தமிழர் பாரம்பரியத்தை எடுத்துரைக்கும் லேட்டஸ்ட் ஹிட் பாடலுக்கு புடவையில் குத்தாட்டம் போட்ட கண்ணம்மா!

ரோஷினி ஹரி பிரியன்

கண்ணம்மாவாக ரசிகர்கள் மனதில் பதிந்துள்ள நடிகை ரோஷினி ஹரிப்பிரியன், எப்போதும் இன்ஸ்டாவில் ஆக்டிவாக இருப்பார்.

  • Share this:
விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் டாப் 2-க்குள் இருக்கும் சீரியல் பாரதி கண்ணம்மா. கடந்த 2019-ம் ஆண்டு பிபிப்ரவரி முதல் இந்த சீரியல் ஒளிபரப்பாகி வந்தாலும் கண்ணம்மாவாக நடிக்கும் ரோஷினி ஹரிப்பிரியன் கணவன் பாரதியை விட்டு பிரிந்த எபிசோட்களின் போது சோஷியல் மீடியாக்கள் மூலம் மிகவும் பிரபலமானது. மாமியார் வீட்டை விட்டு கர்ப்பிணியாக இருந்த கண்ணம்மா வெளியேறி பல எபிசோட்களுக்கு பல கிலோ மீட்டர்கள் நடந்து கொண்டே இருப்பதை போல ஒளிபரப்பப்பட்ட காட்சிகள் மீம் கிரியேட்டர்களுக்கு பெரிய கண்டென்ட்டாக அமைந்தது.

சோஷியல் மீடியாக்களில் வைரலான கண்ணம்மா மீம்கள் மூலம் இந்த சீரியலுக்கான ரசிகர் வட்டம் பெருகியது. கொரோனா காரணமாக போடப்பட்டிருந்த லாக்டவுன் காரணமாக பெரும்பாலான மக்கள் வீடுகளுக்குளேயே முடங்கி கிடந்த நிலையில், பாரதி கண்ணம்மாவின் டிஆர்பி ரேட்டிங் எகிறியது. மேலும் நடிகை ரோஷினி ஹரிப்பிரியனுக்கும் ரசிகர்கள் பெருகினர். தற்போது பாரதி கண்ணம்மா சீரியல் மிகவும் பரபரப்பான கட்டத்தில் உள்ளது. லட்சுமி கண்ணம்மாவின் பெண் என்பதை அறிந்து கொண்ட பாரதி, அதை அவள் வாயாலேயே சொல்ல வைக்க எடுக்கும் முயற்சிகள், பாரதியின் வீட்டில் வளரும் ஹேமா அவர்கள் இருவருக்கும் பிறந்த பெண் தான் என்பது பாரதி மற்றும் கண்ணம்மாவிற்கு தெரிய வருமா என்கிற விறுவிறுப்பில் சீரியல் சென்று கொண்டிருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கண்ணம்மாவாக ரசிகர்கள் மனதில் பதிந்துள்ள நடிகை ரோஷினி ஹரிப்பிரியன், எப்போதும் இன்ஸ்டாவில் ஆக்டிவாக இருப்பார். இந்நிலையில் நேற்று மாலை வெளியான வாடா ராசா என்ற ஒரு தமிழ் ஆல்பம் பாடலின் சில வரிகளுக்கு குத்தாட்டம் போட்டு, அதை வீடியோவாக தனது இன்ஸ்டாவில் ஷேர் செய்து இருக்கிறார் ரோஷினி ஹரிப்பிரியன்.

Also read... வள்ளி சீரியலின் சாதனையை 2 ஆண்டுகளுக்குள் முறியடித்த சந்திரலேகா - ரசிகர்கள் உற்சாகம்!

ஹரிஷ் கண்ணனின் அட்டகாசமான ஒளிப்பதிவில், சாண்டி மாஸ்டரின் டான்ஸ் ஸ்டெப்களில் நடிகர் கருணாஸின் மகன் மற்றும் மனைவி கென் கருணாஸ், கிரேஸ் கருணாஸ், சித்தி-2 புகழ் நடிகை ப்ரீத்தி ஷர்மா ஆகியோர் நடித்துள்ள "வாடா ராசா"என்ற ஆல்பம் பாடலை சோனி சவுத் நிறுவனம் யூடியூபில் நேற்று மாலை 5 மணிக்கு ரிலீஸ் செய்து இருக்கிறது. 
View this post on Instagram

 

A post shared by Roshni Haripriyan (@roshniharipriyan)


தமிழ் கலாச்சாரம், விவசாயம் மற்றும் விவசாயிகளின் முக்கியத்துவம், வேட்டி மற்றும் புடவை அணிவதன் சிறப்புகள் உள்ளிட்டவற்றை கருவாக கொண்டு தயாராகி உள்ள இந்த பாடலை யூடியூபில் இதுவரை 1.3 மில்லியன் மக்கள் பார்த்து ரசித்துள்ளனர். 24 மணி நேரத்திற்குள் 13 லட்சம் பார்வையாளர்களை கடந்து ஹிட்டாகி உள்ள இந்த பாடலின் "வேட்டிய எடுத்து கட்டிக்கோ.. கெத்தா இருக்கும் பாத்துக்கோ.. புடவையை எடுத்து கட்டிக்கோ நல்லா இருக்கும் பாத்துக்கோ" என்ற வரிகளுக்கு புடவையில் குத்தாட்டம் போட்டுள்ளார் நடிகை ரோஷினி ஹரிப்பிரியன்.
Published by:Vinothini Aandisamy
First published: