Home /News /entertainment /

பாரதியைப் பற்றிய உண்மையை குழந்தையிடம் சொல்லத் தயாராகும் கண்ணம்மா...

பாரதியைப் பற்றிய உண்மையை குழந்தையிடம் சொல்லத் தயாராகும் கண்ணம்மா...

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா

ஆட்டோ ஓட்டுநர் குமாரின் தங்கைக்கு நிச்சயதார்த்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்படுகிறது. அதில் அவரின் உடன் பிறவாத சகோதிரியாக கண்ணம்மாவும் கலந்து கொள்கிறாள்.

  விஜய் டிவியின் நம்பர் ஒன் டிஆர்பி சீரியல் ஆன பாரதி கண்ணம்மாவின் புதிய ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதை பார்க்கும் போது, பல வாரங்களாக, இன்னும் சொல்லப்போனால் பல மாதங்களாக "ஜவ்வு" போல இழுத்து அடிக்கும் ஒரு மேட்டர் இந்த வாரம் முடிந்து விடும் என்பது போல் தெரிகிறது.

  அதாவது கண்ணம்மாவின் கணவர், லக்ஷ்மியின் அப்பா யார் என்கிற உண்மை அடுத்த வார எபிசோட்களில் அம்பலப்படுத்தப்படும் என்பது போல் தெரிகிறது. இன்னும் சுவாரசியமான விடயம் என்னவென்றால், இந்த உண்மையை வெளிப்படுத்தப்போவது கண்ணம்மாவின் மாமியாரோ, டிஏன்.ஏ சான்றிதழோ அல்லது நீதி காத்த மாரியம்மனோ அல்ல - நம்ம கண்ணம்மாவே தான்!

  ஆட்டோ ஓட்டுநர் குமாரின் தங்கைக்கு நிச்சயதார்த்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்படுகிறது. அதில் அவரின் உடன் பிறவாத சகோதிரியாக கண்ணம்மாவும் கலந்து கொள்கிறாள். பெண் வீட்டாரும் மாப்பிளை வீட்டாரும் கலந்து பேசிகையில், "குமார் அண்ணனால் அதிகமாக செலவு செய்ய முடியாது, நீங்க எத்தனை பவுன் எதிர்பாக்குறீங்க? என்று கண்ணம்மா கேட்க, பெண் வீட்டாரை சேர்ந்த ஒருவர், "நீ யாரு?" என்று கேட்க சபையில் சலசலப்பு தொடங்கியது.

  "இதுபோன்ற மங்களகரமான நிகழ்வில், குடும்பத்துடன் மகிழ்ச்சியோடு வாழும் ஒரு பெண் தான் எல்லாவற்றையும் முன் நின்று செய்ய வேண்டும். இப்படி மொட்டை மரமாக, தனியாக வந்து நின்றால் என்ன அர்த்தம்?" என்று மாப்பிளையின் அம்மா கூற, கண்ணம்மா தலைகுனிய, " என் அம்மாவை பற்றி தப்பா பேசாதீங்க!" என்று லக்ஷ்மி கொந்தளித்து எழுகிறாள்.

  "தப்பு செய்யவில்லை என்றால், ஏன் உன் அப்பா உன் அம்மாவை விட்டுட்டு சென்றார்" என்று மாப்பிள்ளையின் அம்மா கேட்க, இம்முறைஆட்டோ ஓட்டுநர் குமார் கொந்தளித்து எழுகிறார்.  மாற்றி மாற்றி பேச்சு வளர்ந்து கொண்டே போக, கண்ணம்மா தொடர்ந்து அவமானப்படுத்தப்படுகிறாள். ஒருகட்டத்தில் நிச்சயதார்த்தமே நின்று போகிறது. அப்போது தான் கண்ணம்மா பேசவே தொடங்குகிறாள், "இன்னும் 4 நாட்களில் என் பிறந்த நாள் நிகழ்ச்சி நடக்க உள்ளது, அப்போது யார் லக்ஷ்மியின் அப்பா என்பதை நான் சொல்கிறேன், வேண்டுமென்றால் வந்து பார்த்து கொள்ளுங்கள்" என்கிறாள் கண்ணம்மா.

  வனிதா விஜயகுமார், தாமரை... இவர்களுடன் ஒரு முன்னாள் காதல் ஜோடியும் பிக் பாஸ் அல்டிமேட்டில் எண்ட்ரி!

  "நீ யாரு கூட வாழ்ந்தா எங்களுக்கு என்ன?" என்று கூறி மாப்பிளை வீட்டார் அனைவரும் வீட்டை விட்டு வெளியேறுகின்றனர். பிறகு "அப்பா வருகிறாரா" என்று கேட்கும் லக்ஷ்மியிடம் "ஆமாம்" என்று பதில் அளிக்கிறாள் கண்ணம்மா.

  பிறந்தது முதல், "இப்போ வருவார், அப்போ வருவார், உன் அப்பா துபாயில் இருக்கிறார், ஆமாம் அவர் நம்மை பார்க்க வரவே மாட்டார்" என்றெல்லாம் கூறி வளர்க்கப்பட்ட லக்ஷ்மிக்காக, அவளின் சந்தோஷத்திற்காக, இனிமேலும் அவளை ஏமாற்ற கூடாது என்பதற்காக கண்ணம்மா சில உண்மைகளை வெளிப்படுத்தலாம் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கலாம்.

  விஜய் டிவி நிகழ்ச்சியிலிருந்து விலகிய பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவா... என்ன காரணம்?

  இருந்தாலும், "இதை விட பெரிய பெரிய சம்பவமெல்லாம் நடந்து இருக்கு, அப்போ கூட டாக்டர் பாரதி தான் உன் அப்பானு கண்ணம்மா சொன்னது இல்ல, இந்த சப்ப மேட்டருக்குலாமா உண்மைய உடைப்பா?" என்கிற சலிப்பும் ஏற்படலாம். இதற்கான பதில், அடுத்தடுத்த எபிசோட்களின் வழியாக நமக்கு கிடைக்கும்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published:

  Tags: TV Serial

  அடுத்த செய்தி