Home /News /entertainment /

பாரதி கண்ணம்மா சீரியல் பிரபலத்திற்கு திருமணம்.. குவியும் வாழ்த்துக்கள்!

பாரதி கண்ணம்மா சீரியல் பிரபலத்திற்கு திருமணம்.. குவியும் வாழ்த்துக்கள்!

பாரதி கண்ணம்மா நடிகை

பாரதி கண்ணம்மா நடிகை

பாரதி கண்ணம்மா சீரியலில் பாரதியின் அக்காவாக, சவுந்தர்யாவின் மூத்த மகள் ரோலில் நடித்தார்.

    பாரதி கண்ணம்மா சீரியலில் பாரதிக்கு  அக்கா ரோலில் நடித்த சின்னத்திரை நடிகை ஸ்ருதி சண்முக பிரியாவுக்கு இன்று திருமணம் நடைப்பெற்றது. சின்னத்திரை வட்டாரத்தில் பிரபல நடிகையாக வலம் வரும் ஸ்ருதிக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

    திருமுருகன் இயக்கிய நாதஸ்வரம்' தொடரின் மூலம் சின்னத்திரை நடிகையாக  அறிமுகமான ஸ்ருதி சண்முக பிரியா,  'வாணி ராணி', 'கல்யாண பரிசு', 'பொன்னூஞ்சல்', 'பாரதி கண்ணம்மா' போன்ற பல வெற்றி தொடர்களில் நடித்து இருக்கிறார். நாதஸ்வரம் சீரியலில் கோபியின் 4 தங்கைகளில் இவரும் ஒருவர். ராகினி என்ற ரோலில் ஸ்ருதி ஏற்று நடித்த கதாபாத்திரம் பட்டி தொட்டி எங்கும் ஃபேமஸ் ஆனது. சீரியலில் மட்டுமில்லை ஒரு சில திரைப்படங்களிலும்  நடித்துள்ளார்.



     




    View this post on Instagram





     

    A post shared by Tamil Serials (@tamilserialexpress)






    கடைசியாக பாரதி கண்ணம்மா சீரியலில் பாரதியின் அக்காவாக, சவுந்தர்யாவின் மூத்த மகள் ரோலில் நடித்தார். அதன் பின்பு சின்னத்திரையை விட்டு விலகினார். ஆனால் சோஷியல் மீடியாவில் மட்டும் ஆக்டிவாக இருந்தார். அவ்வப்போது ஃபோட்டோ ஷூட் செய்து புகைப்படங்களையும் ஷேர் செய்வார். இந்நிலையில் ஸ்ருதிக்கு அரவிந்த் சேகர் என்பவருக்கும் இந்த ஆண்டு தொடக்கத்தில் நிச்சயதார்த்தம் முடிந்தது. அதனைத்தொடர்ந்து இன்றைய தினம்   இவர்களின் திருமணம் பெற்றோர் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது.



     




    View this post on Instagram





     

    A post shared by Tamil Serials (@tamilserialexpress)






    ஸ்ருதியின் கணவரான அரவிந்த் சேகர் ஒரு பாடி பில்டர். அண்மையில் நடைபெற்ற ஜேபி கிங்க்ஸ் க்ளாசிக் 2022 போட்டியில் சில்வர் பட்டம் வென்றுள்ளார். இவர்களின் நிச்சயதார்த்த புகைப்படம் வெளியான நாளிலிருந்து இந்த ஜோடி ஏகப்பட்ட பிரைடல் ஃபோட்டோ ஷூட்களை வெளியிட்டு இன்ஸ்டாவை கலக்கி இருந்தனர்.



     




    View this post on Instagram





     

    A post shared by Tamil Serials (@tamilserialexpress)






    இந்நிலையில் இவர்களின் திருமணம் விமர்சையாக நடந்து முடிய, சின்னத்திரை பிரபலங்கள் பலரும் திருமணத்தில் கலந்து கொண்டு ஜோடிகளை வாழ்த்தியுள்ளனர். பாரதி கண்ணம்மா சீரியல் குழு சார்பாக புதிய கண்ணம்மா , சவுந்தர்யா, பாண்டியன் ஸ்டோர்ஸ் காவ்யா, ரோஜா சீரியல் பிரியங்கா என சன் டிவி விஜய் டிவி பிரபலங்கள் அனைவரும் திரண்டு சென்று மணமக்களை வாழ்த்தியுள்ளனர். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: Bharathi Kannama, TV Serial, Vijay tv

    அடுத்த செய்தி