ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

பாரதி கண்ணம்மா சீரியல் நடிகரின் மனைவி உயிரை பறித்த பேலியோ டயட்

பாரதி கண்ணம்மா சீரியல் நடிகரின் மனைவி உயிரை பறித்த பேலியோ டயட்

பரத் கல்யாண் குடும்பத்துடன் ரிஷி

பரத் கல்யாண் குடும்பத்துடன் ரிஷி

கற்கால மனிதனின் உணவுகளை அடிப்படையாகக்கொண்டு உருவாக்கப்பட்ட பேலியோ டயட்டில் காய்கறிகள், உலர் பழங்கள், இறைச்சி முக்கியப் பங்கு வகிக்கிறது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  பாரதி கண்ணம்மா சீரியல் நடிகர் பரத் கல்யாணின் மனைவி பேலியோ டயட்டால் நீரிழிவு ஏற்பட்டு, சில நாட்கள் கோமாவில் இருந்து நேற்று மரணமடைந்துள்ளார். 

  90-களில் பல சீரியல்களில் நடித்து புகழ்பெற்றவர் நடிகர் பரத் கல்யாண். சமீபத்தில் விஜய் டிவி-யின் பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்திருந்தார். அவரது மனைவி பிரியா 43 வயதில் நேற்று உயிரிழந்தார். அவரின் மரணம் குறித்து முன்னணி பத்திரிக்கையிடம் பேசிய பரத் கல்யாணின் நண்பர் ரிஷி, “பிரியா கடந்த சில மாதங்களாகவே சர்க்கரை நோய் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். பேலியோ டயட் ஃபாலோ பண்ணியதால் நீரிழிவு அதிகமாகியது. அதற்காக சிகிச்சை எடுத்து வந்தார். உடல்நிலை மோசமாகியதும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். கோமாவிலேயே கொஞ்ச நாள் இருந்தார்” என்றவர் பின்னர் சிகிச்சை பலனின்றி பிரியா இறந்ததை குறிப்பிட்டிருந்தார்.

  பரத் கல்யாண் - பிரியா தம்பதிக்கு ஒரு ஆண் குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் இருக்கிறார்கள். கற்கால மனிதனின் உணவுகளை அடிப்படையாகக்கொண்டு உருவாக்கப்பட்ட பேலியோ டயட்டில் காய்கறிகள், உலர் பழங்கள், இறைச்சி முக்கியப் பங்கு வகிக்கிறது. ஆதிகால மனிதன் மிருகங்களை வேட்டையாடி அதன் மாமிசத்தை நெருப்பில் பொசுக்கி சாப்பிட்டான். இதன் அடிப்படையில் பேலியோ டயட்டை கடைப்பிடிப்பவர்கள் அதிக இறைச்சிகளையும், குறைந்த கார்போ ஹைட்ரேட் மற்றும் நார்ச்சத்து உணவுகளையும் எடுத்துக் கொள்கிறார்கள்.

  நீ என்னை தேர்ந்தெடுத்ததற்கு நன்றி - மஞ்சிமா மோகன் குறித்து கெளதம் கார்த்திக் உருக்கம்!

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இதற்கிடையே பேலியோ டயட்டால் பிரியா மரணமடைந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  Published by:Shalini C
  First published:

  Tags: TV Serial