Home /News /entertainment /

ஹேமா விஷயத்தில் பாரதிக்கு சவால் விடும் கண்ணம்மா. மறுபடியும் முதல்ல இருந்தா!

ஹேமா விஷயத்தில் பாரதிக்கு சவால் விடும் கண்ணம்மா. மறுபடியும் முதல்ல இருந்தா!

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா சீரியல் முடிய போவதாக ஏகப்பட்ட தகவல்கள் இணையத்தில் உலா வருகின்றன.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    ஹேமாவை  லட்சுமியிடம் இருந்து பிரிக்க பாரதி நினைக்க அது முடியாது என்று சவால் விடுகிறார் கண்ணம்மா.

    பாரதி கண்ணம்மா சீரியல் முடிய போவதாக ஏகப்பட்ட தகவல்கள் இணையத்தில் உலா வருகின்றன. அதற்கு ஏற்ப கதையும் பயங்கர ஸ்பீடாக செல்கிறது. ஒருபக்கம் வெண்பாவுக்கு ரோகித்துடன் நிச்சயதார்த்தம் முடிந்து விட்டது. அதே போல் லட்சுமிக்கும் எல்லா உண்மையும் தெரிந்து விட்டது. லட்சுமிக்கு தெரிந்த உண்மை பாரதிக்கும் தெரிந்து விட்டது. இப்படி 9 வருடங்களாக மறைத்து வைத்த அனைத்து உண்மையும் வெளியே வர தொடங்க கண்ணம்மா - பாரதி சண்டை மட்டுமே முடிவே இல்லாமல் தொடர்கிறது. தற்போது லட்சுமியும் ஹேமாவும்  ஒரே ஸ்கூலில் படிக்கின்றனர். இதனால் அடிக்கடி கண்ணம்மா, லட்சுமி, ஹேமா, பாரதி சந்திக்கும் சூழ்நிலை ஏற்படுகிறது.

    பாக்கியலட்சுமி அமிர்தா சொன்ன குட் நியூஸ்!

    இதை விரும்பாத பாரதி ஹேமாவின் ஸ்கூலை மாற்ற முடிவு செய்கிறார். ஹேமாவை வேற ஸ்கூலில் சேர்க்க பாரதி நினைக்க இதை பற்றி சவுந்தர்யா ஹேமாவிடம் சொல்கிறார். உடனே ஹேமா, கண்ணம்மாவுக்கு ஃபோன் செய்து அழுகிறார். லட்சுமி இல்லாமல் என்னால் இருக்க முடியாது, நான் வேற ஸ்கூலுக்கு போக மாட்டேன் என கெஞ்சுகிறார். உடனே பாரதியிடம் இதுப்பற்றி பேசுகிறார் கண்ணம்மா. ஆனால் பாரதி வழக்கம் போல் ஹேமா விஷயத்தில் நீ தலையிட முடியாது என்கிறார். கண்ணம்மாவின் குழந்தை தான் ஹேமா என தெரிந்த பின்பும் பாரதியின் பேச்சில் எந்த மாற்றமும் இல்லை.

    கலர்ஸ் தமிழில் காஜல் பசுபதி.. மாஸான போலீஸ் ரோல் மூலம் என்ட்ரி!

    இதனால் கடுப்பான கண்ணம்மா உடனே அடுத்த சவாலை விடுகிறார். ஒருமுறை விட்ட சவால் தான் இத்தனை ஆண்டு கதைக்கு அடிதளமாக அமைந்தது. இப்போது மறுபடியும் அடுத்த சவாலை விடுகிறார். அதாவது தன்னை மீறி ஹேமாவை வேற  ஸ்கூலில் சேர்க்க முடியாது. கடைசி நேரத்தில் நீங்களே உங்கள் முடிவை மாற்றி கொள்வீர்கள் என்கிறார். பாரதியும் இந்த சவாலை ஏற்கிறார். அடுத்து என்ன என்பது வரும் வாரத்தில் தெரிய வரும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: Bharathi Kannama, TV Serial, Vijay tv

    அடுத்த செய்தி