Home /News /entertainment /

ஜெய் பீம், சார்பட்டா பட வாய்ப்புகளை மறுத்த பாரதி கண்ணம்மா ரோஷினி.. என்ன காரணம்?

ஜெய் பீம், சார்பட்டா பட வாய்ப்புகளை மறுத்த பாரதி கண்ணம்மா ரோஷினி.. என்ன காரணம்?

 பாரதி கண்ணம்மா ரோஷினி

பாரதி கண்ணம்மா ரோஷினி

பாரதி கண்ணம்மா ரோஷினிக்கு ஆர்யா நடித்த சார்பட்டா பரம்பரை படத்தில் மரியம்மாவாக நடிக்க முதலில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

    தொலைக்காட்சி சேனல்களில் சீரியல்களுக்கென தனி இடம் பிடித்த சேனல்கள் என்றால் அதில் ஒன்று சன்டிவி மற்றொன்று விஜய் டிவி. ஏனெனில் இந்த இரு தொலைக்காட்சி சீரியல்கள் தான் டிஆர்பி-யில் டாப் வரிசையில் இடம்பிடித்து வருகிறது. அதிலும் விஜய் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் இல்லத்தரசிகளின் பேவரிட் எனலாம். அந்த அளவிற்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ளது. டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடம் பிடிப்பதில் பாரதி கண்ணம்மா சீரியல் போட்டிபோட்டுக் கொண்டு விறுவிறுப்பான கதைக்களத்தை அமைத்து வருகிறது.

    இந்த நிலையில், விறுவிறுப்புடனும், பல திருப்பங்களுடனும் ஓடிக்கொண்டிருக்கும் இந்த சீரியலில் கண்ணம்மாகவாக நடித்து வந்த ‘ரோஷினி ஹரிப்ரியன்’ சீரியலில் இருந்து விலகுவதாக கடந்த மாதம் அறிவித்திருந்தார். இந்த செய்தி பாரதி கண்ணம்மா சீரியல் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு சீரியலுக்கு மிகப்பெரிய பின்னடைவையும் ஏற்படுத்தியிருந்தது என்று தான் சொல்ல வேண்டும். ஏனெனில் சீரியலில் கண்ணம்மாவாக தோன்றி ரசிகர்கள் மத்தியில் கண்ணம்மாவாகவே வாழும் நடிகை ரோஷினி ஹரிப்ரியன் சீரியலை விட்டு விலகுவதை ஏற்க முடியாது என ரசிகர்கள் மத்தியில் கருத்துக்களும் வெளியாகின.

    விஜய் டிவியை ஓரங்கட்ட சினேகாவுடன் கைக்கோர்த்த ஜீ தமிழ்.. அந்த பிரபலத்தின் மனைவியும் இருக்காங்க!

    அவருக்கு பதிலாக யார் நடிக்க போகிறார் என்ற தகவலும் வெளியாகின. அதனை உறுதி செய்யும் விதமாக, கண்ணம்மாவாக புதிய கதாநாயகி வினுஷா தேவி  நடித்து வருகிறார். வெள்ளித்திரையில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததன் காரணமாகவே பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து ரோஷினி விலகியுள்ளார் என்று தகவல் வெளியானது. மேலும், சீரியலில் இருந்து விலகுவதை அவரே அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தார். பாரதி கண்ணம்மா சீரியலில் தனது கடைசி நாளை, தன்னுடைய சக நடிகர், நடிகைகள் மற்றும் இயக்குனருடன் ரோஷினி ஹரிபிரியன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.

    இந்த வீடியோ கூட கண்ணம்மாவின் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வந்தது. பலர் ரோஷினி சீரியலில் இல்லாததை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கருத்து தெரிவித்திருந்தாலும் தற்போது, ரோஷினிக்கு பதிலாக அவரை போலவே இருக்கும் வினுஷா சீரியலில் நடித்து வருகிறார். இவருக்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். இந்த நிலையில் ரோஷினி குறித்து மற்றொரு செய்தி வெளியாகியுள்ளது.

    read more.. சமந்தாவை பிரிய இதான் காரணமா? மெளனம் கலைத்த நாக சைத்தன்யா

    ஆம், இவர் சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போதே நிறைய படங்களில் நாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. சூர்யாவின் ஜெய் பீம் படத்தில் செங்கேணி வேடத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததாம். அதன்பிறகு, ஆர்யா நடித்த சார்பட்டா பரம்பரை படத்தில் மரியம்மாவாக நடிக்க முதலில் ரோஷினிக்கு தான் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஆனால், ஏதோ சில காரணங்களுக்காக வாய்ப்பை மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனை கேட்ட ரசிகர்கள் ஆச்சர்யமடைந்துள்ளனர்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja Sreeja
    First published:

    Tags: Bharathi Kannama, TV Serial, Vijay tv

    அடுத்த செய்தி