• HOME
 • »
 • NEWS
 • »
 • entertainment
 • »
 • அம்மாவுடன் குழந்தையை சேர்க்கும் முயற்சி... கண்ணம்மாவுக்கு ஓடி வந்து உதவும் அஞ்சலி!

அம்மாவுடன் குழந்தையை சேர்க்கும் முயற்சி... கண்ணம்மாவுக்கு ஓடி வந்து உதவும் அஞ்சலி!

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா

அஞ்சலி, ஹேமாவை கண்ணம்மா வீட்டுக்கு அழைத்துசெல்ல் பிளான் செய்கிறாள்.

 • Share this:
  ஹேமாவை நினைத்தே கவலை கொண்டு இருக்கும் கண்ணம்மாவுக்கு ,ஹேமாவை வீட்டுக்கு கூட்டிட்டு வந்து இன்ப அதிர்ச்சி கொடுக்கிறார் அஞ்சலி.

  விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியலில் ஏகப்பட்ட திருப்பங்கள் அரங்கேறி வருகின்றன. ஹேமாவை பற்றிய உண்மை தெரிந்த நாளிலிருந்து கண்ணம்மாவுக்கு சந்தோஷத்தில் ராத்திரி தூக்கமே வர மாட்டுது. ஆனால் சவுந்தர்யாவுக்கு பயத்திலே தூக்கம் போய்விடுகிறது. பாரதியிடம் எப்படி உண்மையை சொல்வது? பாரதி இந்த உண்மையை ஏற்றுக் கொள்வானா? என யோசித்து யோசித்து கவலைக் கொள்கிறார். பிரசவத்தில் இரட்டை குழந்தை பிறந்த விஷயமே இவ்வளவு நாள் கண்ணம்மாவுக்கு தெரியாமல் இருந்தது. ஆனால் சமீபத்தில் டாக்டர் ஒருவர் கண்ணம்மாவை பார்த்து உன் வயிற்றில் இருந்தது இரட்டை குழந்தை உண்மை சொல்ல, அந்த நாளிலிருந்து குழந்தையை தேடி அலைகிறாள் கண்ணம்மா. பாரதி, சவுந்தர்யா, துளசி என தனக்கு தெரிந்த எல்லோரிடமும் உதவி கேட்டவளுக்கு ஏமாற்றமே மிச்சம். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்ட வெண்பா, கண்ணம்மாவை வைத்து கேம் ஆடுகிறாள்.

  இது தெரியாமல் வெண்பாவை நம்பி விவாகரத்தில் கையெழுத்திட கண்ணம்மா முடிவு எடுத்துவிட்டாள். அதை தடுத்து நிறுத்த இத்தனை வருடங்களாக மறைத்து வைத்திருந்த உண்மையை சவுந்தர்யா போட்டு உடைக்கிறாள். அன்றிலிருந்து ஹேமாவை கேட்டு, மொத்த குடும்பத்திடமும் சண்டை போடுகிறாள் கண்ணம்மா. இதுவரை பாரதிக்கு அந்த உண்மை தெரியாது. ஹேமா மீது அளவு கடந்த அன்பு வைத்துள்ள பாரதிக்கு கண்டிப்பாக இந்த தகவல் அதிர்ச்சி தரும். ஆனாலும் ஹேமாவை ஒரு நாளும் பிரிய பாரதி தயாராக இல்லை. இது சவுந்தர்யாவுக்கு தெரியும் என்பதால் அவர் பாரதியை நினைத்து கவலைப்பட்டு, கண்ணம்மாவிடம் 4 நாள் டைம் வாங்குகிறார்.

  இந்நிலையில், இன்றைய எபிசோடில் ஹேமாவை பற்றி சவுந்தர்யா கவலைப்படுவதை எண்ணி அஞ்சலி, அகில், வேணு ஆகியோர் அவரை சமாதானம் செய்கின்றனர். நேற்று இரவு கண்ணம்மா ஃபோன் செய்து பேசிய விஷயத்தை சவுந்தர்யா , குடும்பத்திடம் சொல்கிறார். அப்போது அஞ்சலி ஒரு ஐடியா கொடுக்கிறார். அதன்படி பாரதியிடம் சாமர்த்தியமாக பேசி, ஹேமாவை அஞ்சலி வீட்டுக்கு கூடிட்டு போக அனுமதி கேட்கிறாள். ஆரம்பத்தில் தயங்கிய பாரதி பின்பு ஓகே சொல்கிறான். ஆனால் நானே காரில் வந்து டிராப் செய்கிறேன் என்றும் ட்விஸ்ட் கொடுக்கிறான். அஞ்சலி, ஹேமாவை கண்ணம்மா வீட்டுக்கு அழைத்துசெல்ல் பிளான் செய்கிறாள்.

  யார் சொல்லியும் கேட்காத பாரதி, அஞ்சலி மற்றும் ஹேமாவை வீட்டில் டிராப் செய்ய காரில் அழைத்து செல்கிறான். அந்த நேரம் பார்த்து அவசரமாக ஃபோன் வர, இருவரையும் வேற காரில் செல்லும்படி சொல்லிவிட்டு அங்கிருந்து அவசர அவசரமாக கிளம்புகிறான்.பின்பு அஞ்சலியும் ஹேமாவும் கண்ணம்மா வீட்டுக்கு செல்கிறார்கள். இரவில் இருந்து ஹேமா ஞாபகமாகவே இருக்கும் கண்ணம்மா, லட்சுமியிடம் கூட பேசாமல் கவலையில் இருக்கிறாள். அந்த நேரம் பார்த்து அஞ்சலியும் ஹேமாவும் வீட்டுக்கு போக அதை கனவு என நினைத்து கண்ணம்மா நம்ப மறுக்கிறாள். ஆனால் அஞ்சலி ”அக்கா அக்கா” என்று தொட்டு, கில்லி காட்டிய பின்பு தான் கண்ணம்மாவுக்கு இது கனவல்ல நிஜம் என்று தெரிகிறது.

  அபிஷேக் 2.0 வாக மாறிய பிரியங்கா... அப்ப இத்தனை நாள் அத்தனையும் நடிப்பா?

  கண்ணம்மாவை எதிரியாக பார்த்த அஞ்சலி, இன்று ஹேமாவை கண்ணம்மாவுடன் சேர்த்து வைக்க முயற்சி எடுப்பது, சவுந்தர்யாவுக்கு உதவுவது பெரும் ஆச்சரியத்தை தருகிறது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Sreeja Sreeja
  First published: