விஜய் தொலைக்காட்சியில் பாரதி கண்ணம்மா சீரியல் 2019 ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாக தொடங்கியது. இந்த சீரியலில் பாரதியாக அருணும், கண்ணம்மாவாக ரோஷினியும் நடித்தனர். ரோஷினி சில காரணங்களால் சீரியலை விட்டு விலகினார்.
ரோஷினி சீரியலை விட்டு விலகியவுடன் சினிமாவில் என்ட்ரி கொடுப்பார் என பலரும் எதிர்பார்த்த நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டார். அதன் பின்பு கண்ணம்மா கதாபாத்திரத்தில் மாடல் துறையை சேர்ந்த வினுஷா நடிக்க தொடங்கினார்.இந்த சீரியலுக்கு தற்போது ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
பாரதியின் சீரியல் ஜோடி கண்ணம்மா தான்.ஆனால் நிஜத்திலும் பாரதிக்கு ஒரு ஜோடி இருக்கிறது. ஆம் ராஜா ராணி சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடிக்கும் அர்ச்சனா தான்.அருண், அர்ச்சனா ஜோடி இதுவரை தாங்கள் காதலிப்பதாக ரசிகர்களிடம் தெரிவிக்கவில்லை.
சீரியல் வட்டாரங்களில் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்துவிட்டது, விரைவில் திருமணம் செய்துக்கொள்ள போகிறார்கள் என்ற செய்தியும் பரவி வருகிறது. இந்நிலையில் இருவரும் காதலிப்பதை உறுதிப்படுத்தும் வகையில் புகைப்படம் ஒன்று வெளியாகிவுள்ளது.அதில் அர்ச்சனா, அருண் மற்றும் ரித்திகாவும் உடனிருக்கிறார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
சித்து ஸ்ரேயா, ஆல்யா மானசா சஞ்சீவ் ஜோடி வரிசையில் விரைவில் அருண், அர்ச்சனாவும் இணைய வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். ஆனால் இருவரும் தாங்கள் காதலிப்பது குறித்து எந்த ஒரு தகவலும் இதுவரை வெளியிடவில்லை.
Published by:Tamilmalar Natarajan
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.