”ஹேமா ஏன் என் பொண்ணா இருக்க கூடாது”... கண்ணம்மா சந்தேகப்பட இவ்வளவு காரணங்கள் இருக்காம்!

பாரதி கண்ணம்மா

நிச்சயமாக கண்ணம்மா உண்மையை கண்டுப்பிடித்துவிடுவார் என்பது தான்.

 • Share this:
  பாரதி கண்ணம்மா சீரியலில் ஹேமா தன் மகளாக ஏன் இருக்க கூடாது என்பதற்கு கண்ணம்மா தரும் அடுத்தடுத்த பதில்கள் சவுந்தர்யாவை வாயடைக்க வைத்துள்ளது. ஒருவேளை உண்மையை கண்ணம்மா கண்டுபிடித்துவிட்டால் சவுந்தர்யாவை காலத்திற்கும் மன்னிக்க மாட்டார் போல.

  விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பிரைம் சீரியலான  பாரதி கண்ணம்மாவில் கிட்டத்தட்ட உண்மையை நெருங்கிவிட்டார் கண்ணம்மா. 9 ஆண்டுகளாக கண்ணம்மாவுக்கு தெரியாமல் சவுந்தர்யா மறைத்த உண்மை, அஞ்சலியின் வளைக்காப்பில் வெட்ட வெளிச்சம் ஆகியது. போதாத குறைக்கு டாக்டர் சொன்ன தகவலும் கண்ணம்மாவை குழப்ப, ஹேமா ஏன் என் பொண்ணா இருக்க கூடாதுன்னு கண்ணம்மாவுக்கு சந்தேகம் வர தொடங்கி விட்டது. இதன் விளைவு நிச்சயமாக கண்ணம்மா உண்மையை கண்டுப்பிடித்துவிடுவார் என்பது தான். இன்றைய எபிசோடிலும் அதை உறுதி செய்யும் காட்சிகள் தான் இடம்பெற்றுள்ளன. அதாவது கண்ணம்மா வந்து விசாரித்ததை துளசி ஃபோன் செய்து சவுந்தர்யாவிடம் சொல்கிறார். கண்ணம்மாவை பார்ப்பதற்கு பாவமாக இருந்ததாகவும் வறுத்தப்படுகிறார். துளசிக்கு தோன்றுவது கூட ஏன் சவுந்தர்யாவுக்கு தோன்றவில்லை. கண்ணம்மா இப்படி குழந்தையை தேடி அலைவது, பைத்தியம் பிடித்த மாதிரி ரோடு ரோடா சுத்துவது சவுந்தர்யாவுக்கு பாவமா தெரியலையா?

  அந்த நேரம் பார்த்து அந்த இடத்தில் பாரதி வர பேச்சை மாற்றி சமாளிக்கிறார் சவுந்தர்யா. துணிக்கடைக்கு போன பாரதியும், - ஹேமாவும் லட்சுமிக்கும் சேர்த்து ட்ரெஸ் எடுத்துட்டு வர்றாங்க. உடனே சவுந்தர்யா முகத்தில் படு சந்தோஷம். மொத்த குடும்பமும் பாரதிக்கு லட்சுமி மீது பாசம் இருக்கு, ஆசை இருக்குன்னு கதை சொல்ல பாரதி ஒரே வார்த்தையில் ஹேமாவுக்காக எடுத்தேன். அப்ப லட்சுமியும் ஞாபகத்துக்கு வந்தா எடுத்தேன்னு பேச்சை முடித்து வைக்கிறார். மீண்டும் பாரதியை வெறுப்பேற்ற சவுந்தர்யா, அந்த ட்ரெஸை நீயே லட்சுமிக்கு கொண்டு போய் கொடுத்துட்டு வா அப்படின்னு சொல்ல கடுப்பான பாரதி பாய் சொல்லிட்டு அங்கிருந்து கிளம்புகிறான்.

  நடந்ததை எல்லாம் ரீவைண்ட் பண்ணி வெண்பா வீட்டில் புலம்ப, துளசியை கண்ணம்மாவும் , சவுந்தர்யாவும் ஏன் அடிக்கடி சந்தித்து பேசுகிறார்கள் என யோசிக்க தொடங்குகிறாள். துளசியை விசாரித்தால் ஏதாவது கிடைக்குமா? என யோசித்து துளசியை பார்க்க ஆஸ்பிட்டல் கிளம்புகிறாள். அதுக்குள்ள கண்ணம்மா திரும்பவும் துளசியை பார்க்க ஆஸ்பிட்டல் போகிறாள்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  கண்ணம்மாவை பார்த்த துளசி ஷாக் ஆக, திரும்பவும் என்ன கண்டுபிடிச்சாளோன்னு பயந்துகிட்டே கண்ணம்மாவிடம் பேச தொடங்குகிறாள். அந்த நேரம் பார்த்து வெண்பா அங்க வர, வழக்கம் போல் இரண்டுபேரும் பேசிக்கிறத மறைந்திருந்து கேட்கிறாள். அதில் தனக்கு 2 குழந்தை பிறந்ததை கண்ணம்மா சொல்ல, வெண்பா படு ஷாக் ஆகி இவ்வளவு நாள் இது நமக்கு தெரியாம போச்சேன்னு வசனம் பேசுகிறாள். அதுமட்டுமில்லை, ஹேமா ஏன் என் குழந்தையாக இருக்க கூடாதுன்னு கண்ணம்மா சொல்லும் காரணங்கள் துளசியை திணற வைக்கிறது.

  ஒரே நிறம், ஒரே பிறந்த தேதி, 2 பெண் குழந்தை, மாமியார் மறைக்கும் உண்மை, தாய் பாசம் என கண்ணம்மா சொல்லும் அனைத்து காரணங்களும் அப்படியே பொருந்த வெண்பா, துளசி இரண்டு பேருகிட்டையும் பதில் இல்லை. இந்த பக்கம் சவுந்தர்யா, கண்ணம்மாக்கு செய்த துரோகத்தை எண்ணி கண்ணீர் விட்டு அழுகிறார். பின்ன அம்மா- குழந்தையை பிரித்த சாபம் சும்மா விடுமான்னு அவரின் கணவர் கோடிட்டு காட்ட, சவுந்தர்யா தப்பை ஒத்துக் கொள்கிறார். அந்த தவறை சரிசெய்ய அவரின் கணவர் கண்ணம்மாவிடம் எல்லா உண்மையும் சொல்லிவிடு என்கிறார். ஆனால் சவுந்தர்யாவோ கண்ணம்மாவுக்கு அஞ்சி மீண்டும் மீண்டும் தப்பை மறைக்க பார்க்கிறார். இவர் உண்மையை சொல்வதற்குள் கண்டிப்பாக கண்ணம்மாவே உண்மையை கண்டுப்பிடித்துவிடுவார் போல.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Sreeja Sreeja
  First published: