Bharathi Kannamma: பாரதியை டிஎன்ஏ எடுக்கச் சொல்லும் செளந்தர்யா - விறுவிறுப்பான கட்டத்தில் பாரதி கண்ணம்மா!

பாரதி கண்ணம்மா சீரியல்

ஹேமாவை அழைத்துக் கொண்டு ஏர்போர்ட்டுக்கு கிளம்புகிறான் பாரதி.

  • Share this:
    விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் விறு விறுப்பாக போய்க்கொண்டிருக்கும் நிலையில், பாரதியை டி.என்.ஏ டெஸ்ட் எடுக்கச் சொல்கிறார் செளந்தர்யா.

    கண்ணம்மாவை காதலித்து திருமணம் செய்துக் கொள்கிறான் பாரதி. அவர்கள் வாழ்க்கையில் விளையாடி இருவரையும் பிரித்து விடுகிறாள் வெண்பா. கண்ணம்மாவுக்கு பிறந்த இரட்டை குழந்தையில் கறுப்பாக பிரந்த ஹேமாவை மாமியார் செளந்தர்யா தூக்கிச் சென்று வளர்த்து வருகிறார். இன்னொரு குழந்தை லட்சுமி கண்ணம்மாவிடம் வளர்கிறது. தன் மகள் என்று தெரியாமலேயே ஹேமா மீது உயிராக இருக்கிறான் பாரதி. தன் பள்ளியில் சமையல் செய்யும் கண்ணம்மா தனது அம்மா தான் எனத் தெரியாமலேயே அவளிடம் அன்பாக இருக்கிறாள் ஹேமா.

    கண்ணம்மாவும் ஹேமாவும் நெருக்கமாக இருப்பதைப் பார்த்த பாரதி, அவளை பள்ளியில் இருந்து நிறுத்தி, அமெரிக்கா அழைத்துச் செல்லவிருக்கிறான். இதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என பாரதியின் அம்மா செளந்தர்யா தீவிரமாக இருக்கிறார். சமையல் அம்மாவை விட்டு பிரியும் ஏக்கத்தில் ஹேமாவுக்கு காய்ச்சல் வந்து விடுகிறது. அவளுக்கு பாரதியின் தோழி பிரியா சிகிச்சையளிக்கிறாள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.



    கண்ணம்மா சமைத்த சாப்பாட்டை சாப்பிட்டு தான் ஹேமாவுக்கு உடம்பு சரியில்லாமல் போய்விட்டதாக செளந்தர்யாவிடம் சண்டை போடுகிறான். பாரதி ஹேமாவை அழைத்துக் கொண்டு அமெரிக்கா போகக் கூடாது என்றும், மீறி போனால், குழந்தையை கடத்திக் கொண்டு செல்வதாக பாரதி மீது போலீஸில் கம்ப்ளைண்ட் கெடுப்பேன் என்றும், அதற்கு வீட்டிலிருப்பவர்கள் சாட்சி சொல்வார்கள் என்றும் கூறுகிறார் செளந்தர்யா. அதோடு, “மீறி ஹேமா உன் பொண்ணுன்னு சொன்னேனா, அதை நிரூபிக்கிறதுக்கு டிஎன்ஏ டெஸ்ட் எடுக்கச் சொல்வேன். ஹேமாவுக்கு நீ அவ அப்பா இல்லன்னு தெரிய வந்தா, நீ உடைஞ்சு சுக்கு நூறாகிடுவ” என்கிறார் செளந்தர்யா.

    முதலில் கலக்கமடைந்த பாரதி பிறகு வாய் விட்டு சிரிக்கிறான். ‘நான் உங்க பையன் மா, நீங் எந்தளவுக்கு வேணும்ன்னாலும் போவீங்கன்னு எனக்கு தெரியும்’ என்றவாறு ஒரு மருந்தை காட்டி, ‘இது என்ன தெரியுமா, இதை எடுத்துக்கிட்டா, உடம்போட ஒவ்வொரு உறுப்பும் செயலிழக்கும், கருணை கொலை செய்ற மாதிரி’ என்கிறான். இதைக் கேட்ட செளந்தர்யா அதிர்ச்சியடைகிறார்.

    பின்னர் ஹேமாவை அழைத்துக் கொண்டு ஏர்போர்ட்டுக்கு கிளம்புகிறான் பாரதி. பாட்டி செளந்தர்யா, தாத்தா வேணு, சித்தி அஞ்சலி அனைவரிடமும் அழுதுக் கொண்டே விடை பெறுகிறாள். வீட்டிலிருக்கும் அனைவரும் அழுதுக் கொண்டே இருக்கிறார்கள். பாரதி அமெரிக்கா செல்வானா அல்லது ஏர்போர்ட்டில் ஏதேனும் ட்விஸ்ட் இருக்குமா? பொறுத்திருந்து பார்ப்போம்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: