பாரதி கண்ணம்மா சீரியலில் பரபரப்பான திருப்பங்களுடன் கூடிய அதிரடியான புரமோ தற்போது வெளியாகியுள்ளது.
சொல்லப்போனால் தற்போது பாரதி
கண்ணம்மா ரசிகர்களுக்கு சீரியலில் இருக்கும் ஒரே ஆறுதல் வெண்பா தான். கிட்டத்தட்ட தனது வில்லத்தனத்தால் மொத்த ரசிகர்களையும் கட்டிப்போட்டுள்ளார் வெண்பா.அவரை விடவும் இப்போது அவரின் அம்மா ரோல் பயங்கர ரீச். நடிகை ரேகா தான், வெண்பாவின் அம்மாவாக ஷர்மிளா என்ற ரோலில் நடித்து வருகிறார். இவர், வெண்பாவுக்கு திருமணம் செய்து வைக்க அமெரிக்காவில் இருந்து வந்துள்ளார். அதுமட்டுமில்லை வந்த முதல் நாளே பாரதியையும் வெண்பாவையும் பிரித்துவிட்டார். அவரின் பேச்சால் கடுப்பான பரதி இனிமேல் நமக்குள் எதுவுமே இல்லை என வெண்பாவை வீட்டுக்கு அனுப்பி வைத்துவிட்டார்.
சத்யாவா இப்படி ஒரு காரியத்தை செய்தார்? ஷாக்கில் வருண்!
இப்படி இருக்கையில் எப்படியாவது பாரதியின் மனதில் இடம்பிடிக்க வேண்டும் என நினைத்த வெண்பா, வழக்கம் போல் தானாகவே பாரதியிடம் போய் பேசி திட்டு வாங்குகிறார். பாரதி புதியதாக சேர்ந்து இருக்கும் ஆஸ்பிட்டலில் தான் கண்ணம்மாவும் வேலைக்கு சேர்ந்துள்ளார். இப்படி இருக்கையில் பாரதியை பார்க்க வெண்பா ஆஸ்பிட்டலுக்கு வருகிறார். அஅரை தேடி அவரின் அம்மா
ஷர்மிளாவும் அங்கு வருகிறார். இப்படி இருக்கையில், கடைசியில் வெண்பாவை தேடி போலீஸ் வருகின்றனர்.
உழைப்புக்கு கிடைத்த வெற்றி... பிரபல விஜய்டிவி சீரியல் நடிகருக்கு தெலுங்கில் கிடைத்த வாய்ப்பு!
அதாவது, கருகலைப்பு வழக்கில் ஜெயிலுக்கு சென்ற வெண்பா நிபந்தனை ஜமீனில் வெளியே வந்தார். தற்போது மீண்டும் அவரை கைது செய்ய போலீஸ் அவரை தேடி வந்தது. இதைப்பார்த்து ஷாக்கான ஷர்மிளா செய்வதறியாமல் நிற்கிறார். அதற்குள் போலீஸ், வெண்பாவை கைது செய்து அழைத்து செல்கின்றனர். வெண்பாவை போலீஸ் ஸ்டேஷனில் பார்க்க போகும் அவரின் அம்மா, கடைசி நேரத்தில் வெண்பாவுக்கு செக் வைக்கிறார்.
அதாவது, பாரதியை மறந்துவிட்டு வேற ஒருவரை திருமணம் செய்ய வேண்டும் என்கிறார். அப்படி செய்தால் உன்னை காப்பாற்றுகிறேன். இல்லை என்றால் ஜாமீனில் கூட எடுக்க மாட்டேன் என்கிறார். வெண்பாவுக்கே செக்கா? என்பது போல் உள்ளது ஷர்மிளாவின் சூப்பர் நடிப்பு.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.