• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • சேர போகும் அம்மா - மகள்.. ஹேமாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் கண்ணம்மா!

சேர போகும் அம்மா - மகள்.. ஹேமாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் கண்ணம்மா!

பாரதி கண்ணம்மா ஹேமா

பாரதி கண்ணம்மா ஹேமா

கண்ணம்மாவும் மீண்டும் ஒன்று சேர்ந்து விடக்கூடாது என்பதில் கங்கனம் கட்டிக்கொண்டு வெண்பா அலைகிறாள்.

  • Share this:
    பாரதி கண்ணம்மா சீரியலில் மகளாக நடித்து வரும் ஹேமா பிறந்தநாளுக்கு ரோஷ்ணி சாக்லெட் கொடுத்து சர்பிரைஸ் கொடுத்துள்ளார்.

    தமிழ் சீரியல்களில் தற்போதைய டிரெண்டில் படு ஹிட் சீரியல் வரிசையில் பாரதி கண்ணம்மா இருக்கிறது. இந்த சீரயலில் நாயகியாக நடித்து வரும் ரோஷ்ணிக்கு இது தான் முதல் சீரியல். தன்னுடைய சமத்தான நடிப்பால், ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்பை பெற்றுவிட்ட அவருக்கு இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூகவலைதளங்களிலும், ஆயிரக்கணக்கான பாலோயர்ஸ் இருக்கின்றனர். அவர்களுக்காக அவ்வப்போது சேட்டை வீடியோக்களை ரோஷ்ணி பதிவிட்டு வருகிறார்.

    அண்மையில் சூட்டிங்ஸ்பாட்டில் நடந்த ஒரு சர்பிரைஸான வீடியோ ஒன்றையும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த சீரியலில், கண்ணம்மாவின் குழந்தையாக நடிக்கும் ஹேமாவுக்கு, பிறந்த நாள். அவரின் பிறந்த நாளுக்கு சாக்லெட் வாங்கிக் சென்ற ரோஷ்ணி, சர்பிரைஸாக கொடுத்து அவரை வாழ்த்தியுள்ளார். ஹேமாவும், ரோஷ்ணியின் சர்பிரைஸால் மகிழ்ச்சியடைந்தார்.

    ஹேமாவின் பிறந்த நாளுக்கு வாழ்த்து சொல்லிய ரசிகர்கள், சர்பிரைஸ் கிஃப்ட் கொடுத்த ரோஷ்ணியையும் மனதார பாராட்டியுள்ளனர். பாரதி கண்ணம்மா சீரியல் பொறுத்தவரை, டாப் ஸ்பீடில் போய்க் கொண்டிருக்கிறது என கூறலாம். ஏனென்றால், இவ்வளவு நாட்களாக தனக்கு ஒரே ஒரு மகள் மட்டுமே நினைத்துக் கொண்டிருந்த கண்ணம்மாவுக்கு, இரண்டு குழந்தைகளை பெற்றது தெரிந்துவிட்டது. இன்னொரு மகள் யார்? என தெரிந்து கொள்வதில் ஆர்வமாக இருக்கும் கண்ணம்மா, வெண்பா கூறும் விவாகரத்து பத்திரத்திலும் கையெழுத்து போட தயாராகிறாள்.

    அந்தநேரத்தில் கண்ணம்மாவின் வீட்டிற்கு வரும் மாமியார் சௌந்தர்யா, கண்ணம்மாவின் எடுத்திருக்கும் முடிவைக் கேட்டு அதிர்ச்சியடைகிறாள். இனிமேல், உண்மையை மறைத்து பிரயோஜனமில்லை என்ற முடிவுக்கு வரும் சௌந்தர்யா, தான் எடுத்து வளர்த்து வரும் ஹேமா தான் உன்னுடைய 2வது மகள் என்ற ரகசியத்தை போட்டுடைத்து விடுகிறார். பிரசவத்தின்போது கண்ணம்மா இரு பெண் குழந்தைகளை பெற்றெடுத்ததையும், ஒரு குழந்தையை யாருக்கும் தெரியமால் தான் எடுத்து வளர்த்து வந்ததையும் கூறுகிறார்.



     




    Instagram இல் இந்த இடுகையைக் காண்க





     

    Tamil Serials இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@tamilserialexpress)






    இதனைக் கேட்டு அதிர்ச்சியடையும் கண்ணம்மா, இவ்வளவு நாட்கள் பேசி பழகி வந்த ஹேமா, தான் பெற்றெடுத்த குழந்தை என்பதை நினைத்து உணர்ச்சிப் பொங்க அழுகிறாள். ஹேமாவை, கண்ணும் கருத்துமாக வளர்த்து வரும் பாரதிக்கு, தன் குழந்தையைத் தான் இவ்வளவு நாட்களாக வளர்த்து வருகிறோம் என்பது இன்னும் தெரியவில்லை. இதற்கிடையே, பாரதியும், கண்ணம்மாவும் மீண்டும் ஒன்று சேர்ந்து விடக்கூடாது என்பதில் கங்கனம் கட்டிக்கொண்டு வெண்பா அலைகிறாள்.

    குடும்பத்தில் விரிசல்.. சண்டைபோடும் முல்லை! கதிர் யார் பக்கம்?

    ஒவ்வொரு எபிசோடும் டாப் ஸ்பீடில் மூவாகிக் கொண்டிருப்பதால், ரசிகர்கள் அனைவரும் பாரதி கண்ணம்மா எபிசோடை ஒவ்வொரு நாளும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: