• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • பாரதியுடன் சேர நினைக்கும் கண்ணம்மா.. ஒருவேளை கதை இனிமே இப்படி போகுமோ?

பாரதியுடன் சேர நினைக்கும் கண்ணம்மா.. ஒருவேளை கதை இனிமே இப்படி போகுமோ?

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா

வெண்பாவை வெறுப்பேற்ற தான் கண்ணம்மா இப்படி செய்கிறாள் என்றாலும் கண்ணம்மாவின் நடவடிக்கையிலும் மாற்றம் தெரிகிறது

  • Share this:
    பாரதி கண்ணம்மா சீரியலில் வர வர கண்ணம்மாவின் நடவடிக்கையில் ஏற்பட்டுள்ள மாற்றம் கதைக்களத்தை மாற்றி அமைக்கும் என ரசிகர்கள் நினைக்கின்றனர்.

    விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியலில் ஏகப்பட்ட திருப்பங்கள் அரங்கேறி வருகின்றன. 8 ஆண்டுகளுக்கு முன்பு புதைந்து போன கதையை மீண்டும் தோண்டி எடுக்கிறாள் கண்ணம்மா. பிரசவத்தில் இரட்டை குழந்தை பிறந்த விஷயமே இவ்வளவு நாள் கண்ணம்மாவுக்கு தெரியாமல் இருந்தது. ஆனால் சமீபத்தில் டாக்டர் ஒருவர் கண்ணம்மாவை பார்த்து உன் வயிற்றில் இருந்தது இரட்டை குழந்தை உண்மை சொல்ல, அந்த நாளிலிருந்து குழந்தையை தேடி அலைகிறாள் கண்ணம்மா. பாரதி, சவுந்தர்யா, துளசி என தனக்கு தெரிந்த எல்லோரிடமும் உதவி கேட்டவளுக்கு ஏமாற்றமே மிச்சம். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்ட வெண்பா, கண்ணம்மாவை வைத்து கேம் ஆடுகிறாள்.

    இது தெரியாமல் வெண்பாவை நம்பி விவாகரத்தில் கையெழுத்திட கண்ணம்மா முடிவு எடுத்துவிட்டாள். ஆனால் அதற்கு சவுந்தர்யா மூலம் கண்ணம்மாவுக்கு எல்லா உண்மையும் தெரிந்து விட்டது. அதே நேரம் 8 வருடம் கழித்து கண்ணம்மாவை நிரந்தரமாக பிரிய வேண்டும் என்று பாரதியும் முடிவு எடுத்துவிட்டான். அதற்கு கண்ணம்மாவின் சித்தி பாக்கியலட்சுமியிடம் உதவி கேட்டு இருக்கிறான் பாரதி. நேற்றைய தினம் கண்ணம்மாவிடம் இதைப்பற்றி பேச அவரின் சித்தி முயற்சித்து எடுத்தார். இந்நிலையில் இன்று கண்ணம்மாவின் சித்தி பாக்கியாவை, சவுந்தர்யா யதார்த்தமாக சந்தித்துவிட, வாய் தவறுதலாக அவரும் பாரதியின் விவாகரத்து பற்றியும் 1 கோடி ரூபாய் பற்றி வாய் விடுகிறார். இதனால் கோபத்தில் கொந்தளித்த சவுந்தர்யா அவசர அவசரமாக வீட்டுக்கு செல்கிறார்.

    இந்த பக்கம் பாரதி, ஹேமாவுக்கு லன்ச் எடுத்துக் கொண்டு செல்கிறான். ஆனால் ஹேமா சமையல் அம்மாவான கண்ணம்மாவை பற்றி தான் கேட்கிறாள். சொல்லி வைத்து போல் கண்ணம்மா, வந்து ஹேமாவுக்கு சிக்க்சன் கிரேவி தருகிறாள். ஹேமாவுக்காக இதை எல்லாம் பார்த்து அமைதியாக இருக்கிறான் பாரதி. இந்த பக்கம் லட்சுமி, ஹேமாவுக்கு அவர் அப்பா சாப்பாடு ஊட்டுவது போல் ஏன் என் அப்பா வரவில்லை என வருத்தமாக பேசுகிறாள். சமீப காலமாக பாரதியிடம் கண்ணம்மா, நெருக்கமாக பேசுவது, பாரதி மீது அக்கறை கொள்வது என கதை செல்கிறது. வெண்பாவை வெறுப்பேற்ற தான் கண்ணம்மா இப்படி செய்கிறாள் என்றாலும் கண்ணம்மாவின் நடவடிக்கையிலும் மாற்றம் தெரிகிறது. இதனால் பாரதி கண்ணம்மா சீரியல் வரும் நாட்களில் வேறு கோணத்தில் பயனிக்க வாய்ப்புள்ளது என ரசிகர்கள் நினைக்கின்றனர்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: