ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

ஹேமாவுக்கு எல்லா உண்மையும் தெரிஞ்சு போச்சா? பாரதி கண்ணம்மாவில் புது ட்விஸ்ட்!

ஹேமாவுக்கு எல்லா உண்மையும் தெரிஞ்சு போச்சா? பாரதி கண்ணம்மாவில் புது ட்விஸ்ட்!

பாரதி  கண்ணம்மா

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா சீரியலில் ஹேமாவும் லட்சுமியும் சேர்ந்து தான் பாரதியையும் கண்ணம்மாவையும் சேர்த்து வைப்பார்கள்

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

பாரதி கண்ணம்மா சீரியலில், தனது அம்மா கண்ணம்மாவை பற்றி கேள்வி கேட்டு ஒட்டுமொத்த குடும்பத்திற்கும் ஷாக் கொடுக்கிறார் ஹேமா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இந்த வாரம் பரபரப்பான ட்விஸ்ட் கொடுத்து இயக்குனர் டி.ஆர்.பியை எகிற வைத்து விட்டார். அதே போல்  பாரதி கண்ணம்மாவிலும் ஏதாவது அதிரடி திருப்பம் தர வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கிறார் இயக்குனர். ஏற்கெனவே பாக்கியலட்சுமி சீரியல் கடந்த 2 வாரமாக டாப் கியரில் சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில், பாரதி கண்ணம்மாவில் அடுத்த திருப்பம் அரங்கேறவுள்ளது. அதாவது ஹேமாவுக்கு பாரதி - கண்ணம்மா பற்றிய உண்மை தெரிய வரும் நேரம் வந்துவிட்டது. அடுத்த வாரத்தில் இந்த திருப்பத்தை சீரியலில் எதிர்பார்க்கலாம் என்கின்றனர் ரசிகர்கள். காரணம், கடந்த சில நாட்களாக கண்ணம்மாவை பற்றி பாரதி, பாட்டி, சித்தப்பா, சித்தி ஆகியோரிடம் கேட்டு வருகிறார் ஹேமா.

நடிகை நயன்தாராவை தெரியும்.. ஆங்கர் டயானாவை தமிழ் ரசிகர்களுக்கு தெரியுமா?

பாரதி,  கண்ணம்மாவை டைவர்ஸ் செய்ய போகும் விஷயம் ஹேமாவுக்கு தெரிந்து விட்டது. இதை பற்றி நேராக பாரதியிடமே ஹேமா கேட்டார். வழக்கம் போல் ஏதோ ஏதோ சொல்லி சமாளித்து அனுப்பி விட்டார் பாரதி. இப்படி இருக்கையில் இன்றைய எபிசோடில் மீண்டும் தனது அம்மாவை பற்றி கேட்கிறார் ஹேமா. ஏற்கெனவே லட்சுமிக்கு பாரதி தான் அப்பா என்ற உண்மை தெரிந்து விட்டது. ஆனால் ஹேமா தான் சொந்த தங்கை என்ற விஷயம் மட்டும் தெரியாது. இப்படி இருக்கையில் இப்போது ஹேமாவும் தனது அம்மாவை பற்றி கேட்க ஆரம்பித்து விட்டார்.

லோகேஷ் கனகராஜும் பழைய பாடல்களும்!

ஹேமாவுக்கு பதில் சொல்ல முடியாமல் குடும்பத்தினர் திணறுகின்றனர். அம்மா உயிருடன் இருக்கிறாரா? அவரை ஏன் அப்பா டைவர்ஸ் செய்கிறார்? அம்மாவை நான் பார்க்க வேண்டும் பாட்டி என அடம் பிடிக்கிறார். குழந்தைக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் அனைவரும் முழிக்கின்றனர். இந்த பக்கம் பாரதி, கண்ணம்மாவுக்கு டைவர்ஸ் தர கோர்டுக்கு செல்ல தயாராக இருக்கிறார். இதை நினைத்து தூங்காமல் தவிக்கிறார் லட்சுமி. இந்த 2 குழந்தைகளுக்காக இருவரும் சேர வேண்டும் என குடும்பத்தில் இருப்பவர்கள் நினைக்கிறார்கள்.

இணையத்தில் உலா வரும் தகவலின் படி ஹேமாவும் லட்சுமியும் சேர்ந்து தான் பாரதியையும் கண்ணம்மாவையும் சேர்த்து வைப்பார்கள் என்று தெரிகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Bharathi Kannama, TV Serial, Vijay tv