Home /News /entertainment /

பாரதி கண்ணம்மா: கஷ்டப்படுவது கண்ணம்மா மட்டுமில்லை நாங்களும் தான்!

பாரதி கண்ணம்மா: கஷ்டப்படுவது கண்ணம்மா மட்டுமில்லை நாங்களும் தான்!

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா (Bharathi Kannamma) சீரியலில் பழைய ஈர்ப்பு இல்லை என்பது மிக பெரிய குறையாக உள்ளது. இப்போது கதைக்களமும் போராடிக்க தொடங்கி விட்டது.

    பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மா படும் கஷடத்தை பார்த்து பாரதி கவலைக் கொள்கிறார். இந்த சீரியலை பார்க்கும் ரசிகர்களின் மைண்ட் வாய்ஸை நோட் செய்தால் அது அதைவிட கவலையாக இருக்கிறது. கண்ணம்மாவாக நடித்த ரோஷினியின் விலகலுக்கு பிறகு சீரியல் மிகப் பெரிய அடி வாங்கியது. இதை சரிசெய்ய சீரியல் குழு போராடி வருகிறது. ஆனாலும் முன்பு போல் பாரதி கண்ணம்மா சீரியல் இல்லை என்பது சீரியல் ரசிகர்களின் கருத்தாக உள்ள்து.

    விஜய் டிவியில் பாரதி கண்ணம்மா சீரியல் ஒளிப்பரப்ப தொடங்கிய நாளிலிருந்து மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. சின்னத்திரைக்கு புது முகங்களான அருண் பிரசாத், ரோஷினி, கண்மணி ஆகியோரை முன்னிலைப்படுத்தி இயக்குனர் சீரியலை தொடங்கினார். முக்கியமாக இந்த சீரியலில் மாமியார் சவுந்தர்யா ரோலுக்கு மிகப்பெரிய அளவில் வரவேற்பு கிடைத்தது. 1 வருடத்திற்கு பிறகு சீரியல் டாப் ரேட்டிங்கில் வர தொடங்கியது. அடுத்த சில மாதங்களில் விஜய் டிவி டாப் சீரியலான பாண்டியன் ஸ்டோர்ஸை ஓரங்கட்டி பாரதி கண்ணம்மா சீரியல் டி.ஆர்.பி ரேட்டிங்கில் முதலிடத்தை பிடித்தது.

    இதையும் படிங்க.. பாண்டியன் ஸ்டோர்ஸ் : பாத்ரூம் பிரச்சனையை வைத்தே சீரியல் ஓடிடும் போல!

    இப்படி சீரியல் உச்சத்தில் சென்று கொண்டிருந்த சமயத்தில் தான் வில்லி வெண்பா பிரசவத்திற்காக கேப் எடுத்து சென்றார். அடுத்த சில மாதங்களில் கண்ணம்மாவாக நடித்த ரோஷினியும் விலகி விட்டார். இதனால் சீரியல் அடி வாங்கியது.  சீரியலை பார்க்கும் ஆடியன்ஸ் எண்ணிக்கையும் கணிசமாக குறைந்தது. இதை சரிசெய்ய இயக்குனர் உடனடியாக புது கண்ணம்மாவை சீரியலில் இறக்கினார். வினுஷா தேவி கண்ணம்மா ரோலில் நடித்து வருகிறார். ஆரம்பத்தில் இவரின் நடிப்பு அதிகம் விமர்சிக்கப்பட்டாலும் இப்போது கதை மற்றும் ரசிகர்களுடன் வினுஷா ஒன்றிவிட்டார்.

    ஆனாலும் சீரியலில் பழைய ஈர்ப்பு இல்லை என்பது மிக பெரிய குறையாக உள்ளது. இப்போது கதைக்களமும் போராடிக்க தொடங்கி விட்டது. கோர்டு உத்தரவை மதித்து கண்ணம்மா வீட்டில் பாரதி தங்கி இருக்கிறார். இதனால் தினமும் பாரதிக்கும் - கண்ணம்மாவுக்கும் வீட்டில் சின்ன சின்ன சண்டை வருகிறது. இந்த 6 மாதத்தில் எப்படியாவது பாரதியையும் கண்ணம்மாவையும் சேர்த்து வைக்க நினைக்கிறார் சவுந்தர்யா. ஆனால் எத்தனை நாளுக்கு தான் இவர்களின் சண்டையை மட்டுமே பார்த்து கொண்டிருப்பது என்கின்றனர் ரசிகர்கள்.

    இதையும் படிங்க.. போதும் விஜய் டிவி.. ஜீ தமிழ் பக்கம் சென்ற நடிகை! என்ன காரணம்?

    கண்ணம்மா வீட்டில் மாவு அரைப்பது, அதை பார்த்து பாரதி வருத்தப்படுவது உடனே கண்ணம்மாவுக்கு உதவலாம் என பாரதி நினைப்பது, அவரின் மனசாட்சி வந்து தடுப்பது என இப்படியே 2 வாரமாக கதை நகர்ந்து கொண்டிருக்கிறது. இன்றைய எபிசோடில் கூட கண்ணம்மாவை பாரதி ஃபா;லோ செய்கிறார். கடைசியில் கண்ணம்மா வீடு வீடாக சென்று மாவு விற்பதை தெரிந்து கொண்டு அவருக்கு உதவலாம் என நினைக்கிறார். வழக்கம் போல் மனசாட்சி வந்து தடுக்க, பாரதி அப்படியே திரும்பி போகிறார். இதனால் தான் ரசிகர்கள் சீரியலில் கஷ்டப்படுவது கண்ணம்மா மட்டுமில்லை நாங்களும் தான் என்று நக்கலாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

    சீரியல் இயக்குனர் இதை சற்று கவனித்தால் நல்லா இருக்கும்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja Sreeja
    First published:

    Tags: Bharathi Kannama, TV Serial, Vijay tv

    அடுத்த செய்தி