ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

பாரதி கண்ணம்மாவில் தண்டனை தரும் கண்ணம்மா... இது பாரதிக்கா? இல்லை எங்களுக்கா?

பாரதி கண்ணம்மாவில் தண்டனை தரும் கண்ணம்மா... இது பாரதிக்கா? இல்லை எங்களுக்கா?

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா

கண்ணம்மா சீரியலில் நேற்றைய எபிசோடு வரை பாரதிக்கும் கண்ணம்மாவுக்கும் அதிகமான ரொமான்ஸ் காட்சிகள் மட்டுமே காட்டப்பட்டு வருகின்றன

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  விஜய் டிவியில் வித்தியாசமான கதையை கொண்டு பார்வையாளர்களை கவர்ந்து வந்த நெடுந்தொடர் பாரதிகண்ணம்மா. இந்த தொடர்  சமீபகாலமாக ரசிகர்களிடம் சலிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தன்மானம் மிக்க பெண், சுயமாரியாதையாக வாழ நினைப்பவள், கஷ்டப்பட்டு கவுரமாக வாழும் சிங்கிள் மதர் கண்ணம்மா என மேம்பட்ட திரைக்கதையில் சீரியல் சென்று கொண்டிருந்தது. ஆனால் இப்போது கதை அப்படியே தலைகீழாக மாறிவிட்டது. வர வர சீரியலில் ரொமான்ஸ் மட்டுமே பார்க்க முடிகிறது. ஒருவேளை இதுப்போன்று கதைக்களம் மாறுகிறது என்பதால் தான் பழைய கண்ணம்மா ரோஷினி சீரியலில் இருந்து விலகினாரா? என்ற் கேள்வியும் எழுகிறது.

  பாரதி கண்ணம்மா சீரியலில் இதுவரை ரசிகர்கள் அதிகம் திட்டியது வில்லி வெண்பாவை தான். வில்லி கதாபாத்திரத்தில் நடித்த நடிகை பரீனா கதையை வேற லெவலில் எடுத்து சென்றார். வெண்பா கூறும் அனைத்து கட்டுக்கதைகளையும் நம்பி மனைவி மீது பாரதி சந்தேகப்பட்டு வீட்டை விட்டு வெளியே அனுப்பினார். கண்ணம்மாவிற்கு பிறந்த குழந்தை தன்னுடையது அல்ல என்று பாரதியின் சந்தேகம் முத்தி போன பிறகு டாக்டர் பாரதியை திட்டாத ரசிகர்கள் இல்லை. மிகவும் முட்டாளம் தனமாக இருந்தாலும் டாக்டர் பாரதி கடைசி வ்ரை DNA டெஸ்ட் எடுக்காமல் கதையை 1 வருடமாக நகர்த்தியதை கூட மக்கள் ஏற்றுக் கொண்டார்கள்.

  ஆனால் இப்போது நிலைமை அப்படியில்லை. ரோஷினியின் விலகலுக்கு பிறகு வினுஷா புதிய கண்ணம்மாவாக சீரியலில் நடித்து வருகிறார். இவர் அறிமுகம் ஆனா காட்சியில் இருந்து நேற்றைய எபிசோடு வரை பாரதிக்கும் கண்ணம்மாவுக்கும் அதிகமான ரொமான்ஸ் காட்சிகள் மட்டுமே காட்டப்பட்டு வருகின்றன. இதை ரசிகர்கள் விரும்பவில்லை என்பது புரமோவில் பகிரப்பட்டும் கருத்துக்களை வைத்து புரிந்து கொள்ள முடிகிறது.

  ' isDesktop="true" id="636555" youtubeid="zAnBhHoieVQ" category="television">

  இந்நிலையில் இன்றைய எபிசோடுக்கான புரமோவும் தற்போது வெளியாகியுள்ளது. கண்ணம்மா வீட்டில் தங்கி இருக்கும் பாரதி, குடித்து விட்டு வந்து அட்டகாசம் செய்கிறார். குடி போதையில் அம்மாவுக்கு ஃபோன் செய்து உளறுகிறார். கடைசியில் வாந்தியும் எடுத்து அட்டூழியம் செய்வது போல் புரமோ வெளியாகியுள்ளது. பாரதியின் இந்த செயலுக்கு கண்ணம்மா தண்டை தரபோவதாக கூறுகிறார். ஆனால் புரமோவை பார்த்த ரசிகர்கள், இந்த தண்டனை பாரதிக்கா? இல்லை உங்களை நம்பி சீரியல் பார்க்கும் எங்களுக்கா? என நக்கலாக கமெண்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Published by:Sreeja
  First published:

  Tags: Vijay tv