Home /News /entertainment /

மாறும் பாரதி கண்ணம்மா சீரியல் நடிகர்கள் - வேதனையின் உச்சத்தில் இயக்குநர்

மாறும் பாரதி கண்ணம்மா சீரியல் நடிகர்கள் - வேதனையின் உச்சத்தில் இயக்குநர்

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா

அஞ்சலி கதாபாத்திரத்தில் நடித்து வந்த ஸ்வீட்டி எனும் கண்மணி மனோகரன் பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து தற்போது விலகியிருக்கிறார்.

    நடிகர்கள் மாற்றப்படுவது குறித்து பாரதி கண்ணம்மா சீரியல் இயக்குநர் பிரவீன் பென்னெட் வேதனையுடன் பதிவிட்டுள்ளார்.

    விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியல் இல்லத்தரசிகளின் ஃபேவரிட்டாக மாறியுள்ளது. கண்ணம்மாவை காதலித்து திருமணம் செய்துக் கொள்கிறான் பாரதி. அவர்கள் வாழ்க்கையில் விளையாடி இருவரையும் பிரித்து விடுகிறாள் வெண்பா. கண்ணம்மாவுக்கு பிறந்த இரட்டை குழந்தையில் கறுப்பாக பிறந்த ஹேமாவை மாமியார் செளந்தர்யா தூக்கிச் சென்று வளர்த்து வருகிறார்.

    இன்னொரு குழந்தை லட்சுமி கண்ணம்மாவிடம் வளர்கிறது. தன் மகள் என்று தெரியாமலேயே ஹேமா மீது உயிராக இருக்கிறான் பாரதி. தன் பள்ளியில் சமையல் செய்யும் கண்ணம்மா தனது அம்மா தான் எனத் தெரியாமலேயே அவளிடம் அன்பாக இருக்கிறாள் ஹேமா.

    இந்நிலையில் தனக்கு இரட்டை குழந்தைகள் பிறந்த விஷயத்தை மருத்துவர் மூலம் தெரிந்துக் கொண்ட கண்ணம்மா, தனது இன்னொரு குழந்தையை தேடி அலைகிறாள். பின்னர் ஒருவழியாக தனது இன்னொரு குழந்தை ஹேமா என்ற விஷயம் அவளுக்கு தெரிய வருகிறது. இந்த விஷயத்தை பாரதி எப்போது தெரிந்துக் கொள்வான்? டி.என்.ஏ டெஸ்ட் எடுப்பானா என்பதை தெரிந்துக் கொள்ள ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

    இந்நிலையில் இதில் அகிலாக நடித்து வந்த அகிலன் சீரியலை விட்டு விலகினார். அவருக்கு பதிலாக சுகேஷ் ராஜேந்திரன் என்பவர் அந்தக் கதாபாத்திரத்தில் தற்போது நடித்து வருகிறார். இதையடுத்து கண்ணம்மாவாக நடித்து வந்த ரோஷினி ஹரிப்ரியன் பாரதி கண்ணம்மா சீரியலை விட்டு விலகினார். அவருக்கு பதிலாக தற்போது வினுஷா தேவி என்பவர் அந்தக் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

    Director Praveen Bennett sad post about Bharathi Kannamma characters replacement, bharathi kannamma live streaming, bharathi kannamma hotstar, bharathi kannamma live streaming hotstar, bharathi kannamma today episode share chat, bharathi kannamma remake, bharathi kannamma soundarya real name, karthika deepam vs bharathi kannamma, bharathi kannamma soundarya, bharathi kannamma heroine name, bharathi kannamma durga real name, bharathi kannamma upcoming story bharathi kannamma, bharathi kannamma today episode, bharathi kannamma live streaming, Vijay TV Bharathi Kannamma Serial, baharathi kannamma Latest Update, bharathi kannamma hotstar, பாரதி கண்ணம்மா சீரியல், விஜய் டிவி பாரதி கண்ணம்மா, பாரதி கண்ணம்மா சீரியல் ப்ரோமோ, praveen bennett wiki, praveen bennett biography, director praveen bennett serials, praveen bennett age, praveen bennett salary, praveen bennett movies, praveen bennett baby, praveen bennett wife name

    இவர்களை தொடர்ந்து அஞ்சலி கதாபாத்திரத்தில் நடித்து வந்த ஸ்வீட்டி எனும் கண்மணி மனோகரன் பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து தற்போது விலகியிருக்கிறார். இந்நிலையில் இது குறித்து பதிவிட்டுள்ள சீரியலின் இயக்குநர் பிரவீன் பென்னெட், “அய்யோ அய்யோ எத்தனை மாற்றம்... என்னத்த சொல்றது... எத்தனை ஷப்பா..” என இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் குறிப்பிட்டுள்ள்ளார்.

    கதாபாத்திரங்கள் மாறுவது குறித்து தான் அவர் அப்படி வேதனையுடன் பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Bharathi Kannama, TV Serial, Vijay tv

    அடுத்த செய்தி