விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் ப்ரோமோ பார்வையாளர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
கண்ணம்மாவை காதலித்து திருமணம் செய்துக் கொள்கிறான் பாரதி. அவர்கள் வாழ்க்கையில் விளையாடி இருவரையும் பிரித்து விடுகிறாள் வெண்பா. கண்ணம்மாவுக்கு பிறந்த இரட்டை குழந்தையில் கறுப்பாக பிரந்த ஹேமாவை மாமியார் செளந்தர்யா தூக்கிச் சென்று வளர்த்து வருகிறார். இன்னொரு குழந்தை லட்சுமி கண்ணம்மாவிடம் வளர்கிறது. தன் மகள் என்று தெரியாமலேயே ஹேமா மீது உயிராக இருக்கிறான் பாரதி. தன் பள்ளியில் சமையல் செய்யும் கண்ணம்மா தனது அம்மா தான் எனத் தெரியாமலேயே அவளிடம் அன்பாக இருக்கிறாள் ஹேமா.
இதற்கிடையே ஹேமாவுக்கு உடல்நிலை சரியில்லாததால், மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறாள். அங்கு அவளை பரிசோதித்த மருத்துவர், கண்ணம்மா தான் அவளுக்கு மருந்து என்கிறார். இதனால் கண்ணம்மாவுடன் ஒரு வாரம் தங்குவதற்காக, அவள் வீட்டில் கொண்டு சென்று ஹேமாவை விடுகிறான் பாரதி.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள
ப்ரோமோவில், ஹேமாவை பார்க்க கண்ணம்மா வீட்டுக்கு சென்றிருக்கிறான் பாரதி. அப்போது அந்த ஏரியாவில் கொரோனா தொற்று அதிகமானதால், சிவப்பு மண்டலமாக அறிவித்து, யாரும் அங்கிருந்து வெளி வரக்கூடாது என
லாக்டவுன் போட்டிருப்பதாக ஹேமாவும், லட்சுமியும் கண்ணம்மாவிடம் சொல்கிறார்கள். அதோடு ஒரு வண்டி பாரதி மீது சேர் அடித்து விட்டுச் செல்ல, ’அவரை உள்ள போய் குளிக்க சொல்லு’ என லட்சுமியிடம் கூறுகிறாள் கண்ணம்மா.
அதோடு பாத்ரூமில் இருக்கும் பாரதிக்கு, சோப்பு, துண்டு ஆகியவற்றை எடுத்துத் தருகிறாள். அவனுக்கு மாற்று துணியும் வாங்கி தருகிறாள். பின்னர் நால்வரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுகிறார்கள். வீட்டை பெருக்கி சுத்தம் செய்யும் கண்ணம்மாவை
காதலுடன் பார்க்கிறான் பாரதி.
கண்ணம்மா மீதிருந்த தவறான புரிதலை சரி செய்துக் கொள்வானா பாராதி... பொறுத்திருந்து பார்ப்போம்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.