• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • விவாகரத்து தான் பாரதி - கண்ணம்மா முடிவே.. குண்டை தூக்கி போடும் வெண்பா!

விவாகரத்து தான் பாரதி - கண்ணம்மா முடிவே.. குண்டை தூக்கி போடும் வெண்பா!

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா சீரியல் முடிய போகுது, பாரதி கண்ணம்மா 2 வர போகிறது என ஏகப்பட்ட செய்திகள் உலா வந்து கொண்டிருக்க

  • Share this:
    பாரதி கண்ணம்மா சீரியலில் பாரதியிடம் இருந்து கண்ணம்மா விவாகரத்து வாங்க வேண்டும் என்ற குண்டை தூக்கி போட்டுள்ளார் வெண்பா.

    விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியலில் இன்று வெண்பா தூக்கி போட்டு இருக்கும் குண்டு கதையின் ஓட்டத்தையே மாத்திவிடும் போல இருக்கு. பாரதி கண்ணம்மா சீரியல் முடிய போகுது, பாரதி கண்ணம்மா 2 வர போகிறது என ஏகப்பட்ட செய்திகள் உலா வந்து கொண்டிருக்க, இன்றைய எபிசோடில் பாரதியையும் கண்ணம்மாவையும் நிரந்தரமாக பிரிக்க வெண்பா பிள்ளையார் சுழி போட்டுவிட்டார்.

    இன்றைய எபிசோடில் நடந்தவை, வெண்பா கொடுத்த மாத்திரையை சாப்பிடலாமா? வேண்டாமா? என சிந்தனையுடனே அஞ்சலி ரூமில் இருக்கிறார். முதல் நாள் மாத்திரை போடும் போதே அவரின் மீது பல்லி விழுந்தது, அஞ்சலிக்கு மிகப் பெரிய சந்தேகத்தை எழுப்பி விட்டது. ஏற்கெனவே பிரசவம், குழந்தை, நெஞ்சு வலி பிரச்சனையில் இருக்கும் அஞ்சலிக்கு வெண்பா கொடுத்த மாத்திரை மீது ஏதோ சந்தேகம் வந்து வந்து போக, சரியான நேரத்தில் வருகிறார் மாமியார் செளந்தர்யா.

    வந்தவர், மாத்திரையை பார்த்து என்ன மாத்திரை? யார் கொடுத்தது? என அடுத்தடுத்த கேள்வியை நீட்டுகிறார். ”பாரதி மாமா” தான் என்று அஞ்சலி சொன்னதும் அமைதி ஆனவர், உடனே அஞ்சலியை மாத்திரை போடும் படி வற்புறுத்த அஞ்சலி மாத்திரை போடுகிறார். திடீரென்று ஒரு நிமிஷம் அஞ்சலி என்றவர் இந்த மாத்திரையை உங்கிட்ட கொடுத்தது யாரு? என கேட்க வெண்பா என்று பதில் வந்ததும், “அவளே அரைகுறை டாக்டர் , அவ பேச்ச கேட்காதுன்னு” டபுள் டோஸ் மாத்திரையை எடுத்துவிட்டு ஒரு மாத்திரையை மட்டும் அஞ்சலியை போட சொல்கிறாள். அஞ்சலி மாத்திரை போட்ட பின்பு அங்கிருந்து போகிறார். ஆனால் வழக்கம் போல் அஞ்சலிக்கு மாத்திரை போட்டதும் நெஞ்சு வலி வந்து விடுகிறது.

    இந்த பக்கம் வீட்டில் இருக்கும் வெண்பாவுக்கு கண்ணம்மா மீது பயங்கர கோபம். எதுக்குமே கண்ணம்மா ரியாக்ட் செய்யல அப்படின்னு கண்ணம்மாவுக்கு ஃபோன் செய்கிறாள். ஆனால் கண்ணம்மா, ஃபோனை கட் செஞ்சதும் கோபத்துல வாய்ஸ் மெசேஜ் அனுப்பி வழக்கம் போல் குழந்தையை வைத்து மிரட்டுகிறாள். இதனால் கடுப்பான கண்ணம்மா நேரா, வெண்பா வீட்டுக்கே போய் கழுத்தை நெறித்து மிரட்டுகிறாள்.அதுமட்டுமில்லை, குழந்தையை வைத்து என்னை மிரட்டுற என்னத்தான் உன் திட்டம், உனக்கு என்னதான் வேணும் அப்படின்னு வெண்பாவிடம் கேட்க, குண்டை தூக்கி போடுகிறார் வெண்பா.



    அதாவது, 8 வருடமாக பாரதியும் கண்ணம்மாவும் பிரிஞ்சி இருந்தாலும் சட்டப்படி இரண்டு பேரும் விவாகரத்து வாங்கலையாம். அதனால ஊர்ல எல்லோரும் கண்ணம்மா புருஷன் பாரதி அப்படின்னு தான் சொல்றாங்களாம். அதனால் சட்டப்படி கண்ணம்மா, பாரதியை விவாகரத்து பண்ணிட்டா குப்பத்துல இருக்குற இன்னொரு குழந்தையை உன்கிட்ட கொடுக்குறேன் அப்படின்னு வெண்பா கண்ணம்மாவை மிரட்டுகிறாள். இனி முடிவு கண்ணம்மாவிடம் தான்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: