Home /News /entertainment /

கண்ணம்மாவுக்காக சண்டை போட்ட பாரதி.. கடைசியில் இப்படி ஆயிடுச்சே!

கண்ணம்மாவுக்காக சண்டை போட்ட பாரதி.. கடைசியில் இப்படி ஆயிடுச்சே!

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா

கண்ணம்மா சொன்னது போல், அவரின் கணவர் தான் அடித்து கொடுமை படுத்தியது தெரிய வருகிறது.

    பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மாவிடம் மீண்டும் அசிங்கப்படும் நிலைக்கு தள்ளப்படுகிறார் பாரதி. இதுக் குறித்த புரமோ தற்போது வெளியாகியுள்ளது.

    இத்தனை மாதமாக சமையல் அம்மாவாக சுற்றித்திரிந்த கண்ணம்மா இப்போது அட்மின் ஆகிவிட்டார். பாரதி வேலை செய்யும் அதே ஆஸ்பிட்டலில் கண்ணம்மாவுக்கு வேலை. இருவரும் இத்தனை நாட்களாக ஹேமா , லட்சுமி படிக்கும் ஸ்கூலில் சந்தித்துக் கொண்டிருந்தனர். அது ரசிகர்களுக்கு போர் அடித்துவிட்டது என்பது இயக்குனருக்கு தெரிந்து விட்டது போல. லொக்கேஷனை மாற்றிவிட்டார். இனிமேல் ஆஸ்பிட்டல் பேக் ரவுண்டு தான். பாரதி டாக்டர், கண்ணம்மா அட்மின். இனிமேல் 12 மணி நேரமும் பாரதியும் கண்ணம்மாவும் சேர்ந்தே பயணிப்பார்கள்.

    ஒரு எபிசோடுக்கு 2 லட்சமா? சூப்பர் சிங்கர் பிரியங்கா பற்றி தீயாய் பரவும் தகவல்!

    ஒருபக்கம் வெண்பாவுக்கு அவரின் அம்மா ஷர்மிளா தீவிரமாக கல்யாண ஏற்பாடுகளை செய்து வருகிறார். யார் அந்த மாப்பிள்ளை? என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் வெயிட்டிங். மீண்டும் துர்கா என்ட்ரி இருக்கும் என்கின்றனர் ரசிகர்கள். சிலர், வருண் தான் வெண்பாவுக்கு aவரின் அம்மா பார்க்கும் மாப்பிளையாக இருப்பார் எனவும் கூறியுள்ளனர். மொத்தத்தில் யாராக இருந்தாலும் ட்விஸ்ட் சூப்பராக இருக்கும்.



    இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் இன்Raiய எபிசோடின் புரமோவில் ஆஸ்பிட்டலுக்கு எமர்ஜன்சி கேஸ் ஒன்று வருகிறது. தலையில் காயப்பட்ட பெண்ணை, அவரின் கணவர் அவசர அவசரமாக ஆஸ்பிட்டல் அழைத்து வருகிறார். அவரிடம் கண்ணம்மா எப்படி அடிப்பட்டது என கேட்கிறார். தெரியாமல் கீழே விழுந்து விட்டார் என அந்த நபர் சொல்கிறார். ட்ரீட்மெண்ட் தரும் போது பாரதியும் எப்படி அடிப்பட்டது என அந்த பெண்ணிடம் கேட்கிறார். அவர் வேற ஒரு காரணத்தை சொன்னதும் கண்னம்மாவுக்கு எதோ ஒரு தப்பு இருப்பது புரிகிறது.

    இது என்ன இப்படியொரு ட்விஸ்டா இருக்கு! தென்றல் வந்து என்னை தொடும் சீரியலில் திடீர் மாற்றம்

    இதைப்பற்றி கண்ணம்மா, பாரதியிடம் சொல்கிறார். கண்ணம்மாவின் பேச்சை கேட்டு, பாரதியும் அந்த பெண்ணிடம் உண்மையை விசாரிக்கிறார். கடைசியில் கண்ணம்மா சொன்னது போல், அவரின் கணவர் தான் அடித்து கொடுமை படுத்தியது தெரிய வருகிறது. இதனால் கோபமான பாரதி, மனைவியை சந்தேகப்படுவது தேசத்துரோகம் என்ற ரேஞ்சுக்கு க்சண்டை போடுகிறார். ஆனால் அவர் பேசும் அனைத்து டயலாக்குகளும் பாரதிக்கே பொருந்தும் என்பதை அவர் மறந்து விட்டார் போல.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja
    First published:

    Tags: Bharathi Kannama, TV Serial, Vijay tv

    அடுத்த செய்தி