Home /News /entertainment /

குழந்தைகளிடம் மாட்டி கொண்ட பாரதியும் கண்ணம்மாவும்.. சீரியலில் எதிர்பாராத ட்விஸ்ட்!

குழந்தைகளிடம் மாட்டி கொண்ட பாரதியும் கண்ணம்மாவும்.. சீரியலில் எதிர்பாராத ட்விஸ்ட்!

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா

ஒருவேளை ஹேமாவிடம் எல்லா உண்மையும் சொல்லிவிட்டால் சீரியல் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து விடும்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியலில் இத்தனை ஆண்டுகளாக மறைத்து வைத்திருக்கும் ரகசியத்தை குழந்தைகள் கண்டுப்பிடித்து ஷாக் கொடுக்கின்றனர். இதனால் தற்போது ஒரே வீட்டில் இருக்கும் கண்ணம்மாவுக்கும் பாரதிக்கும் அடுத்த பிரச்சனை உருவாகி விட்டது.

    சீரியல் டி.ஆர்.பி வரிசையில் முதலிடத்தில் இருந்த சீரியல் பாரதி கண்ணம்மா. விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் இந்த சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பு. பழைய கண்ணம்மாவாக நடித்த ரோஷினிக்கு இந்த சீரியல் மிகப் பெரிய வாழ்க்கையை சின்னத்திரையில் ஏற்படுத்தி கொடுத்தது. இதனால் அவருக்கு சினிமா வாய்ப்புகள் குவிய தொடங்கின. இந்த நேரத்தில் தான் அவர் சீரியலை விட்டு விலகினார். இதனால் பாரதி கண்ணம்மா சீரியல் மிகப் பெரிய சரிவை சந்தித்தது.

    இதையும் படிங்க.. பிக் பாஸில் ஓயாத நிரூப் - பிரியங்கா சண்டை.. வெளியேற போவது யார்?

    டி.ஆர்.பியில் 7 ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டது. இந்த சரிவில் இருந்து சீரியலை தூக்கி வர இயக்குனர் பிரவீன் பெரும் முயற்சி செய்தார். தற்போது அதில் வெற்றியும் கண்டுள்ளார். புதிய கண்ணம்மாவாக நடிக்கும் வினுஷா தேவியை பலரும் ரசிக்க தொடங்கி விட்டனர். அதுமட்டுமில்லை கதையிலும் புது புது ட்விஸ்டுகள் அரங்கேறி வருகின்றன. அதன்படி இன்றைய எபிசோடில் பாரதி - கண்ணம்மா மகளான ஹேமாவுக்கு உண்மை பற்றி தெரிய வருவது போல் இன்றைய புரமோ வெளியாகியுள்ளது.



    ஹேமா வீட்டில் இருக்கும் லட்சுமி திடீரென்று காணாமல் போகிறார். மொத்த குடும்பமும் லட்சுமியை தேடி அலைகின்றனர். அப்போது பதற்றத்தில் அகிலன், “அண்ணிக்கு ஃபோன் பண்ணி கேட்குறேன்”ன்னு ஹேமா இருப்பதை கவனிக்காமல் உளறி விடுகிறார். இதை கவனித்த ஹேமா, “சமையல் அம்மா உங்களுக்கு அண்ணியா? அப்ப எங்க அப்பாவுடைய மனைவியா அவங்க?” ன்னு பதில் சொல்ல முடியாத கேள்வியை கேட்டு மொத்த குடும்பத்திற்கும் ஷாக் கொடுக்கிறார்.

    இதையும் படிங்க.. மரணத்திற்கு பிறகும் ரசிகர்கள் மத்தியில் வாழும் விஜே சித்ரா!

    ஒருவேளை ஹேமாவிடம் எல்லா உண்மையும் சொல்லிவிட்டால் சீரியல் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து விடும். ஹேமாவும் லட்சுமியும் சேர்ந்து பாரதியையும் கண்ணம்மாவையும் சேர்ப்பது போல் கதை பயணிக்க தொடங்கலாம் என்கின்றனர் ரசிகர்கள்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja
    First published:

    Tags: Bharathi Kannama, TV Serial, Vijay tv

    அடுத்த செய்தி