Home /News /entertainment /

பாரதி கண்ணம்மா அருண் பற்றி பரவும் அந்த தகவல் உண்மையா?

பாரதி கண்ணம்மா அருண் பற்றி பரவும் அந்த தகவல் உண்மையா?

பாரதி கண்ணம்மா அருண்

பாரதி கண்ணம்மா அருண்

பாரதி கண்ணம்மா அருண் ’மேயாத மான்’ திரைப்படத்தில் வைபவ் நண்பராகவும் நடித்து இருக்கிறார்.

    பாரதி கண்ணம்மா சீரியல் புகழ் அருண் பிரசாத்துக்கு பிரபல சின்னத்திரை நடிகையுடன் கூடிய விரைவில் திருமணம் என்ற தகவல் இணையத்தில் பரவி வருகிறது. அதுமட்டுமில்லை சில தினங்களுக்கு முன்பு இருவருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த தகவலை இருவரும் இதுவரை உறுதி செய்யவில்லை.

    விஜய் டிவி ஒளிப்பரப்பாகும் சீரியல்களில் டாப் சீரியல் என்றால் அது பாரதி கண்ணம்மா.இதில் லீட் ரோலில் டாக்டர் பாரதியாக நடிப்பவர் நடிகர் அருண் பிரசாத். இவருக்கு பெண் ரசிகைகள் மத்தியில் மிகப் பெரிய வரவேற்பு இருக்கிறது. சின்னத்திரையின் எக்ஸ்ப்ரஷன் கிங்காக கொண்டாடப்படும் அருண், சீரியல் நடிகர்களில் அதிக சம்பளம் வாங்க கூடிய கதாநாயகர்கள் லிஸ்டில் இருக்கிறார். கடின உழைப்புக்கு பிறகு இந்த இடத்தை அடைந்திருக்கும் அருண் இதற்கு முன்பு  மேயாத மான் திரைப்படத்தில் வைபவ் நண்பராகவும் நடித்து இருக்கிறார்.

    ஆஸ்பிட்டலில் கோபி.. பதறி ஓடி வரும் பாக்கியா -ராதிகா! பாக்கியலட்சுமியில் அடுத்து நடக்க போவது என்ன?

    தொடர்ந்து சீரியலில் பிஸியாக நடித்து வரும் அருணுக்கும், ராஜா ராணி சிரியல் புகழ் விஜே அர்ச்சனாவுக்கும் கூடிய விரைவில் திருமணம் என்ற தகவல் இணையத்தில் பரவி வருகிறது. இதற்கு முன்பு இருவருக்கும் இடையில் காதல் என்று கிசுகிசுக்கப்பட்டது. அதற்கு காரணம், சமீபத்தில் நடந்து முடிந்த விஜய் டெலிவிஷன் அவார்டு நிகழ்ச்சியில் அர்ச்சனாவுக்கு சிறந்த வில்லிக்கான விருது வழங்கப்பட்டது.



    விருது வாங்க மேடை ஏறிய அர்ச்சனாவை ஈரோடு மகேஷ்,  ஆங்கர் அர்ச்சனா பயங்கரமாக கலாய்த்தனர். அதுவும் குறிப்பாக டாக்டர், DNA டெஸ்ட் என அர்ச்சனாவை வம்பு இழுக்க, அதை பார்த்து அருண் பிரசாத் வெட்கப்பட்ட இந்த வீடியோ இணையத்தில் பயங்கர வைரலானது. அதனைத் தொடர்ந்து அர்ச்சனாவின் தங்கை பிறந்த நாள் கொண்டாட்டத்தில் அருண் பிரசாத்தும் இடம் பெற்று இருந்தார். இந்த வீடியோவும் இணையத்தில் லீக் ஆனது. இந்த நிகழ்வுகளை வைத்து இருவரும் காதலிப்பதாக செய்திகள் வெளியாகின.

    அபி - சக்தி கல்யாணம் நின்றதா? தென்றல் வந்து என்னை தொடும் சீரியல் ட்விஸ்ட்!

    இதற்கு இருவரும் எந்தவித மறுப்பும் தெரிவிக்கவில்லை. இந்நிலையில், தற்போது அர்ச்சனாவுக்கும் அருண் பிரசாத்துக்கும் நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதாகவும் கூடிய விரைவில் கல்யாணம் நடக்கவுள்ளதாகவும் இணையத்தில் செய்திகள் வெளியகியுள்ளன. இதுக் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை. அர்ச்சனா அல்லது அருண் இந்த தகவலுக்கு பதில் அளித்தால் மட்டும் ரசிகர்களுக்கு இதுப்பற்றிய உண்மை தெரிய வரும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: Bharathi Kannama, TV Serial, Vijay tv

    அடுத்த செய்தி