பாரதி கண்ணம்மா சீரியலில் ஹேமா பற்றிய உண்மை பாரதிக்கு தெரிய போகிறது. இந்த பரபரப்பான ட்விஸ்ட் குறித்த புரமோ தற்போது வெளியாகியுள்ளது.
நீண்ட இடைவெளிக்கு பிறகு
பாரதி கண்ணம்மா சீரியலில் முக்கியமான ட்விஸ்டை கொடுத்து இருக்கிறார் இயக்குனர். அதாவது இத்தனை நாளாக ஹேமாவுக்கு தனது அம்மா யார்? என்ற சந்தேகம் வந்ததே இல்லை. ஆனால் சமையல் அம்மாவின் பெயர் கண்ணம்மா என்று தெரிந்த நாளிலிருந்து ஹேமாவுக்கு தனது அம்மாவை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய எண்ணம் வந்து விட்டது. அதே போல், பாரதி - கண்ணம்மாவுக்கு டைவர்ஸ் கொடுக்க போகும் விஷயமும் ஹேமாவுக்கு தெரிந்து விட்டதால் அவரை சமாளிப்பது பாரதிக்கு சிக்கலானது.
போட்டியில் இருந்து பாதியில் வெளியேறிய அஜய் - ஜெஸி ஜோடி.. என்ன காரணம்?
இப்படி இருக்கையில் தனது பிறந்த நாள் பரிசாக அம்மாவின் ஃபோட்டோவை கேட்கிறார் ஹேமா. பாரதியும் அதற்கு சரி சொல்லிவிட்டார். பாரதி யாரை அம்மாவாக காட்ட போகிறார் என தெரிந்து கொள்ள குடும்பத்தில் இருப்பவர்கள் ஆர்வமாக இருந்தனர். அதே நேரம் கண்ணம்மா, அந்த இடத்தில் வேற பெண்ணின் ஃபோட்டோ இருந்தால் கொலையே நடக்கும் என ஏற்கெனவே கூறி இருந்தார். இந்நிலையில் இன்றைய எபிசோடில் ரசிகர்களுக்கு ஏகப்பட்ட ட்விஸ்டுகள் காத்துக் கொண்டிருக்கின்றன.
செம்பருத்தி வில்லி நந்தினிக்கு என்ன நடந்தது? சீரியல் வெற்றி விழாவில் வெடித்த சர்ச்சை!
பாரதி ஃபோட்டோவுடன் வருகிறார். ஹேமாவும் ஆவலுடன் அதை பார்க்கிறார். அதில் இருப்பது பாரதி கல்லூரியில் காதலித்த ஹேமாவின் முகம். கண்ணம்மாவுக்கு அதிர்ச்சி தாங்கவில்லை. அதே நேரம் கோபமும் வருகிறது. இந்த நேரத்தில் தான் புரமோவில் காட்டிய அனைத்து காட்சிகளும் அரங்கேறவுள்ளது.
ஹேமா பற்றிய உண்மையை கண்ணம்மா போட்டுடைக்கிறார். தனக்கு பிறந்தது இரட்டை குழந்தைகள் என்பதையும் சொல்லி விடுகிறார். கண்ணம்மா சொல்வது அனைத்தும் உண்மை என்கிறார் சவுந்தர்யா. பாரதிக்கு பேரதிர்ச்சி.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.