• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • குடும்பத்திற்காக ஒட்டுமொத்த பழியை ஏற்றுக்கொள்ளும் சவுந்தர்யா! கண்ணம்மாவும் ஹேமாவும் சேருவது கஷ்டம்

குடும்பத்திற்காக ஒட்டுமொத்த பழியை ஏற்றுக்கொள்ளும் சவுந்தர்யா! கண்ணம்மாவும் ஹேமாவும் சேருவது கஷ்டம்

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா எபிசோடில் குழந்தையை பார்க்க பாரதிக்கு வீட்டுக்கு விரைகிறாள் கண்ணம்மா.

  • Share this:
    பாரதி கண்ணம்மா சீரியலில் சவுந்தர்யா வீட்டில் தர்ணா செய்யும் கண்ணம்மாவை அனுப்ப ஒட்டுமொத்த பழியையும் சவுந்தர்யா ஏற்று கொள்கிறார்.

    விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது.இரட்டை குழந்தை உண்மையை 8 வருஷமாக தெரிந்துக் கொள்ளாமல் இருந்த கண்ணம்மாவுக்கு எல்லா உண்மையும் தெரிந்துவிட்டது. இனிமேல் ஹேமாவை விட்டுகொடுக்க போவதில்லை என்று தர்ணா செய்கிறார். இந்த மொத்த பிரச்சனையையும் சவுந்தர்யாவால் மட்டுமே சமாளிக்க் முடியும் என்பதால் அவரின் அடுத்தடுத்த முடிவுகள் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் மேலூங்கியுள்ளது. ஒருவேளை பாரதியிக்கு ஹேமா, கண்ணம்மாவின் குழந்தை என்று தெரிந்து விட்டால் பாரதி என்ன முடிவு எடுப்பான்? என்பதை நினைத்து தான் சவுந்தர்யா குடும்பம் பயப்படுகிறது. அதுமட்டுமில்லை ஒருவேளை ஹேமாவை பிரியும் நிலை ஏற்பட்டல் பாரதியின் நிலைமை என்ன என்பதை நினைத்து தாயாக சவுந்தர்யா வருத்தப்படுகிறாள்.

    கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக விஜய் தொலைக்காட்சியில் பாரதி கண்ணம்மா சீரியல் ஒளிப்பரப்பாகி வருகிறது.
    கண்ணம்மாவை காதலித்து திருமணம் செய்துக் கொள்கிறான் பாரதி. அவர்கள் வாழ்க்கையில் விளையாடி இருவரையும் பிரித்து விடுகிறாள் வெண்பா. கண்ணம்மாவுக்கு பிறந்த இரட்டை குழந்தையில் கறுப்பாக பிரந்த ஹேமாவை மாமியார் செளந்தர்யா தூக்கிச் சென்று வளர்த்து வருகிறார். இன்னொரு குழந்தை லட்சுமி கண்ணம்மாவிடம் வளர்கிறது. தன் மகள் என்று தெரியாமலேயே ஹேமா மீது உயிராக இருக்கிறான் பாரதி. தன் பள்ளியில் சமையல் செய்யும் கண்ணம்மா தனது அம்மா தான் எனத் தெரியாமலேயே அவளிடம் அன்பாக இருக்கிறாள் ஹேமா.கதை இப்படி சென்று கொண்டிருந்த திடீரென்று இரட்டை குழந்தை உண்மை கண்ணம்மாவுக்கு தெரிய வருகிறது. அந்த குழந்தை யார் என்று தெரியாமல் தேடி அலைந்த கண்ணம்மாவுக்கு அது ஹேமா தான் என்று உண்மையும் தெரிந்து விடுகிறது. உடனே தனது குழந்தையை பார்க்க பாரதிக்கு வீட்டுக்கு விரைகிறாள் கண்ணம்மா.

    இன்றைய எபிசோடில், ஹேமாவை தூக்கி முத்தமிட்ட கண்ணம்மா, இனிமேல் நான் சமையல் அம்மா இல்லை என்கிறாள். உண்மையை கண்ணம்மா சொல்வதற்குள் சவுந்தர்யா தடுத்து நிறுத்துகிறார். அவசர அவசரமாக பாரதியுடன் ஹேமாவை வெளியே அனுப்புகிறார். ஹேமாவை பிரிய மனமில்லாமல் கண்ணம்மா, நீ போக வேண்டாம் என்கிறாள். கண்ணம்மாவின் பேச்சு மற்றும் நடவடிக்கை பாரதிக்கு சந்தேகத்தை தருகிறது. சவுந்தர்யா  ஏதோ சமாளித்து பாரதியையும் ஹேமாவையும் வெளியே அனுப்புகிறார். இத்தனை வருடங்களாக தனக்கு இருந்த ஒட்டுமொத்த கோபத்தையும் சவுந்தர்யா, அகில்,அஞ்சலி மீது காட்டுகிறாள் கண்ணம்மா. குழந்தையையும் தாயையும் பிரித்த பாவத்துக்கு சாபமும் விடுகிறாள். ஒட்டு மொத்த குடும்பத்திற்காக சவுந்தர்யா எல்லா பழியையும் ஏற்று கொள்கிறார். இனி ஹேமாவை விட்டு பிரிய போவதில்லை என்கிறாள் கண்ணம்மா.சவுந்தர்யா எவ்வளவு சமாதானம் செய்தும் கண்ணம்மா கேட்பதாக தெரியவில்லை. வீட்டுக்குள் தர்ணா செய்கிறாள்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: