பாரதி கண்ணம்மா சீரியலில் இன்றைய எபிசோடில் பாரதியிடம் தனது அம்மா கண்ணம்மா பற்றி கேட்கிறார் ஹேமா. என்ன சொல்ல போகிறார் பாரதி?
தொடரும் என்பதற்கு பதிலாக சுபம் போட்டால் நன்றாக இருக்கும் என கதறுகின்றனர் பாரதி கண்ணம்மா சீரியல் ரசிகர்கள். அந்த அளவுக்கு சீரியலின் கதையோட்டம் சுவாரசியம் இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது. பாரதி,
கண்ணம்மாவுக்கு விவாகரத்து தரப்போவதாக கடந்த 6 மாதமாக மிரட்டி கொண்டிருக்கிறார். கோர்ட் உத்தரவின் பேரில் தான் கண்ணம்மா வீட்டில் 1 மாதம் தங்கியும் இருந்தார். ஆனால் கடைசியில் உத்தரவை மதிக்காமல் வீட்டுக்கு வந்து விட்டார். கோர்ட் விவகாரம் பாதியிலே நின்று போனது. இப்போது மீண்டும் அந்த கதையை கையில் எடுத்துள்ளார் இயக்குனர். கண்ணம்மாவுக்கு டைவர்ஸ் தரப்போவதாக மொத்த குடும்பத்திடமும் சொல்லிவிட்டார் பாரதி.
நீண்ட வருடம் கழித்து சன் டிவி சீரியலில் நடிக்க வரும் ரஜினி பட நடிகர்!
இந்த விஷயம்
லட்சுமிக்கும் தெரியும். ஆரம்பத்தில் இதை கேட்டு உடைந்து போன கண்ணம்மா, வழக்கம் போல் இதுவும் பழகி போய்விடும் என்று கண்டுக்கொள்ளாமல் விடுகிறார். பாரதி இதுக் குறித்து தனது லாயரிடம் பேசிக் கொண்டிருந்ததை ஹேமா கேட்டு விட்டார். கண்ணம்மா - பாரதி ரகசியம் ஏற்கெனவே லட்சுமிக்கு தெரிந்து விட்டது. அதே போல் ஹேமாவுக்கும் தெரிய வருமென ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
கணவர் குறித்து முதன் முதலாக பேசிய விஜய் டிவி ஆங்கர் பிரியங்கா! விவாகரத்து வதந்தி உண்மையா?
கடைசியில் ஹேமா இதை பற்றி பாரதியிடம் கேட்க பாரதி அன்றிலிருந்து ஹேமாவிடம் பேசுவதையே தவிர்த்து விட்டார். ஹேமாவுக்கு தனது அம்மா உயிருடன் இருக்கிறார் என்ற சந்தேகம் வந்து விட்டது. இதுப்பற்றி சவுந்தர்யா, அகிலன், அஞ்சலிடம் கேட்கிறார். ஆனால் அவர்கள் பதில் சொல்ல தயங்குகின்றனர். இந்நிலையில், இன்றைய எபிசோடில் பாரதியிடமே நேருக்கு நேர் கேள்விகளை அடுக்குகிறார் ஹேமா.
அம்மா பற்றி, டைவர்ஸ் பற்றி ஹேமாவின் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் தவிக்கிறார் பாரதி. இதன் முடிவில் தான் கடைசியில் டைவர்ஸ் விஷயத்தை கைவிடுவதாக ஹேமாவுக்கு சத்தியம் செய்கிறார். மொத்தத்தில் மீண்டும் பாரதி - கண்ணம்மா விவாகரத்து விஷயம் தள்ளி வைக்கப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.