Home /News /entertainment /

அது மட்டும் நடக்கவே கூடாது.. மீண்டும் பாரதி - கண்ணம்மா குடும்பத்தில் நுழையும் வெண்பா!

அது மட்டும் நடக்கவே கூடாது.. மீண்டும் பாரதி - கண்ணம்மா குடும்பத்தில் நுழையும் வெண்பா!

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா

இந்த பக்கம் ஹேமா , அம்மாவின் முகத்தை பார்க்க ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்.

    பாரதி கண்ணம்மா சீரியலில் மறுபடியும் பாரதி - கண்ணம்மா குடும்ப விஷயத்தில் தலையிடுகிறார் வெண்பா. இந்த முறை வெண்பாவை வரசொன்னதே பாரதி தான்.

    பாரதி கண்ணம்மா சீரியலில் இந்த வாரமும் மகா சங்கமம் தொடர்கிறது. ராஜா ராணி சரவணன் - சந்தியா திருமண நாளன்று ஹேமா, லட்சுமிக்கு பிறந்த நாள். இந்த 2 விசேஷங்களையும் ஒரே இடத்தில் பிரம்மாண்டமாக கொண்டாட குடும்பத்தில் இருப்பவர்கள் பிளான் செய்கின்றனர். அதன்படி இந்த வருடம் ஹேமா - லட்சுமி பிறந்த நாள் கொண்டாட்டம் ஹோட்டலில் வைக்கப்படுகிறது. இதற்கு சிவகாமி அம்மா குடும்பத்தில் இருந்து சந்தியா - சரவணன் வருகின்றனர். கூடவே மற்றொரு சிறப்பு விருந்தினரும் வருகிறார்.

    எங்களின் முதல் குழந்தை.. அனிதா சம்பத் உணர்ச்சி பதிவு!

    அவர் வேற யாருமில்லை வெண்பா தான். மொத்த குடும்பமும் ஒன்றாக சேர்ந்து இருப்பது வெண்பாவுக்கு தெரிந்து விட்டது. அவர்களின் சந்தோஷத்தை கெடுக்க பிளான் செய்கிறார். உடனே பாரதிக்கு ஃபோன் செய்து சென்டிமெண்டாக பேசுகிறார். வழக்கம் போல் வெண்பாவின் பேச்சை கேட்டு ஆளே  மாறிவிடும் பாரதி உடனே கிளம்பி பர்த்டே பார்டிக்கு வர சொல்கிறார். வெண்பாவும் சாந்தியை அழைத்து கொண்டு அங்கே  வருகிறார்.



    எங்களை ஃபோன் பண்ணி மிரட்டுராங்க.. பிரபல சின்னத்திரை ஜோடி கொடுத்த ஷாக்!

    வழக்கம் போல் வெண்பாவை பார்த்ததும் அகிலன் கத்த தொடங்குகிறார். மொத்த குடும்பமும்  வெண்பாவை பார்த்து முறைக்கின்றனர். ஆனால் வெண்பா செம்ம கூலாக பாரதி தான் தன்னை வரச்சொன்னார் என பதில் கூறுகிறார். யாரிடமும் அதற்கு எதிர்பேச்சு இல்லை.

    இந்த பக்கம் ஹேமா,  அம்மாவின் முகத்தை பார்க்க ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார். பிறந்த நாள் அன்று அம்மாவின்  ஃபோட்டோவை காட்டுகிறேன்  என பாரதி சத்தியம் செய்து  கொடுக்க அந்த பர்த்டே கிஃப்டுக்காக  ஹேமா வெயிட்டிங். அவரை போலவே லட்சுமியும் ஒருபக்கம் ஆர்வமாக இருக்கிறார். ரசிகர்களும் பாரதி யாரை காட்ட போகிறார் என தெரிந்து கொள்வதில் ஆர்வமாக இருக்கின்றனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: Bharathi Kannama, TV Serial, Vijay tv

    அடுத்த செய்தி