• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • அப்பா.. அக்காவை ஓவர்டேக் செய்த நடிப்பு.. ரெமோ டூ பாரதி கண்ணம்மா லட்சுமி வாய்ப்பு கிடைத்த ரகசியம்!

அப்பா.. அக்காவை ஓவர்டேக் செய்த நடிப்பு.. ரெமோ டூ பாரதி கண்ணம்மா லட்சுமி வாய்ப்பு கிடைத்த ரகசியம்!

பாரதி கண்ணம்மா லட்சுமி

பாரதி கண்ணம்மா லட்சுமி

படத்தில் நடிக்கும் போது நடிகை கீர்த்தி சுரேஷ் ரக்சாவுடன் செம்ம ஜாலியாக பழகுவாராம்.

  • Share this:
    பாரதி கண்ணம்மா சீரியலில் சவுந்தர்ய லட்சுமியாக கலக்கும் சின்னத்திரை குழந்தை நட்சத்திரம் ரக்சா பற்றி பலருக்கும் தெரியாத தகவல்கள்.

    தமிழில் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல்களில் டிஆர்பியில் முதலிடத்தில் இருக்கும் சீரியல் என்றால் அது விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியல் தான். இதில் நடிக்கும் அனைத்து கதாப்பாத்திரங்களும் மக்கள் மத்தியில் பிரபலமாக உள்ளனர். அருண், ரோஷினி, ரூபாஸ்ரீ என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த சீரியலில் உள்ளது. குறிப்பாக 8 வருடத்திற்கு பிறகு என கதை நகர்ந்த பிறகு பாரதி – கண்ணம்மா மகளாக சவுந்தர்ய லட்சுமியாக நடிக்கும் குழந்தை நட்சத்திரம் ரக்சா, குறுகிய காலத்திலே பலரின் கவனத்தையும் பெற்றார். காரணம், அந்த சிறுமியின் நடிப்பு. குழந்தைகளும் பிடிக்கும் வகையில் தான் சவுந்தர்ய லட்சுமி கதாபாத்திரம் அமைக்கப்பட்டுள்ளது.

    இவர் பிரபல சீரியல் நடிகரான ஷியாமின் இரண்டாவது மகள். ஷியாம் கோலங்கள் மற்றும் தென்றல் போன்ற பல வெற்றி சீரியல்களில் நடித்துள்ளார்.தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் பூவே உனக்காக சீரியலில் நடித்து கொண்டிருக்கிறார்.ரக்சாவின் அக்காவான நிவாஷினி சின்னத் திரை தொடர்களில் நடித்துக் கொண்டு இருக்கிறார்.விஜய் டிவியில் ஒளிப்பரப்பான கல்யாணம் முதல் காதல் வரை தொடரில் பூஜா என்ற பெயரில் நடித்து இருந்தார். இத்தொடரில் இவரின் நடிப்பு மிகவும் பாராட்ட பட்டது. தற்போது செந்தூரப்பூவே சீரியலில் கனி ரோலில் நடித்து வருகிறார். இதுவும் விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் நெடுந்தொடர் தான்.

    ரக்சாவின் முதல் சினிமா பயணமே வெள்ளித்திரையில் தான் தொடங்கியது. இதற்கு முன் சிவகார்த்திகேயனின் ரெமோ படத்தில் சின்ன வேடத்தில் நடித்திருக்கிறார். கேன்சரால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் கதாபாத்திரத்தில் நடித்த சிறுமி இவர் தான். இந்த படத்தில் இவரின் நடிப்பு பல ரசிகர்களை கவர்ந்து இருந்தது. இந்த படத்தில் நடிக்கும் போது நடிகை கீர்த்தி சுரேஷ் ரக்சாவுடன் செம்ம ஜாலியாக பழகுவாராம். எப்போதுமே ரக்சாவை ஆசையாக தூக்கி கொஞ்சுவாராம். சிவகார்த்திகேயனும் அப்படித்தானாம்.



     




    Instagram இல் இந்த இடுகையை காட்டு





     

    BK Fans Club இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@bharathikannamma_fans)






    சொல்லப்போனால் ரக்சாவுக்கு இந்த படத்தில் வாய்ப்பு கிடைக்க காரணமே அவரின் அக்கா நிவாஷினி தான். இவர் சீரியல் டப்பிங்குக்காக ஸ்டியோ சென்ற போது அவருடன் ரக்சாவும் இருந்துள்ளார். அப்போது தான் விஜய் டிவி எடிட்டர், ரெமோ பட இயக்குனரிடம் ரக்சாவை பற்றி கூறி ஆடிஷனில் கலந்து கொள்ள வைத்தார். ஆடிஷனில் சிவாவுடன் சேர்ந்து நடித்தவர் உடனே செலக்ட் ஆகி விட்டார். இப்போது பாரதி கண்ணம்மாவில் லட்சுமியாக நடிப்பில் கலக்கி வருகிறார். சொல்லப்போனால் இவரின் அப்பா மற்றும் அக்காவுக்கே சினிமாவில் இவ்வளவு ரசிகர்கள் இல்லை. ஆனால் ரக்சாவுக்கு சோஷியல் மீடியாவில்க் ஃபேன்ஸ் பேட்ஜூம் உள்ளது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: