• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • தப்பு செஞ்ச அஞ்சலி... நல்லதை மட்டுமே செஞ்ச கண்ணம்மா! சீரியலில் இதெல்லாம் சகஜமப்பா

தப்பு செஞ்ச அஞ்சலி... நல்லதை மட்டுமே செஞ்ச கண்ணம்மா! சீரியலில் இதெல்லாம் சகஜமப்பா

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா சீரியலில் அஞ்சலிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இருவரின் உயிரையும் கண்ணம்மா காப்பாற்றினார்.

  • Share this:
    இல்லத்தரசிகளின் ஃபேவரட் சீரியல் லிஸ்டில் முதலிடத்தில் இருக்கும் விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியல் கடந்த சில வாரமாக தோய்வை சந்தித்துள்ளது. அதற்கு முக்கியமான காரணம் ரோஷினியின் விலகல். புதிய கண்ணம்மாவாக நடிக்கும் வினுஷாவை ரசிகர்கள் இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் சீரியல் டி.ஆர்.பியில் முதல் 5 இடங்களில் கூட பிடிக்கவில்லை. இந்நிலையில் சீரியல் கதைக்களத்தில் சில மாற்றங்களை நிகழ்த்தியுள்ளார் இயக்குனர்.

    கதைப்படி அஞ்சலி மாசமாக இருந்தார். ஆனால் அஞ்சலிக்கு குழந்தை பிறந்தால் அவரின் உயிருக்கு ஆபத்து என டாக்டர்கள் கூறி விட்டனர். இருந்தாலும் தனது உயிரை பணயம் வைத்து அஞ்சலி குழந்தையை சுமந்து வருகிறார். இந்த கட்டத்தில் தான் வில்லி வெண்பாவின் ரவுடி கும்பல் அஞ்சலியை கடத்தி குடோனில் கட்டிப்போட்டனர். அஞ்சலியை தேடி அகிலனும் கண்ணம்மாவும் ரோடு ரோடாக அலைகிறார்கள்.

    கண்ணம்மாவின் உதவியால் அகிலன், அஞ்சலி இருக்கும் இடத்தை கண்டுப்பிடிக்கிறார். அதுமட்டுமில்லை கண்ணம்மா தான் அஞ்சலியை காப்பாற்றி மருத்துவச்சி உதவி மூலம் பிரசவமும் பார்க்கிறார். அஞ்சலிக்கு ஆண் குழந்தை பிறக்கிறது. ஆனால் அதோடு அஞ்சலி மயங்கி விழுந்து விடுகிறார். இதனால் அஞ்சலி இறப்பது போல் கதைக்களம் மாறி விடுமோ என ரசிகர்கள் பயந்தனர். ஆனால் கண்ணம்மா உடனே ஆம்புலன்ஸை வரவழைத்து அஞ்சலி உயிரை காப்பாற்றுகிறார்.



    சீரியலின் ஆரம்பத்தில் இருந்தே அஞ்சலி, கண்ணம்மாவுக்கு பல தீமைகளை செய்து இருக்கிறார். கல்யாணத்தில் தொடங்கி, கர்ப்பமாக இருந்த வரை பல தொந்தரவுகளை  கொடுத்துள்ளார். ஆனால் அஞ்சலிக்கு ஒரு பிரச்சனை வந்தவுடனே முதல் ஆளாக நின்றது கண்ணம்மா தான்.

    கண்ணம்மாவின் அருமை தெரிந்தவுடன் அஞ்சலி திருந்திவிட்டார். இந்நிலையில் தான் அஞ்சலி உயிர் பிழைக்க காரணமாக இருந்த கண்ணம்மா கையில் குழந்தையை கொடுத்து வாங்குகிறார். மொத்த குடும்பமும் சந்தோஷத்தில் இருக்கின்றனர். இதில் ஹைலைட்டே பாரதியும் கண்ணம்மாவிடம் சண்டை போடாமல் அமைதியாக நிற்பது தான். அதுசரி, சீரியலில் கதாநாயகி நல்லதை மட்டும் தான் செய்வார் என்பது ஊருக்கே தெரிந்த கதை தான்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: