பாரதி கண்ணம்மா சீரியலில் ஹேமாவுக்கு பாரதி - கண்ணம்மா பற்றிய எல்லா உண்மைகளும் தெரிய வரும் நேரம் வந்துவிட்டது. தனது அம்மா உயிரோடு தான் இருக்கிறாரா? என பாரதியிடமே கேட்கிறார் ஹேமா. அதற்கு பாரதி சொல்ல போகும் பதில் என்ன? என்பதற்காக தான் ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மாவை விவாகரத்து செய்வதில் உறுதியாக இருக்கிறார் பாரதி. சட்டப்படி வக்கீல் நோட்டீஸூம் கண்ணம்மா வீட்டுக்கு அனுப்பிவிட்டார். இதை பார்த்த கண்ணம்மா அதிர்ச்சி ஆகிறார். இதுப் பற்றி லட்சுமிக்கு தெரிந்து விட்டது. 10 வருடங்களாக இருவரும் பிரிந்தே இருந்தாலும் சட்டப்படி பிரிய வேண்டும் என்பதே பாரதியின் விருப்பம். விவாகரத்து வேண்டாம் என்று பாரதியிடம் சவுந்தர்யா, வேணு, அஞ்சலி, அகிலன் என எல்லோரும் சொல்லிவிட்டார்கள்.ஆனால் பாரதி கேட்பதாக இல்லை இப்படி இருக்கையில் நேற்றைய எபிசோடில் லட்சுமியிடம் ஹேமா ஒரு சந்தேகத்தை கேட்கிறார்.
6 சீரியல்களில் நடித்து இருக்கும் பிரபல நடிகர்.. யாருன்னு கெஸ் பண்ண முடியுதா?
அதாவது கண்ணம்மாவுக்கு விவாகரத்து கொடுப்பது பற்றி, லாயரிடம் பாரதி பேசிக் கொண்டிருந்ததை ஹேமா கேட்டு விட்டார். அம்மா இறந்த பிறகு யாருக்கு டைவர்ஸ் தர போகிறார் டாடி? என யோசிக்கிறார் ஹேமா. இந்த சந்தேகத்தை லட்சுமியிடமும் சொல்கிறார். அப்போது தான் லட்சுமிக்கு ஹேமா அம்மா இறந்து விட்டார் என்ற விஷயமே தெரிய வருகிறது. ஹேமாவின் இந்த கேள்விக்கு லட்சுமியிடம் பதில் இல்லை. அதே நேரம், டைவர்ஸ் கொடுக்க போவது சமையல் அம்மா கண்ணம்மாவுக்கு தான் என லட்சுமியால் சொல்லவும் முடியவில்லை. இதற்கான பதிலை டாக்டர் அப்பாவிடமே கேளு என்கிறார்.
குழப்பத்துடன் இருக்கும் ஹேமா, நேராக பாரதி ஆஸ்பிட்டலுக்கு சென்று இதுப்பற்றி கேட்கிறார். இதுக்குறித்த புரமோ வெளியாகியுள்ளது. ஹேமாவுக்கு இந்த விஷயம் எப்படி தெரிந்தது என பாரதி அதிர்ச்சி ஆகுகிறார். ஹேமாவின் அடுத்தடுத்த கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் திணறுகிறார்.
வருங்கால மனைவியின் பிறந்த நாளை பிரம்மாண்டமாக கொண்டாடிய சீரியல் நடிகர்!
கோபத்தில் பாரதி, கண்ணம்மா பற்றிய ரகசியத்தை ஹேமாவிடம் சொல்லி விடுவாரா? ஹேமாவின் கேள்விக்கு பாரதியின் ரியாக்ஷன் என்ன என்பது இன்றைய எபிசோடில் தெரிய வரும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Bharathi Kannama, TV Serial, Vijay tv