• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • DNA டெஸ்ட் எடுக்க பாரதியை கூப்பிடும் கண்ணம்மா! அப்ப சீரியல் முடிய போகுதா?

DNA டெஸ்ட் எடுக்க பாரதியை கூப்பிடும் கண்ணம்மா! அப்ப சீரியல் முடிய போகுதா?

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா

கோபத்தில் பாரதி டெஸ்ட் எடுக்க கிளம்பினால் சீரியல் கூடிய விரைவில் முடிந்துவிடும்.

  • Share this:
    கண்ணம்மாவை தரக்குறைவாக பேசிய பாரதியை, DNA டெஸ்ட் எடுக்க கூப்பிடுகிறாள் கண்ணம்மா.. ஒருவேளை பாரதி டெஸ்ட் எடுத்தா, அதோடு சீரியல் முடிவுக்கு வந்துவிடும்.

    விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியல் சின்னத்திரை  டி.ஆர்.பியில் முதலிடத்தில் இருக்கும் சீரியல். ஆரம்பத்தில் இருந்ததை விட கண்ணம்மா, பாரதியை விட்டு பிரிந்த பின்பு இந்த சீரியலை பார்க்கும் ரசிகர்கள் கூட்டம் அதிகம் ஆனது. கண்ணம்மாவாக நடிக்கும் ரோஷினிக்கும் ரசிகர்கள் கூட்டம் அதிகமானது. குழந்தை பிறக்காது என நினைக்கும் டாக்டர் பாரதிக்கு குழந்தை பிறக்க, வில்லி வெண்பாவின் சதியால் மனைவி கண்ணம்மாவை வீட்டை விட்டு துரத்துக்கிறான் பாரதி. ஆனால் ஒட்டுமொத்த குடும்பமும் கண்ணம்மா பக்கம் தான். பாரதிக்கு எப்போது உண்மை தெரிய வருதோ அப்போது சீரியல் முடிந்துவிடும். ஆனால் அவ்வளவு சீக்கிரமாக இயக்குனர் தெரிய வைத்து விடுவாரா என்ன? இந்த ஒன்லைன் ஸ்டோரில் தான் பாரதி கண்ணம்மா சீரியல் 3 வருடங்களாக ஒளிப்பரப்பாகி வருகிறது.

    இந்நிலையில் சமீபத்தில் இரட்டை குழந்தை உண்மை கண்ணம்மாவுக்கு தெரிய வர, தனது குழந்தையை தேடி ரோடு ரோடாக அலைகிறாள் கண்ணம்மா. இதற்கிடையில் வெண்பா குழந்தையை கடத்தி வைத்திருப்பதாக பொய் சொல்லி மிரட்ட, குழம்பி போனவள் பாரதியிடம் உதவி கேட்க முடிவு எடுக்கிறாள். இதனால் பாரதியும் கண்ணம்மாவும் தனியாக சந்தித்து பேசுகிறார்கள். என்னதான் கண்ணம்மா மீது பாரதிக்கு கோபம் இருந்தாலும் கண்ணம்மா கூப்பிட்ட உடனே வந்து நிற்கிறான். யாரையும் நம்பி யூஸ் இல்லை என நினைத்த கண்ணம்மா கடைசியில் பாரதியை நாடி செல்கிறாள். இது இப்படி இருக்க, இன்றைய எபிசோடில் கண்ணம்மா அனைத்து உண்மைகளையும் பாரதியிடம் கூறுகிறாள். சமீபத்தில் இரட்டை குழந்தை பற்றி தெரிந்து கொண்டது, பிரசவ நேரத்தில் துர்கா வந்து வெண்பா பற்றிய உண்மைகளை சொன்னது, வெண்பா குழந்தையை கடத்தி கொண்டு சென்றது என தனக்கு தெரிந்த அனைத்து உண்மைகளையும் கண்ணம்மா கூறுகிறாள்.

    ஆனால் பாரதி எதையுமே நம்பாமல் சிரிக்கிறான். அதுமட்டுமில்லை கண்ணம்மாவுக்கு இரட்டை குழந்தை பிறந்திருக்க வாய்ப்பு இல்லை எனவும் அடித்து கூறுகிறான். அதற்கு கண்ணம்மா பாரதியை விடாமல் கேள்வி கேட்க, இத்தனை ஆண்டுகளாக மறைத்து வைத்த உண்மையை பாரதி போட்டு உடைக்கிறான். கண்ணம்மாவுக்கு பிரசவம் பார்த்த கதையை பாரதி கண்ணம்மாவிடம் கூற, அவளின் நெஞ்சே வெடிக்கிறது. இதனால் இரட்டை குழந்தை கதை பொய் என்றும், வெண்பாவை என்னிடம் இருந்து பிரிக்க தான் இப்படி செய்கிறாய் என்றும் கண்ணம்மா மீது பாரதி பழி போட உடனே கோபத்தில் வெடிக்கிறாள் கண்ணம்மா.

    வழக்கம் போல் கண்ணம்மா நடத்தை பற்றி பாரதி தப்பாக பேச, கண்ணம்மா பாரதியை இந்த நிமிஷமே DNA டெஸ்டுக்கு வரும்படி அழைக்கிறாள். அதோடு முடிகிறது இன்றைய எபிசோட். ஒருவேளை கோபத்தில் பாரதி டெஸ்ட் எடுக்க கிளம்பினால் சீரியல் கூடிய விரைவில் முடிந்துவிடும்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: