Home /News /entertainment /

பாரதி கண்ணம்மா சீரியல் நடிகையுடன் சிம்பு.. இந்த சந்திப்பு எப்ப நடந்தது?

பாரதி கண்ணம்மா சீரியல் நடிகையுடன் சிம்பு.. இந்த சந்திப்பு எப்ப நடந்தது?

பாரதி கண்ணம்மா சிீரியல் நடிகை

பாரதி கண்ணம்மா சிீரியல் நடிகை

சமீபத்தில் வெளியான சிம்புவின் வெந்து தணிந்தது காடு சூப்பர் டூப்பர் ஹிட் அடித்துள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை ஃபரீனா நடிகர் சிம்புவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாவில் ஷேர் செய்துள்ளார்.

    பாரதி கண்ணம்மா சீரியலில் வில்லியாக மிரட்டி கொண்டிருக்கும் ஃபரீனா நிகழ்ச்சி தொகுப்பாளர் என்பது அனைவருக்கும் தெரியும். புதுயுகம், சன் டிவி, ஜீ தமிழில் ஒருசில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்த ஃபரீனாவுக்கு சின்னத்திரை வாய்ப்பு தேடி வந்தது. உடனே நடிக்க தொடங்கினார். கலர்ஸ் தமிழில் ஒளிப்பரப்பான தறி சீரியலில் நடிகையாக அறிமுகம் ஆனார். அதன் பின்பு பாரதி கண்ணம்மா சீரியலில் வெண்பா என்ற வில்லி அவதாரம் எடுத்தார். வெண்பா ரோல் ஃபரீனாவுக்கு மிகப் பெரிய ரீச்சை வாங்கி தந்தது.

    என்னாச்சு? ஷாக்கில் ரசிகர்கள்.. முடிவுக்கு வரும் ரச்சிதாவின் சீரியல்!



    இடையில் கலர்ஸ் தமிழ் சீரியலில் ஃபரீனா நடித்து வந்தார். கடைசியில் அதில் இருந்து விலகி விட்டார். இப்போது முழுக்க முழுக்க பாரதி கண்ணம்மா தொடரில் நடித்து வருகிறார். இதுத்தவிர மிஸ்டர் அண்ட் மிர்ஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியிலும் ஃபரீனா தனது கணவருடன் சேர்ந்து கலக்கி வருகிறார். ஃபரீனாவுக்கு சில மாதங்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது. சில நாட்களுக்கு ரெஸ்ட் எடுத்தவர் இப்போது மீண்டும் தனது கெரியரில் கவனம் செலுத்தி வருகிறார்.

    உயிருள்ளவரை உஷா... படப்பெயரைப்போல வாழ்க்கையை அமைத்துக் கொண்ட டி.ஆர்.

    இந்நிலையில் ஃபரீனா மீண்டும் தனது பழைய வேலையை கையில் எடுத்துள்ளார். அதாவது சினிமா தொடர்பான நிகழ்ச்சிகளை மீண்டும் தொகுத்து வழங்கி வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் வெளியான சிம்புவின் வெந்து தணிந்தது காடு சூப்பர் டூப்பர் ஹிட் அடித்துள்ளது. பாக்ஸ் ஆப்ஸில் கலக்கி கொண்டிருக்கும் வெந்து தணிந்தது காடு படத்தின்  சக்சஸ் மீட்டிங் சென்னையில் நடந்தது. இந்த நிகழ்ச்சியை ஃபரீனா தான் தொகுத்து வழங்கினார்.



     




    View this post on Instagram





     

    A post shared by farina azad (@farina_azad_official)






    அப்போது நடிகர் சிம்புடன் சேர்ந்து ஃபரீனா செல்பி எடுத்து இருக்கிறார். இந்த புகைப்படத்தை இன்ஸ்டாவில் ஷேர் செய்து, “ஃபேன் கேர்ள் மொமண்ட்” என்ற கேப்ஷனும் கொடுத்து இருக்கிறார். ரசிகர்கள் பலரும் இந்த ஃபோட்டோவுக்கு லைக்ஸ் கொடுத்து வருகின்றனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: Bharathi Kannama, Simbu, TV Serial, Vijay tv

    அடுத்த செய்தி