பாரதி கண்ணம்மா சீரியலில் இன்றைய எபிசோடில் பாரதியை வெறுப்பு ஏற்ற கண்ணம்மா பிளான் போட, கடைசியில் பாரதி முன்பு அசிங்கப்படுகிறார் வெண்பா.
பாரதி கண்ணம்மா சீரியல் முன்பை விட இப்போது சுவாரசியமாக செல்ல ஒரே காரணம், வெண்பாவின் அம்மாவாக வந்திருக்கும் ரேகாவின் என்ட்ரி மற்றும் வெண்பாவுக்கு மாப்பிள்ளையாக வந்திருக்கும் சபரியின் அட்ராசிட்டிகள் சீரியலை பார்க்க தூண்டுகிறது. வெண்பாவுக்கு துர்கா தான் மாப்பிள்ளையாக வருவார் என ரசிகர்கள் நினைத்துக் கொண்டிருந்தனர். ஆனால் திடீரென்று சீரியலில் ரோகித் ரோலில் சபரியை இறக்கினார் இயக்குனர். இவர் செய்யும் லவ் டார்ச்சரில் தலைதெறித்து ஓடுகிறார் வெண்பா. ரோகித்திடம் வெண்பா, டாக்டர் பாரதி பற்றி எல்லாம் உண்மையும் சொல்லிவிட்டார். ஆனாலும் ரோகித் வெண்பாவை விடுவதாக இல்லை.
ரசிகர்களுக்காக அந்த முடிவை எடுத்த ‘அரண்மனை கிளி’ ஜானு!
வீட்டில் தங்கி கொண்டு வெண்பாவை ஓட வைக்கிறார் ரோகித். இன்றைய எபிசோடில் படத்திற்கு போகும் வெண்பாவும் ரோகித்தும் வழியில் விபத்தில் சிக்கிய ஒருவரை ஆஸ்பிட்டலுக்கு அழைத்து செல்கின்றனர். அதுவும் பாரதியும் கண்ணம்மாவும் வேலை செய்யும் ஆஸ்பீட்டலில் தான் கார் நிற்கிறது. வெண்பாவை ரோகித்துடன் பார்த்த கண்ணம்மா ஷாக் ஆகி அவரிடம் பேச்சு கொடுக்கிறார். உடனே ரோகித் வெண்பா தான் என் வருங்கால மனைவி என உளற,. உடனே இந்த இனிமையான காட்சியை பாரதிக்கு காட்ட வேண்டும் என நினைத்தவர், பாரதியை அவசர அவசரமாக அழைத்து வருகிறார்.
காற்றுக்கென்ன வேலி சீரியலில் இப்படியொரு ட்விஸ்டா! ஜெயிலுக்கு போகும் வெண்ணிலா!
வந்து பார்த்தால் ரோகித்தும் வெண்பாவும் ஒன்றாக நிற்க, பாரதிக்கு அதிர்ச்சி தாங்க முடியவில்லை. கண்ணம்மா, வெண்பாவும் ரோகித்தும் சூப்பர் ஜோடி என வெறுப்பு ஏற்ற, விட்டால் போதும் என அங்கிருந்து ஓடுகிறார் வெண்பா. அப்போது தான் ரோகித்துக்கு டாக்டர் பாரதி என்ற பெயர் ஞாபகத்திற்கு வருகிறது. பாரதியிடம் நக்கலாக பேசிவிட்டு வேக வேகமாக வீட்டுக்கு செல்கிறார் ரோகித். பாரதி கடுப்பானதை பார்த்து கண்ணம்மாவுக்கு சந்தோஷம் தாங்கல. வீட்டுக்கு போன ரோகித் தனது அத்தை ஷர்மிளாவிடம் பாரதியை சந்தித்த கதையை சொல்கிறார்.
இந்த பாரதிக்கு எப்படியாவது முற்றுப்புள்ளி வைக்க வெண்பாவுக்கு உடனே திருமணம் செய்ய வேண்டும் என நினைக்கிறார் வெண்பாவின் அம்மா ஷர்மிளா. இதோடு இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.