• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • கிட்டத்தட்ட அஞ்சலியும் கண்ணம்மாவும் மாட்ட போவது உறுதி... ட்விஸ்ட் கொடுத்த பாரதி!

கிட்டத்தட்ட அஞ்சலியும் கண்ணம்மாவும் மாட்ட போவது உறுதி... ட்விஸ்ட் கொடுத்த பாரதி!

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா

ஹேமா கண்ணம்மா வீட்டில் இருப்பது பாரதிக்கு தெரிந்தால் அஞ்சலி மாட்டிக் கொள்வாள்.

  • Share this:
    பாரதி கண்ணம்மா சீரியலில் பாரதி கொடுக்கும் மிகப் பெரிய ட்விஸ்டால் அடுத்த எபிசோடு குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது.

    விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியல் இல்லத்தரசிகளின் ஃபேவரிட் லிஸ்டில் முதலிடத்தில் இருக்கிறது. . கண்ணம்மாவை காதலித்து திருமணம் செய்துக் கொள்கிறான் பாரதி. அவர்கள் வாழ்க்கையில் விளையாடி இருவரையும் பிரித்து விடுகிறாள் வெண்பா. கண்ணம்மாவுக்கு பிறந்த இரட்டை குழந்தையில் , மாமியார் செளந்தர்யா ஒரு குழந்தையை தூக்கிச் சென்று வளர்க்கிறார். இன்னொரு குழந்தை லட்சுமி கண்ணம்மாவிடம் வளர்கிறாள். மகள் என்று தெரியாமலேயே ஹேமா மீது உயிராக இருக்கிறான் பாரதி. தன் பள்ளியில் சமையல் செய்யும் கண்ணம்மா தனது அம்மா தான் எனத் தெரியாமலேயே அவளிடம் அன்பாக இருக்கிறாள் ஹேமா. கதை இப்படி சென்றுக் கொண்டிருந்த சமீபத்தில் கண்ணம்மாவுக்கு இரட்டை குழந்தை உண்மை தெரிந்தது. அதுமட்டுமில்லை, அந்த குழந்தை ஹேமா என்ற உண்மையும் கண்ணம்மாவுக்கு சவுந்தர்யா மூலம் தெரிய வர, ஹேமாவை கேட்டு கண்ணம்மா பிரச்சனை செய்து வருகிறாள்.

    4 நாட்கள் கண்ணம்மாவிடம் டைம் கேட்டு இருக்கும் சவுந்தர்யா இதுக் குறித்து பெரும் கவலையில் இருக்கிறார். இந்த நேரத்தில் தான் அஞ்சலி ஹேமாவை கண்ணம்மாவுக்கு வீட்டுக்கு அழைத்து சென்று சர்பிரைஸ் செய்கிறாள். அதுமட்டுமில்லை 2 நாட்கள் அங்கு தங்கவும் ஹேமாவும் அஞ்சலி பிளான் செய்கிறார்கள். ஆனால், இந்த விஷயம் பாரதிக்கு தெரியாது. அஞ்சலி தன்னுடைய வீட்டுக்கு ஹேமாவை அழைத்து செல்வதாக பொய் சொல்லிவிட்டு கண்ணம்மா வீட்டுக்கு சென்று இருக்கிறாள். இன்றைய எபிசோடி கண்ணம்மா வீட்டில் இருக்கும் அஞ்சலிக்கு வெண்பா பொய் சொன்ன விஷயமும் தெரிய வருகிறது. பாரதி எழுதி கொடுத்ததாக வெண்பா கொடுத்த மாத்திரை சீட்டை பார்த்த கண்ணம்மா, இது பாரதியின் கையெழுத்து இல்லை என்ற உண்மையை அஞ்சலிக்கு சொல்கிறாள். வெண்பா தன்னிடம் பொய் சொல்லி விட்டதை கண்டுப்பிடித்த அஞ்சலி, உண்மையை வெளியில் சொல்ல முடியாமல் தவிக்கிறாள். உடம்புக்கு செட் ஆகாத இந்த மாத்திரையை இனி சாப்பிட வேண்டாம் என்று கண்ணம்மா தன் கையாலே மாத்திரை சீட்டை கிழித்து எறிகிறாள்.

    இந்த பக்கம் சவுந்தர்யாவும் வேணும் எப்படி கண்ணம்மாவை சமாளிப்பது என பேசிக் கொண்டிருக்கின்றனர். கண்ணம்மா வீட்டில் இருக்கும் ஹேமா செம்ம ஜாலியாக விளையாடி கொண்டிருக்கிறாள். அஞ்சலியும் கண்ணம்மாவிடம் மனம் விட்டு பேசுகிறாள்.ஹேமா பற்றிய உண்மை இப்போது தான் தனக்கே தெரிந்ததாக அஞ்சலி கண்ணம்மாவிடம் சொல்லி ஆச்சரியப்படுகிறாள். இந்த பக்கம் பாரதி ஹேமாவை நினைத்து தூக்கம் வராமல் தவிக்கிறான். ஹேமா மீது உயிராக இருக்கும் பாரதிக்கு ஒருநாள் ஹேமாவை பார்க்காமல் இருப்பதே வருத்தமாக இருக்கிறது. எந்த பக்கம் திரும்பினாமும் ஹேமா குரல் கேட்க, மறுநாள் ஹேமாவை பார்க்க அஞ்சலி வீட்டுக்கு செல்ல முடிவு எடுக்கிறான். அதோடு எபிசோடு முடிகிறது. பாரதி மட்டும் அஞ்சலி வீட்டுக்கு போனால் மொத்த பிளானும் அவ்வளவு தான். ஹேமா கண்ணம்மா வீட்டில் இருப்பது பாரதிக்கு தெரிந்தால் அஞ்சலி மாட்டிக் கொள்வாள். அடுத்து என்ன நடக்கும் என்பது வரும் திங்கட்கிழமை தான் தெரியும்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: