Home /News /entertainment /

சேர போகும் பாரதி - கண்ணம்மா? இன்றைய எபிசோடில் காத்திருக்கும் ட்விஸ்ட்!

சேர போகும் பாரதி - கண்ணம்மா? இன்றைய எபிசோடில் காத்திருக்கும் ட்விஸ்ட்!

பாரதி - கண்ணம்மா

பாரதி - கண்ணம்மா

கண்ணம்மாவுக்கு பாரதியின் இந்த திடீர் மாற்றம் ஆச்சரியத்தை தருகிறது

    பாரதி கண்ணம்மா சீரியலில் இன்றைய எபிசோடில் ரசிகர்களுக்கு மிகப் பெரிய ட்விஸ்ட் காத்துக் கொண்டிருக்கிறது.

    பாரதி - கண்ணம்மா சீரியலை  பொறுத்தவரையில் தற்போது சொல்லிக் கொள்ளும் அளவுக்கு கதையில் பெருசாக எதுவும் இல்லை. கண்ணம்மாவும் பாரதியும் சேர்ந்தாலே சீரியல் முடிந்த மாதிரி தான். ஆனால் அந்த  முடிவை இயக்குனர் இன்னும் எடுக்காததால் சீரியலை முடிக்காமல் இழுத்தடித்து வருகிறார். இன்றைய எபிசோடில்,  ரசிகர்கள் முன்பே கணித்தது போலவே ஜானகி அம்மாவும் ராமன் சாரும் இறந்து விடுகின்றனர்.

    இன்று ஜானகி அம்மாவுக்கு ஆப்ரேஷன் செய்ய போவதாக பாரதி கூறியிருந்தார். அதற்காக அவரை ரெடி  பண்ண  நர்ஸ், கண்ணம்மா ஆகியோர் ரூமுக்கு செல்கின்றனர். ஆனால் அங்கு ஜானகி அம்மா இறந்து கிடக்கிறார். அவரின்  தலைக்கு அருகில் படுத்தப்படியே   அவரின் கணவர் ராமன் சாரும் இறந்து கிடக்கிறார். இதை பார்த்து மொத்த குடும்பமும் கண்ணீர் விடுகின்றனர். பாரதியும் கண்ணம்மாவும் சேர்ந்து அழுகின்றனர். இறப்பிலும் கணவன் - மனைவி ஜோடியாக உயிர் விட்டதை பார்த்து ஒட்டு மொத்த ஆஸ்பிட்டலும் சோகத்தில் மூழ்கிறது.

    வெற்றிக்கு கொடுக்கும் மரியாதை.. அலுவலகத்தின் வாசலை முத்தமிட்ட பிரபல நடிகர்!

    வீட்டுக்கு வரும் பாரதிக்கு இறுதியாக ஜானகி அம்மா வாங்கிய சத்தியம் நினைவுக்கு வருகிறது. அதை நினைத்து  வருத்தப்படுகிறார். அதே போல்  கண்ணமாவும்  சத்தியத்தை பற்றி நினைக்க, பாரதி கண்ணம்மாவுக்கு ஃபோன் செய்து ஆஸ்பிட்டலுக்கு லீவ் போட சொல்கிறார். இருவரும் லட்சுமி ஹேமாவுடன் சேர்ந்து வெளியே ஒருநாள் சென்று வரலாம் என்கிறார். அதற்கான காரணத்தையும் ஜானகி அம்மா வாங்கிய சத்தியத்தை பற்றியும் கண்ணம்மாவிடம் சொல்கிறார்.

    வருணுடன் சேர்ந்த சக்திக்கு இப்படியொரு சோகமா! கதறி அழும் மல்லிகா

    கண்ணம்மாவுக்கு பாரதியின் இந்த திடீர் மாற்றம் ஆச்சரியத்தை தருகிறது,.இதுதான் ஆரம்பம். வரும் நாட்களில் இருவரும் சேர்ந்து விடுவார்கள் என்ற தகவலும் இணையத்தில் வைரலாகி வருகிறது. அது உண்மையா இல்லையா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: Bharathi Kannama, TV Serial, Vijay tv

    அடுத்த செய்தி