Home /News /entertainment /

’சில்க் சேலையில் சிலிர்க்க வைக்கும் கண்ணம்மா’ ரோஷ்னியின் லேட்டஸ்ட் வீடியோ!

’சில்க் சேலையில் சிலிர்க்க வைக்கும் கண்ணம்மா’ ரோஷ்னியின் லேட்டஸ்ட் வீடியோ!

ரோஷ்னி

ரோஷ்னி

மார்டன் டிரஸ், சேலை என விதவிதமாக அவர் பதிவேற்றும் ஒவ்வொரு போஸ்டும், லைக்குகளை குவிக்கவில்லை என்றால் தான் ஆச்சர்யம்.

பாரதி கண்ணம்மாவில் நடிக்கும் ரோஷினி ஹிரிப்பிரியன், லேட்டஸ்டாக இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ள வீடியோவில் சில்க் சேலையில் ரசிகர்களை சிலர்க்க வைத்துள்ளார்.

தமிழ் சீரியல்களில் டி.ஆர்.பியில் டாப் ரேட்டிங்கில் இருக்கும் சீரியல் பாரதி கண்ணம்மா. விஜய் டீவியில் ஒளிபரப்பாகும் இந்த சீரியலுக்கு தனி ரசிகர் பட்டாளமே உலகம் முழுவதும் இருக்கிறது. இந்த சீரியலைப் பார்க்கும் ரசிகர்கள், கண்ணம்மாவின் ஆக்டிங்கிற்கு மயங்காமல் இருக்க முடியாது. அந்தளவுக்கு எதார்த்தமான ஆக்டிங்கால் கண்ணம்மா கதாப்பாத்திரத்துக்கு உயிர் கொடுத்து வருகிறார் ரோஷினி ஹரிப்பிரியன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கடந்த லாக் டவுனில் வீட்டில் இருந்த பலரும் பாரதி கண்ணாம்மா சீரியலுக்கு ரசிகர்களாக இருந்தனர். கண்ணம்மாவை வெறுத்து ஒதுக்கிய பாரதியை சமூக வலைதளங்களில் திட்டித் தீர்த்தனர். அதேநேரத்தில், பாரதி பிரிந்து சென்ற கண்ணம்மா, தொடர்ந்து நடந்து சென்று கொண்டே இருப்பதுபோல் காட்சிகள் இருந்ததால், ஒருகட்டத்தில் மீம்களில் இடம்பெறத் தொடங்கினார் கண்ணம்மா. இதனால், சீரியலுக்கு மட்டுமல்லாமல், ரோஷினி ஹிரிப்பிரியனுக்கு புகழ்வெளிச்சம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உச்சத்துக்கு சென்றது. 
View this post on Instagram

 

A post shared by Roshni Haripriyan (@roshniharipriyan)


அப்போது முதல் சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ரோஷினி ஹிரிப்பிரியன், புகைப்படங்களை வரிசையாக அப்லோடு செய்து வருகிறார். மார்டன் டிரஸ், சேலை என விதவிதமாக அவர் பதிவேற்றும் ஒவ்வொரு போஸ்டும், லைக்குகளை குவிக்கவில்லை என்றால் தான் ஆச்சர்யம். அப்படியான வரவேற்பு, அவருக்கு இன்ஸ்டாவில் கிடைத்துக் கொண்டு இருக்கிறது. சில சமயங்களில் கிளாமரிலும் அசத்துவார். அந்தவகையில் தற்போது ஒரு வீடியோவை பதிவேற்றி, ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளார்.

Also read... கணவருடன் சேர்ந்து மாடர்ன் டிரெஸ்ஸில் கலக்கும் குக் வித் கோமாளி புகழ் நடிகை தீபா!

அந்த வீடியோவில் சில்க் சேலையில் வரும் ரோஷ்னி, சேலை முந்தாணியைக் காற்றில் பறக்கவிட்டு, சேலையில் அலையை ஏற்படுத்துகிறார். அழகாகவும், கியூட்டாகவும் இருக்கும் அந்த வீடியோவை ரசிகர்கள் ஆயிரக்கணக்கானோர் ரசித்து வருகின்றனர். சீரியலில் குடும்ப குத்துவிளக்காக இருந்தாலும், இன்ஸ்டாவில் எப்போதும் டிரெண்டிங்கிலேயே இருக்கிறார். சீரியலில் இருக்கும் கண்ணம்மாவை, ரியல் ரோஷ்ணியுடன் ஒப்பிட்டு பார்க்கவே முடியாது. 
View this post on Instagram

 

A post shared by Roshni Haripriyan (@roshniharipriyan)


சாதுவாக இருக்கும் கண்ணம்மா, குடும்பத்தின் மீதும், கணவன் குழந்தைகள் மீதும் அளப்பரிய அன்பை பொழியும் வெள்ளந்தியாக இருப்பாள். புடவையைத் தவிர வேறு உடையில் கண்ணம்மாவைப் பார்க்க முடியாது. ஆனால், ரியல் ரோஷ்ணி புகைப்படத்துக்கு கொடுக்கும் லுக்கிலும், வீடியோ பதிவிலும் ஸ்டைலில் தெறிக்கவிடுகிறார். அதேநேரத்தில் பாரதி கண்ணம்மா சீரியலில் லேட்டஸ்ட் எபிசோடுகளிலும் கண்ணம்மா, தனியாக மிளிர்கிறார்.

பாரதி, தன் குழந்தை பாதுகாக்க கண்ணம்மாவிடம் தஞ்சமடைந்துள்ளான். இருவருக்கும் பிறந்த குழந்தை என்றாலும், வெண்பா மற்றும் மாமியார் ஆகியோர் செய்த சதியால், அந்தக் குழந்தை தங்களுக்கு பிறந்தது என்று தெரியாமலேயே இருவரும் பாச மழை பொழிந்து வருகின்றனர். கண்ணம்மா தனக்கு ஒரே ஒரு பெண் குழந்தை என்று நம்பிக் கொண்டிருக்கிறாள். பாரதி, தனக்கு குழந்தை இருக்கிறது என்று தெரிந்து, அவரை நேரில் பார்த்தும், அவர் தான் தன் குழந்தை என்று அறியாமல் இருக்கிறான். இப்படி பரபரப்பாக சீரியல் ஒருபுறம் பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Bharathi Kannama

அடுத்த செய்தி