Home /News /entertainment /

ஹேமா விஷயத்தில் கோபத்தின் உச்சத்தில் கண்ணம்மா... என்ன செய்ய போகிறார் பாரதி?

ஹேமா விஷயத்தில் கோபத்தின் உச்சத்தில் கண்ணம்மா... என்ன செய்ய போகிறார் பாரதி?

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா

பாரதி மட்டும் வேற ஒரு பெண்ணை ஹேமாவின் அம்மா என காண்பித்தால் வீட்டில் கொலை விழும் என மிரட்டுகிறார்

    பாரதி கண்ணம்மா சீரியலில் அடுத்த வார எபிசோடுக்கான பரபரப்பு புரமோ தற்போது வெளியாகியுள்ளது. ஹேமாவுக்கு கண்ணம்மா பற்றிய உண்மை தெரிய வரும் நேரம் நெருங்கி விட்டது.

    பாரதி - கண்ணம்மாவின் 9 ஆண்டு ரகசியம் லட்சுமிக்கு ஏற்கெனவே தெரிந்து விட்டது. கண்ணம்மா - பாரதி பிரிந்ததற்கான காரணத்தை தவிர மற்ற எல்லா உண்மைகளும் லட்சுமிக்கு தெரியும். எல்லாம் தெரிந்தும் லட்சுமி தனது அம்மா கண்ணம்மாவுக்காக பாசத்தை மறைத்துக் கொண்டு அமைதியாக போகிறர். ஆனால் ஹேமாவுக்கு இதுவரை எந்த உண்மையும் தெரியாது.ஆனால் சமையல் அம்மாவின் பெயர் கண்ணம்மா என்பது ஹேமாவுக்கு தெரிந்த பின்பு தனது அம்மா யார்? அவர் பார்க்க எப்படி இருப்பார்? என்பதை தெரிந்து கொள்ள ஹேமாவுக்கு ஆசை வருகிறது. கூடவே சந்தேகமும் வருகிறது.



    குழந்தை பிறந்து 1 வருடம் கூட ஆகவில்லை.. வில்லி வெண்பாவை பார்த்து ஆச்சரியப்படும் ரசிகர்கள்!

    இவ்வளவு நாளாக ஹேமா தனது அம்மா இறந்து விட்டர் என்று தான் நினைத்துக் கொண்டிருந்தார். பாரதியும் அப்படி தான் சொல்லி வைத்து இருந்தார்.இதனால் தான் பாரதிக்கு இன்னொரு கல்யாணம், செய்ய வேண்டும் என்ற முடிவுக்கே ஹேமா வந்தார். ஆனால் இப்போது ஹேமாவுக்கு தனது அம்மா உயிருடன் தான் இருக்கிறார் என்று தோன ஆரம்பித்து விட்டது. இதன் தொடர்ச்சியாக பாரதியிடம் தனது பிறந்த நாள் பரிசாக அம்மாவை பார்க்க வேண்டும் என செக் வைக்கிறார் ஹேமா.

    பிரிய போகிறார்களா சக்தி - ஜனனி? எதிர் நீச்சலில் இயக்குனர் வைக்கும் ட்விஸ்ட்!

    தற்போது வெளியாகி இருக்கும் புரமோவில் பாரதியிடம் பிறந்த நாள் பரிசாக ஹேமா,  அம்மாவை பார்க்க வேண்டும் என்கிறார். பாரதியும் ஓகே சொல்லி விடுகிறார். ஆனால் அம்மாவாக பாரதி யாரை காட்டுவார்? என்பது தெரிய வில்லை. இப்படி இருக்கையில் இந்த விஷயம் குறித்து சவுந்தர்யாவிடம் பேசுகிறார் கண்ணம்மா.



    அப்போது, பாரதி மட்டும் வேற ஒரு பெண்ணை ஹேமாவின் அம்மா என காண்பித்தால் வீட்டில் கொலை விழும் என மிரட்டுகிறார் கண்ணம்மா. சவுந்தர்யாவுக்கு அதிர்ச்சி தாங்கவில்லை. இப்படி தான் ஏற்கெனவே லட்சுமி பிறந்த நாளில் அப்பாவை காட்டுகிறேன் என கண்னம்மா சத்தியம் செய்து கடைசியில் அது ஃபுஸ் ஆனது. ஹேமா பிறந்த நாளில் என்ன நடக்கும்? என தெரியவில்லை.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: Bharathi Kannama, TV Serial, Vijay tv

    அடுத்த செய்தி