• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • கண்ணம்மா சொன்ன அந்த ஒரு பொய் தான் இத்தனைக்கும் காரணமாம்!

கண்ணம்மா சொன்ன அந்த ஒரு பொய் தான் இத்தனைக்கும் காரணமாம்!

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா

கவலை கொண்ட கண்ணம்மாவுக்கு அவரின் அப்பாவும் சித்தியும் வீட்டுக்கு வந்ததும் பயங்கர சந்தோஷம்

  • Share this:
    பாரதி கண்ணம்மாவில் தான் சொல்லிய ஒரு பொய், மொத்த பிரச்சனைக்கும் காரணம் என்று மகளிடம் அழுது தலை சாய்கிறாள் கண்ணம்மா.

    விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியலில் இன்று மகள் லட்சுயின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் கண்ணம்மா கண்ணீர் விடுகிறார். நேற்று பாரதியிடம் லட்சுமி என் மகள் தான் என தைரியமாக பேசி அவளை அழைத்து வந்து விட்டாள். ஆனால் பாரதி, கண்ணம்மாவை பார்த்து கேட்ட கேள்விகளை அவளால் மறக்க முடியவில்லை. குழந்தையை வைத்து நாடகமாடுவதாக பாரதி, கண்ணம்மாவை கீழ்தரமாக பேச அங்கிருந்து அமைதியாக வருகிறார். அதற்குள் பாரதி தன்னுடைய அப்பா, அம்மா, அஞ்சலி எல்லோரையும் கூப்பிட்டு தன்னை எல்லாரும் ஏமாற்றி விட்டதாக புலம்பி தள்ளுகிறான். லட்சுமி, கண்ணம்மாவின் குழந்தை தான் உண்மை எல்லோருக்கும் தெரிந்திருந்தும் அதை மறைத்து விட்டு நம்பிக்கை துரோகம் செய்து விட்டதாக கூறி வருத்தப்படுகிறான் . மொத்த குடும்பமும் கண்ணம்மாவிற்காக தன்னை ஏமாற்றுவதாக கூறி சவுந்தர்யாவிடம் கண்ணீர் வடிகிறான்.

    இந்த பக்கம் லட்சுமியுடன் வீட்டுக்கு போன கண்ணம்மா, பாரதி பேசியதை எண்ணிய கவலைக் கொள்கிறாள். போதாத குறைக்கு வழக்கம்போல் லட்சுமி கேள்விகளால் கண்ணம்மாவை துளைக்க, “நான் சொன்ன ஒரே ஒரு பொய் உனக்காக தான். உங்க அம்மா சமையல் காரங்கன்னு சொன்னா உன்ன ஸ்கூல மதிக்க மாட்டங்கன்னு நினைச்சி சொன்னா. ஆனா அந்த பொய் இப்படி குட்டி போட்டு பிரச்சயைய கூட்டிட்டு வரும்ன்னு நினைக்கல்” அப்படின்னு சொல்லி அழுகிறாள். அம்மா அழுததை பார்த்த லட்சுமி அவளை சமாதானம் செய்து சாரி கேட்கிறாள்.

    கண்ணம்மா எப்ப வருவா, உண்மைய் கேப்பான்னு பயந்துகிட்டு இருக்குற சவுந்தர்யா, அஞ்சலி வளைக்காப்பு பற்றி தன் கணவிடம் பேசுகிறார். அதுமட்டுமில்லை அஞ்சலி ஃபன்ஷனுக்கு கண்ணம்மா வந்தா, பாரதி என்ன சொல்லுவான்னு,அவன எப்படி சமாளிக்கிறதுன்னு யோசிச்சி கடைசியில் என்ன நடக்குதோ நடக்கட்டும் அப்படின்னு முடிவு எடுக்குறாங்க.



    பாரதி பேசியதை நினைச்சி கவலை கொண்ட கண்ணம்மாவுக்கு அவரின் அப்பாவும் சித்தியும் வீட்டுக்கு வந்ததும் பயங்கர சந்தோஷம். வழக்க போல சித்தி மட்டமாக ஏதாச்சி பேசுவாங்கன்னு கண்ணம்மா நினைக்க, அப்படியே எதிர்மறையா கண்ணமாவின் உழைப்பையும் தன்னம்பிக்கை பற்றியும் உயர்வா பேசுறாங்க சித்தி. ஆச்சரியம் கலந்த சந்தோஷத்தில் கண்ணம்மா நிற்க, இருவரும் சேர்ந்து அஞ்சலி வளைக்காப்பு விழாவுக்கு கண்ணமாவை அழைக்கிறார்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    ஆனால், கண்ணம்மாவுக்கு பாரதிய நினைச்சி கோவம் வர, முதலில் நான் வரலன்னு சொல்கிறாள். அப்புறம் அப்பா வற்புறுத்த, அஞ்சலிக்காக வரன்னு சம்மதிக்கிறாள். கண்டிப்பா லட்சுமியை கூடிட்டு வரன்னு சொல்லி அவங்கள அனுப்பி வைக்கிறாள்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: