• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • பாரதி கண்ணம்மா சீரியலில் ஏற்பட்ட முக்கிய ட்விஸ்ட்...வெண்பா பிரசவத்திற்கு செல்வது தான் காரணமா?

பாரதி கண்ணம்மா சீரியலில் ஏற்பட்ட முக்கிய ட்விஸ்ட்...வெண்பா பிரசவத்திற்கு செல்வது தான் காரணமா?

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா

பொய் சொல்லி வெண்பா ஏமாற்றி வந்ததால் கடுப்பான கண்ணம்மா, பிளாண் போட்டு வெண்பாவை போலீசில் சிக்க வைக்கிறார். 

  • Share this:
    பாரதி கண்ணம்மா சீரியலில் வில்லி வெண்பா போலீசாரால் கைது செய்யப்படுகிறார். வெண்பா பிரசவத்திற்கு செல்வதால் அவரின் ரோல் இப்படி முடிக்கப்படுகிறதா? என கேள்வியும் எழுந்துள்ளது.

    விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியல் அடுத்தடுத்த டிவிஸ்டுகளால் ரசிகர்களை திணறடித்து வருகிறது.  பாரதியும், கண்ணம்மாவும் அண்மைக்காலமாக மீண்டும் சேர்ந்து பயணிக்கும் சூழல் உருவாகியுள்ளது. இது வெண்பாவுக்கு பிடிக்கவில்லை. அவர்கள் இருவரும் சேர்ந்துவிடக்கூடாது என்பதில் குறியாக இருக்கும் வெண்பா, அதற்கான சூழ்ச்சிகளை விடாமல் அரங்கேற்றிக் கொண்டிருக்கிறார்பாரதிக்கும், கண்ணம்மாவுக்கும் மனம் வருத்தம் ஏற்பட்டு பிரிந்ததில் இருந்து, கண்ணம்மாவின் பக்கமே இருந்தார் சவுந்தர்யா.கண்ணம்மாவுக்கு இரட்டை குழந்தை பிறந்ததை கேள்விப்பட்ட சவுந்தர்யா, மருத்துவமனைக்கு நேரில் சென்று அவளுக்கு தெரியாமல் ஒரு குழந்தை எடுத்துக்கொண்டு வந்து தானே வீட்டில் வளர்த்தார்.

    இப்படி பல பிரச்சனைகள் சீரியலில் அரங்கேறி வருகிறது. கண்ணம்மாவுக்கு இன்னொரு குழந்தை ஹேமா தான் என்ற உண்மையையும் தெரிந்து விட்டது. தற்போது ஹேமாவை பாரதியுடன் இருக்கும்படி விட்டு விட்டார். இந்நிலையில் தான் தொடர்ந்து கண்ணம்மாவை மிரட்டி வந்தாள் வெண்பா.  பொய் சொல்லி வெண்பா ஏமாற்றி வந்ததால் கடுப்பான கண்ணம்மா, பிளான் போட்டு வெண்பாவை போலீசில் சிக்க வைக்கிறார்.

    இந்த காட்சிகள் தான் இன்றைய எபிசோடில் ஒளிப்பரப்பாகவுள்ளன. சட்டத்துக்கு எதிராக கருகலைப்பில் ஈடுப்பட்ட வெண்பாவை, கையும் களவுமாக போலீசாரிடம் சிக்க வைக்கிறார் கண்ணம்மா. இதனால் வெண்பாவை போலீஸ் மருத்துமனையில் வைத்து கைது செய்கின்றனர். இதை பாரதி, அகில், சவுந்தர்யா ஆகியோர் டிவி நியூஸில் பார்த்து அதிர்ச்சி ஆகுகின்றனர். 



    கதை செல்லும் விதத்தை பார்த்தால், வெண்பா இத்துடன் ஜெயில் அடைக்கப்படுவது போல் காட்சிகள் இடம்பெறுகின்றன. இதனால் வெண்பா பிரசவத்திற்காக சீரியலில் இருந்து கேப் எடுக்க போகிறாரா? என சந்தேகம் எழுந்துள்ளது. தற்போது 8வது மாதம் என்பதால் வெண்பா ரோலில் நடிக்கும் ஃபரீனாவுக்கு கண்டிப்பாக ஓய்வு தேவைப்படுகிறது. இதனால் அவர் கொஞ்ச காலம் சீரியலில் இருக்க மாட்டார் என தெரிகிறது.

     



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: