• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • ரசிகர்களுக்கு மிகப் பெரிய ஏமாற்றம்... பாரதி கண்ணம்மா சீரியலில் நடக்க போகும் அதிரடி மாற்றம்!

ரசிகர்களுக்கு மிகப் பெரிய ஏமாற்றம்... பாரதி கண்ணம்மா சீரியலில் நடக்க போகும் அதிரடி மாற்றம்!

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா

டிக்டாக் புகழ் வினுஜா தேவி கண்ணம்மா கேரக்டரில் நடிக்க இருப்பதாக புதிய தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது.

  • Share this:
    பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மாவாக ரோஷினியை பார்த்து பழகிவிட்ட ரசிகர்களால், அவர் விலக போவதாக வெளியாகி உள்ள தகவலை ஏற்று கொள்ள முடியவில்லை.

    திங்கள் - சனி வரை இரவு 9 மணிக்கு சின்னத்திரை ரசிகர்கள் பெரும்பாலும் விரும்பி பார்த்து வரும் சீரியலாக இருந்து வருகிறது ஸ்டார் விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா. மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் இந்த சீரியலை ரசிகர்கள் பார்த்து தொடர்ந்து ஆதரவளித்து வரும் நிலையில், ரசிகர்களை ஏமாற்றமடைய செய்யும் வகையிலான சில தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

    பாரதி கண்ணம்மா சீரியலுக்கு மிகப்பெரிய பிளஸ்ஸாக இருப்பது கண்ணம்மா கேரக்டரில் நடித்து வரும் நடிகை ரோஷினி ஹரிபிரியன் தான். சீரியலின் கதை பரபரப்பாக சென்று கொண்டிருந்தாலும் அதை சுவாரஸ்யமாக்குவது நடிகை ரோஷினியின் யதார்த்த நடிப்பு மற்றும் முகபாவனைகள் தான்.

    கணவன் பாரதி தன்னை சந்தேகப்படும் போதும் தொடர்ந்து வெறுப்பை மட்டுமே காட்டும் போதும் அவர் தவிப்பது, அதே சமயம் தன் ஒழுக்கத்தை சந்தேகப்படும் பாரதிக்கு ஆவேசமுடன் பதிலடி கொடுப்பது, உறவினர்களின் ஆதரவின்றி தன்னந்தனியே வாழ்க்கையை போராடி வாழ்வது, தனக்கு இரண்டாவது குழந்தை பிறந்துள்ள விஷயம் தெரிந்து அந்த குழந்தைக்காக ஏங்கி தவிப்பது என பல சூழ்நிலைகேற்ப விதவிதமாக நடித்து ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்று இருக்கிறார் நடிகை ரோஷினி.

    சமீப காலமாக விஜய் டிவி சீரியல் நட்சத்திரங்கள் பலருக்கு வெள்ளித்திரையில் கிடைத்து வரும் வாய்ப்புகள் அவர்களையும், அவர்களது ரசிகர்களையும் மகிழ்ச்சியடைய செய்துள்ளன. சமீபத்தில் தான் இதே சீரியலில் அகில் கேரக்டரில் நடித்து வந்த அகிலன் சினிமா வாய்ப்பு காரணமாக சீரியலை விட்டு பாதியிலேயே வெளியேறினார்.

    இந்த பட்டியலில் லேட்டஸ்டாக ரோஷினி சேர்ந்துள்ளார் என்ற தகவல் ரசிகர்களுக்கு ஒரு வகையில் மகிழ்ச்சியையும், மற்றொரு வகையில் ஏமாற்றத்தையும் கொடுத்துள்ளது. ஏனென்றால் சீரியலில் இவர் வரும் சீன்கள் சுவாரஸ்யமாகவும், விறுவிறுப்பாகவும் இருக்கும். கிட்டத்தட்ட 2 வருடங்களுக்கு மேல் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் சீரியலில் கண்ணம்மாவாக ரோஷினியை பார்த்து பழகிவிட்ட ரசிகர்களால், அவர் விலக போவதாக வெளியாகி உள்ள தகவலை ஏற்று கொள்ள முடியவில்லை.

    புலம்பி தீர்த்து வருகின்றனர், பல ரசிகர்கள் சீரியலையே முடித்து விடுங்கள் என்று கோரி இருக்கின்றனர். ரசிகர்களின் புலம்பல் சீரியல் டீமின் காதில் விழாமல் இல்லை. எனவே ரோஷினி இல்லாத குறையை போக்க அவர் சாயலிலேயே இருக்கும் சிலரை கண்ணம்மா கேரக்டரில் நடிக்க வைக்க பரிசீலித்து வருகின்றனர். அந்த வகையில் டிக்டாக் புகழ் வினுஜா தேவி கண்ணம்மா கேரக்டரில் நடிக்க இருப்பதாக புதிய தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது.

    டிக் டாக் வினுஜா


    அப்படியே நடிகை ரோஷினியின் ஸ்கின் டோனில் இருக்கும் வினுஜா, கண்ணம்மா கேரக்டருக்கு சரியான மாற்றாக இருப்பார் என கூறப்படுகிறது. அதே நேரம் யாரடி நீ மோகினி புகழ் நட்சத்திராவும், கண்ணம்மா கேரக்டருக்கு பரிசீலிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் பரவி வருகின்றன. ஆனால் இது குறித்து இதுவரை அதிகாரபூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: