• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • முதல் நாளே அனல் பறக்கும் கோர்டு சீன்.. புதிய கண்ணம்மா நடிப்பை சோதிக்க திட்டமா?

முதல் நாளே அனல் பறக்கும் கோர்டு சீன்.. புதிய கண்ணம்மா நடிப்பை சோதிக்க திட்டமா?

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா

கண்ணம்மா விவாகரத்து வழக்கை சந்திக்க நீதிமன்றம் வருகிறார். பாரதி தனது தரப்பு நியாயத்தை சொல்கிறார்.

  • Share this:
    பாரதி கண்ணம்மா சீரியலின் இன்றைய புரமோவில் அனல் பறக்கும் கோர்டு சீன் தான் புதிய கண்ணம்மாவின் தொடக்கமாக அமைந்திருக்கிறது.

    விறுவிறுப்புடனும், பல திருப்பங்களுடனும் ஓடிக்கொண்டிருக்கும் பாரதி கண்ணம்மா சீரியலில் ரசிகர்களுக்கு கிடைத்த மிகப் பெரிய வருத்தம் என்னவென்றால் அது கண்ணம்மாவாக நடித்து வந்த ரோஷினி ஹரிபிரியனின் விலகல் தான். விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் சீரியல்களில் பாரதி கண்ணம்மா சீரியல் தான் டி.ஆர்.பியில் முதலிடத்தில் இருக்கும். இதற்கு முக்கிய காரணம் கண்ணம்மாவின் நடிப்பு தான். கண்ணம்மாவை தனது வீட்டு பெண்ணாகவே ரசிகர்கள் பார்க்க தொடங்கிவிட்டனர். இந்நிலையில் தான் சீரியலில் இருந்து விலகுவதாக கடந்த மாதம் அறிவித்திருந்தார் ரோஷினி. சீரியலில் கண்ணம்மாவாக தோன்றி ரசிகர்கள் மத்தியில் கண்ணம்மாவாகவே வாழும் நடிகை ரோஷினி ஹரிப்ரியன் சீரியலை விட்டு விலகுவதை ஏற்க முடியாது என ரசிகர்கள் மத்தியில் கருத்துக்களும் வெளியாகின.

    இந்நிலையில் அடுத்தது கண்ணம்மா ரோலில் யார் நடிப்பார்? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்தது. நக்‌ஷத்ரா, கேப்ரில்லா என பலரின் பெயர் அடிப்பட்டது கடைசியில் கண்ணம்மா போலவே இருக்கும் வினுஷா தேவி தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் ஷூட்டிங்கில் கலந்து கொண்ட புகைப்படங்களும் வெளியாகின. ரசிகர்களுக்கு இவரை கண்ணம்மாவாக உணர ரீவைண்ட் புரமோவையும் சீரியல் குழு வெளியிட்டு இருந்தது. கதைப்படி இப்போது சீரியலில் பாரதி கண்ணம்மாவிடம் விவாகரத்து கேட்டுள்ளார்.

    மகனை பெற்றெடுத்த பாரதி கண்ணம்மா வெண்பா - குவியும் வாழ்த்துகள்!

    இருவரின் விவாகரத்து வழக்கும் ஏற்றுக் கொள்ளப்பட்டு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த காட்சியில் தான் தான் புதிய கண்ணம்மாவான வினுஷாவின் அறிமுகமும் தொடங்குகிறது. அதுக்குறித்த புரமோ தான் தற்போது வெளியாகியுள்ளது.



    கண்ணம்மா விவாகரத்து வழக்கை சந்திக்க நீதிமன்றம் வருகிறார். பாரதி தனது தரப்பு நியாத்தை சொல்கிறான். பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் இந்த புரமோவில் வினுஷாவின் நடிப்பை பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக இருக்கின்றனர். முதல் அறிமுகத்திலே வினுஷாவின் முகம் ரசிகர்களுக்கு பதிய வேண்டும் என்பதற்காகவே இயக்குனர் இதுப்போன்ற காட்சியை வைத்து:ள்ளார் போல. கண்ணம்மாவாக ரசிகர்கள் மனதில் வினுஷா நிற்பாரா? என பொறுத்திருந்தான் பார்க்க வேண்டும்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: