Home /News /entertainment /

ரசிகர்கள் இதை எதிர்பார்க்கல.. பாரதி கண்ணம்மாவில் முக்கிய மாற்றம்!

ரசிகர்கள் இதை எதிர்பார்க்கல.. பாரதி கண்ணம்மாவில் முக்கிய மாற்றம்!

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா

இப்போது ஆல்யா - ரோஷினி  இருவரும் சீரியலில் இல்லை.

    பாரதி கண்ணம்மா ரசிகர்களுக்கு வரும் வாரத்தில் முக்கிய ட்விஸ்ட் காத்துக் கொண்டிருக்கிறது. அதாவது நீண்ட இடைவெளிக்கு பிறகு மகா சங்கமம் எபிசோடில் இணையவுள்ளது  பாரதி கண்ணம்மா தொடர். அதுவும் எந்த சீரியலுடன் தெரியுமா?

    பாரதி கண்ணம்மா சீரியலில் இப்போது கதையின் சுவாரசியம் குறைந்து விட்டது என்பதை  ரசிகர்கள் எல்லா இடத்திலும் பதிவு செய்து வருகின்றனர். ரோஷினியின் விலகலுக்கு பின்பு சீரியல் டி.ஆர்.பியில் அடி வாங்கியது. ஆனால் கதையின் சுவாரசியம் நம்மிடம் அந்த குறையை மறக்க செய்தது. பாரதி தான் உண்மையான அப்பா என லட்சுமி கண்டுப்பிடித்தது, ஹேமா பற்றிய உண்மையை கண்ணம்மா கண்டுப்பிடிப்பது என திரைக்கதை பயங்கர ஸ்பீடாக பயணித்தது. அதே போல் வினுஷாவின் நடிப்பும் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தது.

    எல்லாத்துக்கும் நீதான் காரணம்.. கண்ணம்மாவை திட்டி தீர்க்கும் பாரதி!

    தற்போது சீரியலில் வெண்பா - ரோகித் கதை ஒருபக்கம் சென்று கொண்டிருக்கிறது. அதே போல் ஆஸ்பிட்டலில் ராமன், ஜானகி அம்மா கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. ஜானகி அம்மாவுக்கு இதய அறுவை சிகிச்சை செய்ய போகிறார் பாரதி. இந்த ட்ராக்கால் பாரதி கண்ணம்மாவின் டி.ஆர்.பி ரேட்டிங் சற்று  குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதை சரி செய்யும் விதமாக பாரதி கண்ணம்மா தொடர் வரும் வாரத்தில் மகா சங்கமம் எபிசோடில் ராஜா ராணி 2 சீரியலுடன்  இணைய இருப்பதாக தகவல்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.

    அமீர் - பாவ்னி பற்றி பரவும் அந்த வதந்தி உண்மையா?

    இந்த 1 மணி மகா சங்கமம் எபிசோடில் நீண்ட இடைவெளிக்கு பிறகு ராஜா ராணி - பாரதி கண்ணம்மா தொடர் இணையவுள்ளது. இந்த 2 சீரியலின் இயக்குனரும் பிரவீன் தான். பாரதி கண்ணம்மாவில் ரோஷினி நடித்துக் கொண்டிருந்த போது ராஜா ராணி - பாரதி கண்ணம்மா ரசிகர்கள் மகா சங்கமம் எபிசோடை ரசித்து இருந்தார்கள். அதே போல் ராஜா ராணி சீரியலிலும் அப்போது  ஆல்யா லீட் ரோலில் நடித்து  இருந்தார்.



     




    View this post on Instagram





     

    A post shared by Tamil Serials (@tamilserialexpress)






    இந்நிலையில் இப்போது ஆல்யா - ரோஷினி  இருவரும் சீரியலில் இல்லை. வினுஷா மற்றும் ரியா தான் இப்போது லீட் ரோலில் நடித்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்களின் ஃபுல் எனர்ஜியுடன்  வரும் வாரத்தில் மகா சங்கமம் எபிசோடை ரசிகர்கள் எதிர்பார்க்கலாம் என கூறப்படுகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: Bharathi Kannama, TV Serial, Vijay tv

    அடுத்த செய்தி