Home /News /entertainment /

பாரதி கண்ணம்மா சீரியல் பிரபலத்திற்கு திடீர் திருமணம்.. குவியும் வாழ்த்துக்கள்!

பாரதி கண்ணம்மா சீரியல் பிரபலத்திற்கு திடீர் திருமணம்.. குவியும் வாழ்த்துக்கள்!

பாரதி கண்ணம்மா பிரபலம்

பாரதி கண்ணம்மா பிரபலம்

விஜய் டிவி சீரியல்களில் நடித்தவர்கள் என்பதால் இந்த திருமணம் காதல் திருமணமாக இருக்கும் என தெரிகிறது.

    ஸ்டார் விஜய் டிவி-யில் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பிரபல சீரியல் பாரதி கண்ணம்மா. திங்கள் - சனி இரவு 9 முதல் 9.30 வரை டெலிகாஸ்ட் ஆகி வரும் இந்த சீரியலின் சமீபத்திய எபிசோட்களில் அடுத்தடுத்து பல அதிரடி திருப்பங்கள் நிகழ்ந்து வந்தன. எல்லாவற்றுக்கும் மேலாக கண்ணம்மா கேரக்டரில் நடித்து வந்த நடிகை ரோஷினி ஹரிபிரியன் திடீரென சீரியலை விட்டு விலகினார். இதனை தொடர்ந்து தற்போது கண்ணம்மா கேரக்டரில் வினுஷா தேவி என்பவர் நடித்து வருகிறார்.

    சீரியலில் கண்ணம்மாவிற்கு எதிரியான வெண்பா கேரக்டரில் நடித்து வருகிறார் நடிகை ஃபரீனா ஆசாத். இவருக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்துள்ளதால், வெண்பா கேரக்டரை போலீசார் அரெஸ்ட் செய்து ஜெயிலில்அடைத்து உள்ளது போல காட்டப்பட்டு வருகிறது. இன்னும் சில வாரங்களில் நடிகை ஃபரீனா மீண்டும் பாரதி கண்ணம்மா சீரியலுக்கு திரும்பி வெண்பா கேரக்டரில் தொடர்வார் என்று கூறப்படுகிறது. வெண்பாவுடன் சேர்ந்து கண்ணம்மாவிற்கு எதிராக பல சூழிச்சிகளை செய்த ஒரு கேரக்டர் துர்கா.

    தற்போது வெண்பாவுடன் சேர்ந்து சூழிச்சிகளை செய்து வரும் வீட்டு பணிப்பெண்ணின் இடத்தில் முன்பு இருந்த கேரக்டர் தான் துர்கா.
    ரவுடி கேரக்டரை சித்தரித்த துர்கா ரோல் ஒரு கட்டத்தில் பல மாதங்களாக காட்டப்படாமலேயே இருந்தது. பின்னர் சிறையில் இருந்து தப்பி வெண்பாவை பழி வாங்க வருவது போல எபிசோட்கள் ஒளிபரப்பானது. ஒருகட்டத்தில் ரவுடி துர்கா, டாக்டர் துர்காவாக மாறி வெண்பாவின் ஹாஸ்பிடலுக்கு எதிரில் புது ஹாஸ்பிடல் திறந்து அவருக்கு குடைச்சல் கொடுத்தது, கண்ணம்மாவிற்கு ஆதரவாக செயல்படுவது என சென்று கொண்டிருந்த நிலையில் கடந்த பல மாதங்களாக துர்கா என்ற கேரக்டர் என்ன ஆனது என்றே காட்டப்படவில்லை.

    இந்த துர்கா என்ற கேரக்டரில் நடித்தவர் பிரவீன் ராஜ் தேவசகாயம். இவர் ஏற்கனவே விஜய் டிவி-யில் ஒளிபரப்பான ஈரமான ரோஜாவே சீரியலில் அழகர் என்ற கேரக்டரில் நடித்திருந்தார். இவர் தற்போது மற்றொரு சீரியல் பிரபலத்தை திருமணம் செய்து கொண்டுள்ளார். ராஜா ராணி சீசன் 1-ல் நந்தினி என்ற முக்கிய ரோலில் நடித்திருந்த நடிகை ஐஸ்வர்யாவை பிரவீன் ராஜ் திருமணம் செய்து கொண்டுள்ளார்.

    பிரவீனின் திருமண வரவேற்பு


    தற்போது இவர்களது ரிசப்ஷன் போட்டோ மற்றும் வீடியோக்கள் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன. இருவருமே விஜய் டிவி சீரியல்களில் நடித்தவர்கள் என்பதால் இந்த திருமணம் காதல் திருமணமாக இருக்கும் என தெரிகிறது. இந்நிலையில் புதிதாக திருமணமாகி இருக்கும் பிரவீன் - ஐஸ்வர்யா ஜோடிக்கு ரசிகர்கள் மற்றும் சக கலைஞர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja Sreeja
    First published:

    Tags: Vijay tv

    அடுத்த செய்தி