விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பாரதி கண்ணம்மா தொடர் கூடிய விரைவில் முடிவுக்கு வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே போல் சீரியல் குழு இறுதி நாளன்று கேக் வெட்டிய கொண்டாடியதாகவும் புகைப்டம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஸ்டார் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்கள் என அனைத்து வகை நிகழ்ச்சிகளுக்கும் பெரும் ரசிகர் வட்டம் இருக்கிறது. இன்னும் சொல்ல போனால் ரியாலிட்டி ஷோக்களை வித்தியாசமான கான்செப்ட்டில் சுவாரசியமாக கொடுத்து ரசிகர்களுக்கு விருந்து படைப்பதில் முதலிடம் ஸ்டார் விஜய் டிவி-க்கு தான்.விஜய் டிவி-யில் சூப்பர் ஹிட் சீரியல்களில் ஒன்றாக இருந்து கொண்டிருக்கிறது பாரதி கண்ணம்மா. இந்த சீரியல் மக்களிடையே பிரபலமாக முக்கிய காரணம் இதில் நடிக்கும் நடிகர், நடிகைகள். முன்பு கண்ணம்மாவாக நடித்த நடிகை ரோஷினி ஹரிபிரியன் சீரியலில் இருந்து விலகினார்.
கர்ப்பிணி மனைவியான சீரியல் நடிகையை அடித்ததாக குற்றச்சாட்டு.. கைதாகிறாரா அரணவ்?
அதே போல் அகிலன், அஞ்சலி ரோலில் நடித்தவர்களும் மாறினர். பின்பு கண்ணம்மாவாக வினுஷா என் ட்ரி கொடுத்தார். அவரின் வருகைக்கு பின்பு சீரியலை ரசிகர்கள் மீண்டும் விறுவிறுப்புடன் பார்க்க தொடங்கினர். இந்த சீரியாலில் ஹீரோயினுக்கு அடுத்து முக்கியத்துவம் வாய்ந்த வில்லி வெண்பா ரோலில் நடிப்பவர் நடிகை மற்றும் விஜே-வான ஃபரீனா ஆசாத். இவருக்கும் ஏகப்பட்ட ஃபேன்ஸ் கூட்டம் உள்ளது.
கதைப்படி இப்போது வெண்பா, பாரதியை திருமணத்திற்கு சம்மதம் சொல்ல வைத்து விட்டார். அதே நேரம் ஹேமாவுக்கு பாரதி கொடுத்த புகைப்படத்தில் இருந்தது கண்ணம்மா இல்லை என்ற உண்மையும் தெரிந்து விட்டது. ஒருபக்கம் பாரதி DNA டெஸ்ட் எடுக்க முடிவு எடுத்து விட்டார். இதனால் சீரியல் கிளைமேக்ஸை எட்டி விட்டதா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. இந்நிலையில் பாரதி கண்ணம்மா சீரியல் குழு அண்மையில் கேக் வெட்டி கொண்டாடியதாக இணையத்தில் செய்திகள் உலா வருகின்றன. ஆனால் அந்த புகைப்படம் பழைய புகைப்படம் என்றும் அது செட்டில் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் கேக் வெட்டி கொண்டாடியது என்ற தகவலும் தற்போது கசிந்துள்ளது. எனவே பாரதி கண்ணம்மா தொடர் முடிவுக்கு வருவது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாதவரை சீரியல் தொடரும் என்பதே உண்மை.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Bharathi Kannama, TV Serial, Vijay tv