சீரியல் நடிகர் பிரவீன் தேவசகாயத்தின் அம்மா உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஸ்டார் விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல் பாரதி கண்ணம்மா. அருண் பிரசாத், வினுஷா தேவி இதில் முதன்மையான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். இந்த சீரியலில் கண்ணம்மாவிற்கு எதிரியான வெண்பா கேரக்டரில் நடித்து வருபவர் நடிகை ஃபரீனா ஆசாத்.
வெண்பாவுடன் சேர்ந்து கண்ணம்மாவிற்கு எதிராக பல சூழிச்சிகளை செய்த ஒரு கேரக்டர் துர்கா. தற்போது வெண்பாவுடன் சேர்ந்து சூழிச்சிகளை செய்து வரும் பணிப்பெண்ணின் இடத்தில் முன்பு துர்கா கதாபாத்திரம் இருந்தது.
ரவுடி கேரக்டரை சித்தரித்த துர்கா ரோல் சிறையில் இருந்து தப்பி வெண்பாவை பழி வாங்க வருவது போல எபிசோட்கள் ஒளிபரப்பானது. ஒருகட்டத்தில் ரவுடி துர்கா, டாக்டர் துர்காவாக மாறி வெண்பாவின் ஹாஸ்பிடலுக்கு எதிரில் புது ஹாஸ்பிடல் திறந்து அவருக்கு குடைச்சல் கொடுத்தது, கண்ணம்மாவிற்கு ஆதரவாக செயல்படுவது என சென்று கொண்டிருந்த நிலையில், கடந்த பல மாதங்களாக துர்கா என்ற கேரக்டர் என்ன ஆனது என்றே காட்டப்படவில்லை.
நாம் இருவர் நமக்கு இருவர் தாமரையின் வளைகாப்பு நிகழ்ச்சி - அட்டகாச படங்கள்!

பிரவீன் தேவசகாயம்
இந்த துர்கா என்ற கேரக்டரில் நடித்தவர் பிரவீன் ராஜ் தேவசகாயம். இவர் ஏற்கனவே விஜய் டிவி-யில் ஒளிபரப்பான ஈரமான ரோஜாவே சீரியலில் அழகர் என்ற கேரக்டரில் நடித்திருந்தார். தற்போது நாம் இருவர் நமக்கு இருவர் 2 சீரியலிலும் நடித்து வருகிறார். பிரவீனுக்கும் நந்தினி என்ற சீரியல் நடிகைக்கும் சமீபத்தில் தான் திருமணம் நடந்தது.
உங்கள் வார்த்தைகளுக்கு நன்றி தளபதி - பீஸ்ட் விஜய்யுடன் சிவாங்கி!
இந்நிலையில் பிரவீன் தனது அம்மாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. அதில் அவரது அம்மா உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது தெரிகிறது. ஆனால் உடலுக்கு என்னவானது என்பது குறித்து தெரியவில்லை.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.