நிலையில் ஏர்போர்ட்டுக்கு அப்பா பாரதியுடன் செல்கிறாள் ஹேமா, கூடவே பாரதியின் தோழி மருத்துவர் பிரியாவும் செல்கிறார்.



    காரில் போய்க்கொண்டிருக்கையில் திடீரென ஹேமாவுக்கு தலைசுற்றி வலிப்பு ஏற்படுகிறது. இதைப் பார்த்த குழந்தைகள் மருத்துவர் பிரியா, ‘பல்ஸ் குறையுது’ உடனே மருத்துவமனைக்கு கொண்டு செல்லவில்லை என்றால், கோமா நிலைக்கு போக வாய்ப்புள்ளது என்கிறார். பின்னால் காரில் வந்த செளந்தர்யா மிகுந்த கோபத்துடன், ‘என் பேத்திக்கு மட்டும் எதாச்சும் ஆச்சுன்னா, அப்றம் நான் உன்ன சும்மா விட மாட்டேன்’ என்று பாரதியை மிரட்டியவாறு, ஹேமாவை தன் காரில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    தீவிர சிகிச்சைப் பிரிவில் ஹேமா அனுமதிக்கப்பட்டிருக்க, வெளியில் பாரதி, செளந்தர்யா, வேணு, அஞ்சலி என அனைவரும் அழுதுக் கொண்டிருக்கிறார்கள். பாரதி மீது மிகுந்த கோபத்தில் இருக்கிறார் செளந்தர்யா. அப்போது வெளியில் வரும் மருத்துவர் பிரியா, ’ஹேமாவ காப்பாத்த ஒரே ஒரு வழி தான் இருக்கு’ என்கிறார். எதுவா இருந்தாலும் சொல்லு என பாரதி சொல்ல, ‘போய் அந்த சமையல் அம்மாவை கூட்டிட்டு வா’ என்கிறார் மருத்துவர். அதற்கு பாரதி, செளந்தர்யாவை பார்க்க, ‘என்னால எல்லாம் போக முடியாது. போய் நீயே கூட்டிட்டு வா’ என்கிறார். அந்த இடத்தை விட்டு வெளியேறி, கண்ணம்மாவை அழைத்து வர செல்கிறான் பாரதி.

    கண்ணம்மாவை அழைத்துச் செல்ல பாரதிக்கு லட்சுமி குறித்த விஷயம் தெரிய வருமா? கண்ணம்மாவுக்கு ஹேமா தன் குழந்தை தான் என்ற உண்மை எப்போது தெரிய வரும்? பொறுத்திருந்து பார்ப்போம்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: