• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • அந்த சின்ன பொண்ணு ஹேமா கூட கண்ணம்மா பக்கம்.. கடைசியில பாரதி இப்படி இறங்கிட்டாரு!

அந்த சின்ன பொண்ணு ஹேமா கூட கண்ணம்மா பக்கம்.. கடைசியில பாரதி இப்படி இறங்கிட்டாரு!

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா

அப்படி என்றால் கூடிய விரைவில் சீரியல் முடிகிறதா? என்ற சந்தேகமும் ரசிகர்களுக்கு வருகிறது.

  • Share this:
    கண்ணம்மாவை நல்லவள் என பாரதி புரிந்து கொள்ளும் நேரம் வந்துவிட்டது போல. அடுத்தடுத்த சீன்களும் பாரதியின் புலம்பலும் அதை உறுதிப்படுத்துகிறது.

    விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் நம்பர் ஒன் லீட் சீரியல் என்றால் அது பாரதி கண்ணம்மா சீரியல் தான். கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் ஒளிப்பர தொடங்கிய இந்த சீரியல் தற்போது வரை டி.ஆர்.பியில் முதலிடத்தில் சென்று கொண்டிருக்கிறது. அதுமட்டுமில்லை சீரியலில் நாளுக்கு நாள் ரசிகர்களுக்கு போர் அடிக்காத திரைக்களமும் இதன் வெற்றிக்கு மிக முக்கிய காரணம். பாரதி - கண்ணம்மா வாழ்க்கையை மையமாக அமைக்கப்பட்ட இந்த தொடரில் தற்போது பாரதி, வெறுத்து ஒதுக்கி வைத்துள்ள கண்ணம்மாவை நல்லவள் என புரிந்து கொள்ளும் தருணம் வந்துவிட்டது போல் காட்சிகள் அரங்கேறி வருகின்றன. அதுமட்டுமில்லை அதை உறுதிப்படுத்தும் விதத்தில் பாரதி வெண்பாவிடம் புலம்பி தள்ளும் புரமோ வீடியோவும் தற்போது வெளியாகியுள்ளது.

    கதைப்படி கண்ணம்மா, மாசமாக இருக்க அவளின் குழந்தை தனது இல்லை என சந்தேகப்பட்டு பாரதி, கண்ணம்மாவை வீட்டை விட்டு வெளியே துரத்துகிறான். சுயமரியாதை கண்ணமா நிறைமாத கர்பிணியாக வீட்டை விட்டு போனவள் 2 குழந்தைக்கு தாயாகிறாள். ஆனால், பாரதியின் அம்மா செளந்தர்யா, தாயிடம் இருந்து ஒரு குழந்தையை பிரித்து தனது வீட்டில் வளர்க்கிறாள். ஒரு குழந்தை கண்ணம்மாவிடம் வளர்கிறது. தனது மகள் என்று தெரியாமல் ஆசிரமத்தில் இருந்து வந்த குழந்தையை என நினைத்து பாரதி ஹேமாவை வளர்க்கிறான். கண்ணம்மா தந்தை பற்றி எந்த உண்மையையும் கூறாமல் லட்சுமியை வளர்க்கிறாள். 8 வருடங்களுக்கு பிறகு காட்டப்பட்ட கதையில் கண்ணம்மா சென்னைக்கு வர பாரதி உட்பட அனைவரும் மீண்டும் சந்திக்கிறார்கள். இதற்கு இடையில் வெண்பாவின் சதி வேலை ஒருபக்கம் நடக்கிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இப்படியாக கதை செல்ல, சமீபத்தில் கண்ணம்மாவுக்கு இரட்டை குழந்தை உண்மை தெரிய வருகிறது. இன்னொரு குழந்தையை தேடி அலைகிறாள் கண்ணம்மா. இதனால் சீரியல் சூடுப்பிடித்து வேகமாக செல்கிறது. இந்த நேரத்தில் தான் பாரதி திருந்தி கண்ணம்மாவிடம் சேருவது போல் புரமோ வெளியாகியுள்ளது. அந்த புரமோவில் பாரதி வெண்பாவிடம் கண்ணம்மா ஏன் நல்லவளா? இருக்க கூடாது. அவளை நான் சந்தேகப்பட்டது தவறா? என்று புலம்பி தள்ளுக்கிறான்.



    இதை கேட்டு வெண்பா மீண்டும் ஷாக் ஆகிறாள். ஆனால் இந்த முறை பாரதியை கட்டுப்படுத்தி தடுக்க முடியாது என அவளுக்கே தெரிகிறது. வீட்டில் இருக்கும் எல்லோரும், ஏன் ஹேமா கூட கண்ணம்மா பக்கம் என பாரதி கண்ணீர் வடிக்கும் வீடியோ பார்ப்பவர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஒருவேளை பாரதியை தவறை உணர்ந்தால், அடுத்து கண்ணம்மா கூட சேருவது போல தான் கதை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி என்றால் கூடிய விரைவில் சீரியல் முடிகிறதா? என்ற சந்தேகமும் ரசிகர்களுக்கு வருகிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: