லட்சுமி டைரியில் கண்ணம்மா ஃபோட்டோ.. பாரதி உண்மையை தெரிஞ்சிக்க வேண்டிய நேரம் வந்தாச்சி!

பாரதி கண்ணம்மா சீரியல்

லட்சுமியின் டைரியில் அம்மா என்று கண்ணம்மா ஃபோட்டோவும் ஃபோன் நம்பரும் இருக்கிறது.

 • Share this:
  பாரதி கண்ணம்மா சீரியலில் இன்று பாரதிக்கு கண்ணம்மாவின் மகள் தான் சவுந்தர்ய லட்சுமி என்ற உண்மை தெரிய போகுது.

  லட்சுமி வயிறு வலியால் துடிக்க அவளை தனது காரில் ஏற்றிக்கொண்டு மருத்துவமனை விரைகிறான் பாரதி. காரிலில் அப்பா வலிக்குது என துடிக்க வேண்டிய லட்சுமி ‘அங்கிள் அங்கிள்” என அழுகிறாள். அவளை சமாதானம் செய்துகொண்டே காரை ஓடிக்கொண்டு ஹாஸ்பிட்டல் செல்கிறான் பாரதி. இந்த நேரத்தில் தான் இயற்கை பிரசவம் பற்றி மனைவி அஞ்சலியிடம் எடுத்துரைக்கிறான் அகில்.

  விலங்குகளின் பிரசவ முறைகளை அவளிடம் கூறுகிறான். இந்த நேரத்தில் தான் பிரசவத்தை பற்றியும் தனக்குய் இருக்கும் பிரச்சனை பற்றியும் நினைத்து பயப்படுகிறாள் அஞ்சலி. அப்போது தான் அவளுக்கு நெஞ்சுவலி வருகிறது. மொத்த குடும்பமும் பதற பதற்றத்தில் அஞ்சலியை ஹாஸ்பிட்டலுக்கு கூடிட்டு போக முடிவு எடுக்கிறார்கள். அப்போது அழையா விருந்தாளியாக வீட்டிற்கு பாரதியை தேடி வருகிறாள் வில்லி வெண்பா. எப்படி தான் மூக்கு வேர்க்கும் என தெரியவில்லை என்று வெண்பாவை மனதில் திட்டுகிறான் அகில்.

  also read.. கண்ணீரில் சூப்பர் சிங்கர் மேடை.. SPB பாடலை பாடிய சித்ரா, பரத்!

  சவுந்தர்யா, வெண்பாவிடம் அஞ்சலிக்கு என்ன பிரச்சனை என்று பார்த்து சொல்லு என்கிறாள். ஆனால், அகில், ’அஞ்சலியை நல்ல டாக்டரிடம் கூடிட்டு போலாம் வெண்பா வேண்டாம்” என்று சண்டை போடுகிறான். ஆனாலும் அவசரத்தில் வேறு வழியில்லாததால் வெண்பாவே, அஞ்சலியை ரூமூக்கு அழைத்து சென்று செக் செய்கிறாள். இந்த பக்கம் சவுந்தர்யா, பாரதிக்கு ஃபோன் செய்கிறார், ஆனால் லட்சுமி வலியில் துடிப்பதால் ஃபோனை எடுக்காமல் காரில் மருத்துவமனைக்கு செல்கிறான் பாரதி.  அஞ்சலிக்கு நெஞ்சுவலி மாத்திரையைக் கொடுத்துவிட்டு அவளிடம் ஹெல்த் ரிப்போர்டைக் கேட்கிறாள் வெண்பா. ரிப்போர்டைக் காட்டினால் உண்மையெல்லாம் தெரிந்துவிடும் என பயப்படுகிறாள் அஞ்சலி. ஆனாலும் வெண்பா வற்புறுத்த ரிப்போர்டை காட்டும் அஞ்சலி, இந்த உண்மையை யாரிடமும் சொல்ல கூடாதுன்னு வெண்பாவிடம் சத்திய கேட்கிறாள். 8 வருடம் கழித்து குழந்தை பிறக்க போகிறது. இந்த நேரத்தில் கர்ப்பபை பிரச்சனை பற்ரி பேசினால் குழந்தையை கலைக்க நேரிடும், எனக்கு இந்த குழந்தை முக்கிய என அழுகிறாள். சதிக்காரி வெண்பா. அஞ்சலியின் இந்த பிரச்சனையை வருங்காலத்தில் யூஸ் செய்து கொள்ளலாம் என திட்டம் திட்டி சவுந்தர்யாவிடம் அஞ்சலிக்கு எந்த பிரச்சனையும் இல்லை என பொய் சொல்லிவிட்டு அங்கு இருந்து புறப்படுகிறாள்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  லட்சுமிக்கு ஃபுட் பாய்சன் ஆகியிருப்பதாக டாக்டர் செக் செய்து சொல்கிறார். உடனே, அவளின் பெற்றோர்களுக்கு இதை இன்ஃபார்ம் செய்ய வேண்டும் என நினைத்து லட்சுமியின் ஸ்கூல் டைரியை எடுக்கிறான் பாரதி..அங்கு தான் ட்விஸ்ட் காத்துக் கொண்டிருக்கிறது. லட்சுமியின் டைரியில் அம்மா என்று கண்ணம்மா ஃபோட்டோவும் ஃபோன் நம்பரும் இருக்கிறது. மீண்டும் ஒரு ஷாக்கில் நிற்கிறான் பாரதி..
  Published by:Sreeja Sreeja
  First published: