Home /News /entertainment /

அநீதி கண்டு பொங்கி எழும் கண்ணம்மா.. இந்த முறையும் பாரதி அவுட்!

அநீதி கண்டு பொங்கி எழும் கண்ணம்மா.. இந்த முறையும் பாரதி அவுட்!

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா

ஆஸ்பிட்டலில் இத்தனை ஆண்கள் இருந்தாலும் கண்ணம்மா மட்டுமே இந்த பிரச்சனைக்கு முடிவு கட்டுகிறார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    பாரதி கண்ணம்மா சீரியலில் அநீதி கண்டு பொங்கி எழும் கண்ணம்மாவின் வெறித்தனமான புரமோ வெளியாகியுள்ளது.

    பாரதி கண்ணம்மா சீரியலில் கடந்த 2 வாரமாக பீஸ்ட் பட சீரியல் வெர்ஷன் டெலிகாஸ்ட் ஆகி வருகிறது. பாரதி வேலை செய்து வந்த ஆஸ்பிட்டல் இப்போது தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது . உள்ளே  இருக்கும் நர்ஸ்கள், டாக்டர்கள், பொதுமக்கள் அனைவரும் தீவிரவாதிகளிடம் மாட்டிக் கொண்டனர். டாக்டர் பாரதி, கண்ணம்மா, ஹேமா, லட்சுமி, அஞ்சலி, அகிலன் என சவுந்தர்யாவின் மொத்த குடும்பமும் இப்போது ஆஸ்பிட்டல் உள்ளே இருக்கின்றனர். இவர்கள் அனைவரையும் காப்பாற்ற ஒருபக்கம் காவல் துறையினர் முயற்சி எடுத்து வருகின்றனர்.



    நாங்க வாழ்ந்து காட்றோம்.. விமர்சனங்களுக்கு மகாலட்சுமியின் நெத்தியடி பதில்!

    அதே போல் மத்திய அமைச்சருக்கு டாக்டர் பாரதி ட்ரீட்மெண்ட் கொடுத்து வருகிறார். இதற்கிடையில் தீவிரவாதி ஒருவன், அங்கே இருக்கும் பெண்களிடம் அத்து மீறுகிறான். பெண்களிடம் தவறான முறையில் பேசுவது  அவர்களை தொந்தரவு செய்வது என இப்படியே அவன் சேட்டை தொடர்கிறது. இதை கண்ணம்மா கவனிக்கிறார். கடைசியில் அவரே இந்த பிரச்சனைக்கு முடிவும் கட்டுகிறார். அந்த தீவிரவாதியிடம் நல்ல முறையில் பேசி உள்ளே அழைத்து சென்று அவனை கத்திரியால் குத்தி கிழிக்கிறாள்.



    அநீதி கண்டு கண்ணம்மா பொங்கும் இந்த புரமோ இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்பிட்டலில் இத்தனை ஆண்கள் இருந்தாலும் கண்ணம்மா மட்டுமே இந்த பிரச்சனைக்கு முடிவு கட்டுகிறார். வழக்கம் போல் ஹீரோ பாரதி கடைசி நேரத்தில்  வந்து கண்ணம்மாவை பாராட்டுவார் போல. இந்த புரமோவை பார்த்த ரசிகர்களும் குறிப்பாக இந்த புரமோவில் கண்ணம்மாவாக நடிக்கும் வினுஷாவின் நடிப்பை பாராட்டியுள்ளனர்.

    இந்த காட்சிகள் வரும் நாட்களில் சீரியலில் டெலிகாஸ்ட் ஆகும் என தெரிகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: Bharathi Kannama, TV Serial, Vijay tv

    அடுத்த செய்தி