முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / மீண்டும் விஜய் டிவி-க்கு வரும் பாரதி கண்ணம்மா ரோஷினி ஹரிப்ரியன்?

மீண்டும் விஜய் டிவி-க்கு வரும் பாரதி கண்ணம்மா ரோஷினி ஹரிப்ரியன்?

ரோஷினி ஹரிப்ரியன்

ரோஷினி ஹரிப்ரியன்

மீண்டும் விஜய் டிவி-க்கு ரோஷினி ஹரிப்ரியன் வரவிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து விலகிய ரோஷினி ஹரிப்ரியன் மீண்டும் விஜய் டிவி-க்கு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியல் இல்லத்தரசிகளின் ஃபேவரிட்டாக மாறியுள்ளது. கண்ணம்மாவை காதலித்து திருமணம் செய்துக் கொள்கிறான் பாரதி. அவர்கள் வாழ்க்கையில் விளையாடி இருவரையும் பிரித்து விடுகிறாள் வெண்பா. கண்ணம்மாவுக்கு பிறந்த இரட்டை குழந்தையில் கறுப்பாக பிறந்த ஹேமாவை மாமியார் செளந்தர்யா தூக்கிச் சென்று வளர்த்து வருகிறார்.

இன்னொரு குழந்தை லட்சுமி கண்ணம்மாவிடம் வளர்கிறது. தன் மகள் என்று தெரியாமலேயே ஹேமா மீது உயிராக இருக்கிறான் பாரதி. தன் பள்ளியில் சமையல் செய்யும் கண்ணம்மா தனது அம்மா தான் எனத் தெரியாமலேயே அவளிடம் அன்பாக இருக்கிறாள் ஹேமா. கண்ணம்மாவின் குழந்தை தான் லட்சுமி என்ற உண்மை பாரதிக்கு தெரிய வர, ஹேமாவை பற்றிய உண்மை மட்டும் இன்னும் தெரிய வரவில்லை.

இந்த சீரியலில் கண்ணம்மா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்த ரோஷினி ஹரிப்ரியன், சில மாதங்களுக்கு முன்பு அதிலிருந்து விலகினார். இதற்குக் காரணம் அவரை தேடி வந்த சினிமா வாய்ப்புகள் என்று சொல்லப்பட்டது. இருப்பினும் அவர் எந்த படத்திலும் ஒப்பந்தமானதாக இதுவரை அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை.

இந்நிலையில் மீண்டும் விஜய் டிவி-க்கு ரோஷினி ஹரிப்ரியன் வரவிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. புதிய சீரியலா என்றால்? அதான் இல்லை. விரைவில் தொடங்கவிருக்கும் ‘குக் வித் கோமாளி 3’ நிகழ்ச்சியில் அவர் குக்காக கலந்துக் கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க - வீல் சேரில் விஜய் டிவி டிடி... கவலையில் ரசிகர்கள்

தவிர, குக் வித் கோமாளி சீசன் 3-க்கான ப்ரோமோ சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதில் கோமாளிகளாக சிவாங்கி, பாலா, மணிமேகலை, சுனிதா போன்றவர்கள் இடம் பெற்றுள்ளனர். ஆனால் பலரும் எதிர்பார்த்த புகழ் இடம்பெறாதது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: TV Serial, Vijay tv